Tuesday 14 December 2021

 கொடுமையின் உச்சம் 

2015 முதல் 2020 வரையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற

குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக,

வண்டலூரை சேர்ந்த சி.பிரபாகர் என்பவர்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார்.

அவருக்குக் கடந்த 28/07/2021 அன்று சமூக நலத்துறையிடம்

இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி  தருமபுரியில் 902 திருமணங்கள்...

திண்டுக்கல் - 683, கரூர் - 402, நாமக்கல் - 449, பெரம்பலூர் - 674,

சேலம் - 720, தேனி - 734, திருவண்ணாமலை - 712, அரியலூர் - 82

எனக்குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகப் பதிவாகியுள்ளது. 

இதில் குழந்தைத் திருமணச் சட்டத்தின்படி

586 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்

இதே காலகட்டத்தில் 11,553 குழந்தைத் திருமணங்கள்

தடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குழந்தைத் திருமண தடைச்சட்டங்கள்

நடைமுறையில் இருந்தாலும்...

ஆங்காங்கே அவை தங்கு தடையின்றி

நடந்து வருவது மிகப்பெரும் அவமானமாகும். 

இதன் தொடர்ச்சியாக.... தற்போது....

ஜெயங்கொண்டம் அருகே உள்ள

பெரிய கருக்கை கிராமத்தைச் சேர்ந்த

அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரியும் ஒருவர்

ஏற்கெனவே மூன்று மனைவிகள் இருந்தும்

மீண்டும் ஒரு சிறுமியோடு

நான்காவது திருமணம் செய்துள்ளார்.

இவருக்கு வாரிசு இல்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி எட்டாம் வகுப்பு

படித்து வந்த தனது மகளை அவரது தாயே

அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்தத் திருமணமானது, சிறுமியின் தாய்  

முன்னிலையில் கோயிலில் நடைபெற்றுள்ளது.

வறுமையே காரணம் என்று கூறப்படுகின்றது.

 

இந்தத் திருமணம் தொடர்பாக  அரியலூர் மாவட்ட

குழந்தைகள் நல அலுவலகத்துக்குத் தகவல் கிடைக்கவே,

தற்போது  பேருந்து நடத்துனரும், சிறுமியின் தாயாரும்

போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சிறுமி நான்கு மாத கர்ப்பமாக உள்ளதால்

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

பெண்விடுதலைக்கு வித்திட்ட பாரதி பிறந்த மண்ணில்....

பெண்விடுதலைக்கு உரமிட்ட பெரியார் மண்ணில்....

குழந்தைத் திருமணங்கள் அரங்கேறுவதும்...

13 வயது பெண் குழந்தை

தன் வயிற்றில் குழந்தையைச் சுமப்பதுவும்...

மாபெரும் தேசிய அவமானம்...

No comments:

Post a Comment