Thursday 4 April 2019


ஓய்வூதிய மேலாண்மைத்திட்டம்
C P M
COMPREHENSIVE PENSION MANAGEMENT SYSTEM

2019 பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்ற தோழர்கள்
தங்களது பிப்ரவரி மாதக் கடைசிச் சம்பளத்தை
மார்ச் 15 அன்றுதான் பெறக்கூடிய அவலம் அரங்கேறியது….
ஆனால் பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்ற அதே தோழர்கள்
தங்களது மார்ச் மாத ஓய்வூதியத்தை
ஏப்ரல் 2 அன்றே பெற்றுவிட்டார்கள் என்பது
மிகவும் மகிழ்வுக்குரிய செய்தியாகும்.

ஓய்வூதியர்களுக்கான DOTயின் புதிய திட்டமான SAMPANN
29/12/2018 அன்று பாரதப்பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது.
2019 பிப்ரவரி மாதம் ஓய்வுபெற்றவர்களுக்கு அது அமுலாகியுள்ளது.
இத்திட்டத்தில் BSNL ஓய்வூதியர்களுக்கு
நேரடியாக DOT ஓய்வூதியத்தைப் பட்டுவாடா செய்கிறது.
ஓய்வூதியர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.
அவர்களுக்கு USER ID என்னும் உபயோகிப்பாளர்
 அடையாள அனுமதி வழங்கப்படுகின்றது.


PENSION PAYMENT ORDER என்னும்
ஓய்வூதிய உத்திரவுப் புத்தகம் பெற வங்கிகளில்
ஓய்வூதியர்கள் காத்திருக்க அவசியமில்லை.
 படிப்படியாக இத்திட்டம் அனைத்து 
ஓய்வூதியர்களுக்கும் அமுல்படுத்தப்படும்.

ஆனால் அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியம் பெற
விரும்பும் தோழர்களுக்கு இத்திட்டத்தில் சிக்கல் நீடிக்கின்றது.
எனவே ஓய்வு பெறும் தோழர்கள் தங்களது ஓய்வூதியக் கணக்கை
ஏதேனும் பொதுத்துறை வங்கிகளில் துவக்குமாறு
DOT அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒப்பந்த ஊழியர்களாகட்டும்… நிரந்தர ஊழியர்களாகட்டும்
இப்போதெல்லாம் ஊதியம் எப்போது வரும்
என்று எதிர்பார்க்கும் காலமாகிவிட்டது.

ஆனால் ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியத்தை
ஒருநாள் கூட தாமதமின்றி உடனடியாகப் பெறும் நிலை
உருவானது கண்டு நாம் பெருமை கொள்வோம்…

புதிய திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து
இத்திட்டத்தை மேலும் செழுமைப்படுத்த
ஓய்வூதியர் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன…

No comments:

Post a Comment