Sunday, 3 February 2019


போராட்டங்கள் ஓய்வதில்லை…

BSNL நிறுவன வளர்ச்சிக்காக…
BSNL ஊழியர்களின் உரிமைகளுக்காக…

BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்
பிப்ரவரி 18 முதல் 20 வரை
நாடு தழுவிய மூன்று நாள்
தொடர் வேலைநிறுத்தம்…

கோரிக்கைகள்

மத்திய அரசே… DOT நிர்வாகமே…

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்…
BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்கிடு…
BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் செய்திடு…
BSNL ஊழியர்களின் ஓய்வூதியப்பங்களிப்பை முறைப்படுத்து…
BSNL ஊழியர்களின் 2வது ஊதியமாற்ற முரண்பாடுகளை அகற்று…
BSNL செல்கோபுரங்கள் பராமரிப்பைத் தனியாருக்கு விடாதே…
BSNL நிறுவனத்திற்கு அனைத்து சொத்துக்களையும் மாற்றிக்கொடு…
BSNL சொத்துப் பராமரிப்புக் கொள்கைக்கு  அனுமதி வழங்கு…
BSNL உருவாகும்போது அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்று…
BSNL அவசரத்தேவைகளுக்கு வங்கிக்கடன் வாங்கிட அனுமதி வழங்கு…
BSNL இயக்குநர் காலியிடங்களை நிரப்பு…
BSNL நிதி ஆதாரத்தை உறுதி செய்…
  
இயக்கங்கள்
அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆதரவு கோருதல்…
11/02/2019 முதல் நாடுதழுவிய தெருமுனைப்பிரச்சாரங்கள்
மாநிலம் மற்றும் மாவட்ட மட்டங்களில் பத்திரிக்கை சந்திப்புக்கள்

பிப்ரவரி 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் 
தொடர் வேலை நிறுத்தம்… 


தோழர்களே…
BSNL நிறுவனத்திற்கும்…
BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும்
தொடர்ந்து வஞ்சனை செய்யும்..  
மத்திய அரசையும்… DOT நிர்வாகத்தையும்
கண்டித்து ஒன்றிணைந்து களம் காண்போம்…
ஒத்துக்கொண்ட பிரச்சினைகள் தீர்வில்கூட
இழுத்தடிக்கும் அநியாயம் தடுப்போம்…

போராடாமல் உரிமையில்லை…
போராடாமல் உயர்வில்லை…
பொறுப்பற்ற தேசத்தில்… என்றும்
போராட்டங்கள் ஓய்வதில்லை…
அணி திரள்வீர் தோழர்களே….

No comments:

Post a Comment