புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய
2022
ஆங்கிலப் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
கிளைக்கூட்டங்கள்
இராமநாதபுரம் வருவாய் மாவட்டக்கிளை
30/12/2021 – வியாழன்
– மாலை 04.00 மணி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
தலைமை : தோழர். A. தமிழரசன்
– கிளைத்தலைவர்
-------------------------------------
பங்கேற்பு : தோழர்கள்
S. சதீஷ் பாலாஜி – கிளைச்செயலர்
R. முருகேசன் – கிளைப்பொருளர்
A.ஜேம்ஸ்வாலண்ட்ராயன் – மாவட்ட உதவித்தலைவர்
V. சுப்பிரமணியன் – மாவட்டத்தலைவர்
சிவகங்கை வருவாய் மாவட்டக்கிளை
30/12/2021 – வியாழன்
– மாலை 04.00 மணி
சங்க அலுவலகம் – காரைக்குடி
தலைமை : தோழர். R. இரஞ்சித்
குமார் – கிளைத்தலைவர்
-------------------------------------
பங்கேற்பு : தோழர்கள்
M. ஆரோக்கியதாஸ் – கிளைச்செயலர்
N. ஜெகன் – இணைச்செயலர்
L. பாண்டியம்மாள்
– கிளைப்பொருளர்
J. பங்கஜ்குமார்
– மாவட்டப்பொருளர்
B. முருகன் – மாவட்டச்செயலர்
ஆய்படு பொருள்
மாநில மாநாடு
தலமட்டப்பிரச்சினைகள்
இன்ன பிற...
தோழர்களே... வருக...
அய்யர் என்னும்
அணையா விளக்கு
டிசம்பர்
- 23
தோழர்.
ச.வெங்கடேசன்
நினைவு தினம்
வழிகளைத்
திறந்தாய்...
வலிகளைத் தீர்த்தாய்...
பழிகளைத்
துடைத்தாய்...
விழிகளில் நிறைந்தாய்...
இதயத்தில் உறைந்தாய்..
இருள்தனை போக்கினாய்..
ஒளிதனை
பாய்ச்சினாய்...
தெளிவுதனை வளர்த்தாய்...
நீயே
...
என்றும்...
எந்தாய்....
வணங்குகிறோம்....
வழி
செல்கிறோம்...
புகழஞ்சலிக்
கூட்டம்
NFTE
சங்க அலுவலகம் - காரைக்குடி
செயல்தலைவர்
– AIBSNLPWA
பங்கேற்பு : தோழர்கள்
பழ.
இராமச்சந்திரன் – AITUC
ந.
நாகேஸ்வரன் – AIBSNLPWA
இரா.
பூபதி – AIBSNLPWA
க.
சுந்தரராஜன் - AIBSNLPWA
ப.
முருகன் – NFTE
ம.
ஆரோக்கியதாஸ் – NFTE
நா.
ஜெகன் - NFTE
வழக்கறிஞர்
வி.ச.மணிபாரதி
காந்திமதி
வெங்கடேசன்
தொழிற்சங்க
ஆசான்
தோழர்
அய்யர் புகழ் போற்றுக....
ஒப்பந்த ஊழியர் விடுபட்ட சம்பளம்
தோழர்களே....
நமது TMTCLU ஒப்பந்த
ஊழியர்கள் சங்கத்தின் முயற்சியால் வழக்குமன்ற முடிவின்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள
நிலுவை வழங்கப்பட்டது நாம் அறிந்ததே.
இன்னும் தமிழகம் முழுவதும்
380 தோழர்களுக்கு ரூ. 33,72,477/= சம்பளப் பாக்கி உள்ளது.
அந்த விடுபட்ட ஊழியர்கள்
தங்களது தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை அணுகி தங்களது சம்பளப்பாக்கியைப் பெறுவதற்கு உரிய
ஆதாரங்களை சமர்ப்பிக்கவும்.
காரைக்குடியில் இன்னும்
23 தோழர்களுக்கு சம்பளப்பாக்கி உள்ளது. அவர்கள் இன்று 23/12/2021 மதுரை சொக்கிகுளத்தில்
அமைந்துள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவகத்திற்கு உடனடியாக கீழ்க்கண்ட ஆதாரங்களோடு நேரில்
வரவேண்டும்.
👉ஆதார் அட்டை
👉வங்கி சேமிப்பு புத்தகம்.
இந்த வாய்ப்பே இறுதியானது.
தோழர்கள் தவறாமல் மதுரை தொழிலாளர்
ஆணையர் அலுவகத்திற்கு நேரில் வரவும்.
நமது முன்னணித் தோழர்கள்
கவனம் செலுத்தவும்.
2015 முதல் 2020 வரையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற
குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக,
வண்டலூரை சேர்ந்த சி.பிரபாகர் என்பவர்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார்.
அவருக்குக் கடந்த 28/07/2021 அன்று சமூக நலத்துறையிடம்
இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தருமபுரியில் 902 திருமணங்கள்...
திண்டுக்கல் - 683, கரூர் - 402, நாமக்கல் - 449, பெரம்பலூர் - 674,
சேலம் - 720, தேனி - 734, திருவண்ணாமலை - 712, அரியலூர் - 82
எனக்குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகப் பதிவாகியுள்ளது.
