Friday 3 December 2021

 ஊதியக்குழு பேச்சுவார்த்தை

இன்று 03/12/2021 டெல்லியில் 3வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்குழு கூடி விவாதித்தது.

நிர்வாகத் தரப்பில் பல்வேறு விவரங்கள்

POWER POINT முறையில் ஊழியர் தரப்பிற்கு எடுத்துரைக்கப்பட்டது.

கீழ்க்கண்ட விவரங்கள் நிர்வாகத்தால் அளிக்கப்பட்டன.

-------------------------------------------

தற்போதைய பணியில் உள்ள ஊழியர்

எண்ணிக்கை மொத்தம் 33,048.

இதில் DOT  ஊழியர்கள் 18,553.

BSNL ஊழியர்கள் 14495.

கீழ்க்கண்ட எண்ணிக்கையில்

ஊழியர்கள் தேக்கநிலையில் உள்ளனர்.

தேக்கநிலை 1 – 2134 ஊழியர்கள்

தேக்கநிலை 2 – 2351 ஊழியர்கள்

தேக்கநிலை 3 – 1938 ஊழியர்கள்

சம்பளத்தின் அதிகபட்ச நிலையில்

At MAXIMUM Stage 2784 ஊழியர்கள்

மொத்தம் தேக்கநிலையால்

பாதிப்பு அடைந்த ஊழியர்கள் 9207.

தேக்கநிலையால் பாதிப்பு அடைந்து

ஆண்டு உயர்வுத்தொகையை இழந்த ஊழியர்கள்

தற்போது மீண்டும் அடைவார்கள்.  

பூஜ்ய  நிர்ணய நிலையிலும் கூட

இது போன்ற ஊழியர்கள் பணப்பலனை அடைவார்கள்.

BSNL நேரடி ஊழியர்கள் 12 சத EPF பங்களிப்பைப் பெறுவார்கள்.

புதிய சம்பள விகித  மாற்றத்தால்

ஓய்வூதியப் பங்களிப்பு 2.6 மடங்கு உயரும் சூழல் உள்ளது.

எனவே ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு

ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பள விகிதங்களை

மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

ஊழியர் தரப்பு நிர்வாகத்தின் இந்த திட்டத்திற்கு

ஊழியர் தரப்புக் கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே பேசியபடி

5 சத ஊதிய நிர்ணயப்பலனோடு

சம்பள மாற்றங்களை அமுல்படுத்த வேண்டும்

என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

அடுத்த கூட்டத்தில் மேலும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

No comments:

Post a Comment