Monday 1 April 2019


துயர் துடைப்பீர்.. தோள் கொடுப்பீர்…

நிரந்தர TM ஊழியர்களே இல்லாத 
தொண்டி தொலைபேசி நிலையத்தில் ஒப்பந்த ஊழியராய் 
ஒப்பற்ற பணி செய்தவர் தோழர்.மணிகண்டன்.
ஊதியம் குறைவு… உழைப்பு அதிகம்…
ஆற்றல் அதிகம்… அர்ப்பணிப்பு அதிகம்…
அத்தகைய மணிகண்டன் 16/03/2019 அன்று
சாலைவிபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மூன்று சிறுபிள்ளைகளோடு இளம்வயதில்
தன் மனைவியைத் தவிக்க விட்டுச் சென்றுள்ளார்.

 நமது BSNLலில் அதிகம் சுரண்டப்படும் வர்க்கம் ஒப்பந்த ஊழியர்களே.
உழைக்கும் போதும்  அவர்கள் சுரண்டப்படுகின்றார்கள்.
உயிர் நீக்கும்போதும் சுரண்டப்படுகின்றார்கள்.  
எதிர்பாராத விதமாக ஒப்பந்த ஊழியர்கள் எவரேனும் உயிர் நீத்தால்
அவரது குடும்பம் நிர்க்கதியாக நிற்கும் சூழலே நிலவுகிறது.
தொடர்ந்த தொழிற்சங்க அழுத்தத்தால் தற்போது அவர்களது
உரிமையான EPF மற்றும் ESI பிடித்தங்களை முறைப்படுத்தியுள்ளோம்.
சட்டரீதியாக கிடைக்கவேண்டிய நிவாரணங்கள் கிடைப்பதற்கு
உரிய நடவடிக்கை விரைந்து எடுப்பதாக ஒப்பந்தக்காரர் உறுதி அளித்துள்ளார். ஆனாலும் உயிரிழந்த தோழர் மணிகண்டன் 
குடும்பம் படும் துன்பம் சொல்லி மாளாது.

எனவே உயிரிழந்த தோழர் மணிகண்டன் குடும்பத்தின்
கண்ணீர்  துடைக்கும் கடமை நம்மைச்சார்ந்தது.
தோழர் ராஜ்குமார் SDE உடனடி நிவாரணம் அளித்து
நிவாரண நிதிப் பங்களிப்பைத் துவக்கி வைத்துள்ளார்.
அவரையொட்டி காரைக்குடிப் பகுதி தோழர்கள்
தங்களது பங்களிப்பைச் செய்துள்ளார்கள்.
இராமநாதபுரம், பரமக்குடி மற்றும் சிவகங்கைப்பகுதி 
தோழர்களும் தங்களது பங்களிப்பை செய்து
தோழர் மணிகண்டன் குடும்பத்திற்கு
நிவாரணம் அளித்திட அன்புடன் வேண்டுகின்றோம்.

NFTE கிளைச்செயலர்களும் NFTCW கிளைச்செயலர்களும்
கூடுதல் கவனம் செலுத்திட வேண்டுகின்றோம்.
------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு : தோழர். லால்பகதூர் -  94434 97050

No comments:

Post a Comment