இதில் குழந்தைத் திருமணச் சட்டத்தின்படி
586 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
இதே காலகட்டத்தில் 11,553 குழந்தைத் திருமணங்கள்
தடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமண தடைச்சட்டங்கள்
நடைமுறையில் இருந்தாலும்...
ஆங்காங்கே அவை தங்கு
தடையின்றி
நடந்து வருவது மிகப்பெரும் அவமானமாகும்.
இதன் தொடர்ச்சியாக....
தற்போது....
ஜெயங்கொண்டம்
அருகே உள்ள
பெரிய கருக்கை கிராமத்தைச் சேர்ந்த
அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரியும் ஒருவர்
ஏற்கெனவே மூன்று மனைவிகள் இருந்தும்
மீண்டும் ஒரு சிறுமியோடு
நான்காவது திருமணம் செய்துள்ளார்.
இவருக்கு வாரிசு இல்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி எட்டாம் வகுப்பு
படித்து வந்த தனது மகளை அவரது தாயே
அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்தத் திருமணமானது, சிறுமியின் தாய்
முன்னிலையில் கோயிலில் நடைபெற்றுள்ளது.
வறுமையே காரணம் என்று
கூறப்படுகின்றது.
இந்தத் திருமணம் தொடர்பாக அரியலூர் மாவட்ட
குழந்தைகள் நல அலுவலகத்துக்குத் தகவல் கிடைக்கவே,
தற்போது பேருந்து நடத்துனரும், சிறுமியின் தாயாரும்
போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சிறுமி நான்கு மாத கர்ப்பமாக உள்ளதால்
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண்விடுதலைக்கு வித்திட்ட
பாரதி பிறந்த மண்ணில்....
பெண்விடுதலைக்கு உரமிட்ட
பெரியார் மண்ணில்....
குழந்தைத் திருமணங்கள்
அரங்கேறுவதும்...
13 வயது பெண் குழந்தை
தன் வயிற்றில் குழந்தையைச்
சுமப்பதுவும்...
மாபெரும் தேசிய அவமானம்...
ஊதியக்குழு பேச்சுவார்த்தை
இன்று 03/12/2021 டெல்லியில் 3வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்குழு கூடி விவாதித்தது.
நிர்வாகத் தரப்பில் பல்வேறு
விவரங்கள்
POWER POINT முறையில்
ஊழியர் தரப்பிற்கு எடுத்துரைக்கப்பட்டது.
கீழ்க்கண்ட விவரங்கள்
நிர்வாகத்தால் அளிக்கப்பட்டன.
-------------------------------------------
தற்போதைய பணியில் உள்ள
ஊழியர்
எண்ணிக்கை மொத்தம்
33,048.
இதில் DOT ஊழியர்கள் 18,553.
BSNL ஊழியர்கள்
14495.
கீழ்க்கண்ட எண்ணிக்கையில்
ஊழியர்கள் தேக்கநிலையில்
உள்ளனர்.
தேக்கநிலை 1 – 2134 ஊழியர்கள்
தேக்கநிலை 2 – 2351 ஊழியர்கள்
தேக்கநிலை 3 – 1938 ஊழியர்கள்
சம்பளத்தின் அதிகபட்ச
நிலையில்
At MAXIMUM Stage 2784
ஊழியர்கள்
மொத்தம் தேக்கநிலையால்
பாதிப்பு அடைந்த ஊழியர்கள்
9207.
தேக்கநிலையால் பாதிப்பு
அடைந்து
ஆண்டு உயர்வுத்தொகையை
இழந்த ஊழியர்கள்
தற்போது மீண்டும் அடைவார்கள்.
பூஜ்ய நிர்ணய நிலையிலும் கூட
இது போன்ற ஊழியர்கள்
பணப்பலனை அடைவார்கள்.
BSNL நேரடி ஊழியர்கள்
12 சத EPF பங்களிப்பைப் பெறுவார்கள்.
புதிய சம்பள விகித மாற்றத்தால்
ஓய்வூதியப் பங்களிப்பு
2.6 மடங்கு உயரும் சூழல் உள்ளது.
எனவே ஏற்கனவே பேச்சுவார்த்தை
நடத்தப்பட்டு
ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பள
விகிதங்களை
மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
ஊழியர் தரப்பு நிர்வாகத்தின்
இந்த திட்டத்திற்கு
ஊழியர் தரப்புக் கடுமையாக
தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
மேலும் ஏற்கனவே பேசியபடி
5 சத ஊதிய நிர்ணயப்பலனோடு
சம்பள மாற்றங்களை அமுல்படுத்த
வேண்டும்
என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அடுத்த கூட்டத்தில் மேலும்
விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இரங்கல்
NFTE தமிழ் மாநிலச்செயலர்
தோழர்.நடராஜன் அவர்களின்
இளைய சகோதரர்
திரு.சுந்தரம்
அவர்கள்
இன்று 01/12/2021 உடல்நலக்குறைவால்
திருவாரூரில் அகால மரணமடைந்தார்.
நமது ஆழ்ந்த இரங்கலை
உரித்தாக்குகின்றோம்.
சகோதரனைப் பிரிந்த
தோழர்
நடராஜன் அவர்களின்
துயரத்தில் பங்கு கொள்கின்றோம்.
-------------------------------------------
நல்லடக்கம் (02/12/2021 ) திருவாரூரில் நடைபெறும்.