உரிமைக்குரல் எழுப்பிய
ஒன்றுபட்ட தர்ணா
JAC கூட்டு நடவடிக்கைக்குழு அறைகூவலின்படி காரைக்குடி மாவட்டத்தில் NFTE - BSNLEU சங்கங்கள் இணைந்த தர்ணா போராட்டம் காரைக்குடி பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில்
23/09/2014 அன்று சிறப்பாக நடைபெற்றது.
NFTE மாவட்டத்தலைவர் தோழர். முருகன், BSNLEU கிளைத்தலைவர் தோழர். மகாலிங்கம் ஆகியோர் கூட்டுத்தலைமையேற்றனர். BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன், NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச்செயலர்கள் தோழர்கள்.முருகன், சுப்பிரமணி, AIBSNLEA மாவட்டச்செயலர் தோழர்.மோகன்தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிளைச்செயலர்களும், முன்னணித்தோழர்களும் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். ஒப்பந்த ஊழியர்களும்,
ஓய்வு பெற்ற ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வரும் 30/09/2014 நடைபெறவுள்ள 2 மணி நேர வெளிநடப்பு போராட்டத்தை வெற்றிகரமாக்கிட தோழர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.
JACயில் கலந்து கொள்ள FNTO சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தோழர்.சுபேதார் அலிகான் நன்றியுரை நிகழ்த்த ஊழியர்களின் உரிமைக்குரல் எழுப்பி தர்ணா இனிதே முடிவுற்றது.
No comments:
Post a Comment