Friday, 26 February 2016

மத்திய செயற்குழு 

மாவட்டச்செயலர்கள் பங்கேற்கும் 
7வது உறுப்பினர் சரிபார்ப்பு 
சிறப்பு மத்திய செயற்குழு 
பாட்னா - மார்ச் 1-2
--------------------------------------------------------------------------------
காரைக்குடி மாவட்டத்தின் சார்பாக மத்திய செயற்குழுவில்  
தோழர்கள்.வெ.மாரி மற்றும் பா.லால் பகதூர் 
ஆகியோர் கலந்து கொள்வார்கள். 
நமது தோழர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பாக 
தோழர்.சுபேதார் அலிகான் அவர்களைத் தொடர்பு கொள்ளவும். 
 அலைபேசி: 9486448333 சங்க அலுவலகம்: 04565 225027
வாழ்க..  வளமுடன்.. நலமுடன்.. 
காரைக்குடி துணைப்பொதுமேலாளர் (நிதி)
 திரு. N.சந்திரசேகரன் அவர்களுக்கு
நமது மூத்த தோழர்.முருகன் அவர்கள்
பொன்னாடை போர்த்தும் காட்சி...
உடன் பொதுமேலாளர் திரு..இராஜு  அவர்கள்  
29/02/2016 அன்று பணி நிறைவு பெறும் 
காரைக்குடி மாவட்ட மண்ணின் மைந்தர்..
வங்கக்கடலோரம் பிறந்த அமைதிக்கடல்.. 
அடக்கத்தின் அடையாளம்...
நேர்மையின் சின்னம் 
திரு.N.சந்திரசேகரன் 
துணைப்பொது மேலாளர் (நிதி)

சிவகங்கையின் சீர்மிகு தோழர்.
தந்தி காத்த தளபதி 
P.பன்னீர்செல்வம்
SR.TOA 
ஆகியோரது பணி நிறைவுக்காலம் 
சிறப்புடனும் அமைதியுடனும் 
விளங்க வாழ்த்துகின்றோம்.

Thursday, 25 February 2016

தொடரும் இழப்புக்கள்..

சமீபத்தில் பணி நிறைவு பெற்ற நமது தோழர் ஒருவர் 
நம்மைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 
அவருடைய   ஓய்வூதியம் நாம் கணக்கிட்டுக் கொடுத்த 
தொகையளவு வராமல் குறைவாக வந்துள்ளதாகக் கூறினார். 
மேலும் அவர் " ஓய்வூதியக்கணக்குப் போட உனக்குத் தெரியுமா? 
என்றும் சூடாகக் கேள்வி கேட்டார்.

ஓய்வூதியக்கணக்கீடு ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. 
எனவே கணக்கீட்டில் தவறுக்கு வாய்ப்பில்லை. 
எனவே அவரது வார்த்தையைக் கேட்டு நாம் கோபம் கொள்ளவில்லை.  இருந்த போதும் விளக்கம் பெறுவதற்காக  
DOT CELLஐத் தொடர்பு கொண்டோம். DOT CELL அதிகாரிகள் 
சொன்ன விளக்கம்தான் நமக்கு கோபத்தைத் தூண்டியது.

சம்பந்தப்பட்ட ஊழியர் TELECOM MECHANIC  பயிற்சி முடித்த பின் உடனடியாக TM பதவியில் அமர்த்தப்படவில்லையென்றும்  01/10/2000க்குப்பின் அவருக்கு LINE MAN சம்பள விகிதத்தில் ஒரு ஆண்டு உயர்வுத்தொகையுடன் சம்பள நிர்ணயம் செய்யப்பட்டு அதன் பின் TM ஆகப் பதவி உயர்வு செய்யப்பட்டதாகவும் கூறினார்கள். 

பயிற்சி முடித்து TM காலியிடங்கள்  இல்லாததால் காத்திருந்த தோழர்களுக்கு  தோழர் குப்தா ஏற்படுத்திக் கொடுத்த ஆறுதல் பரிசுதான் இந்த LINEMAN சம்பள விகித நிர்ணயம். இதில் DOTCELLக்கு என்ன வருத்தம் என்று அவர்களை வினவினோம். அவர்கள் சொன்னார்கள் எங்களுக்கு ஒன்றும் இதில் பிரச்சினை இல்லை. 

" NEPP என்னும் நாலுகட்டப்பதவி உயர்வு உடன்பாட்டில் 01/10/2000க்குப்பின் ஊழியர்கள் முந்தைய OTBP/BCR பதவி உயர்வு   அல்லது NEPP என்னும் நாலுகட்டப்பதவி உயர்வு இவற்றில் ஒன்றில்தான் பதவி உயர்வு பெற வேண்டும். LINE MAN சம்பள விகிதத்தில் செய்யப்பட்ட நிர்ணயம் என்பது இவையிரண்டிலும் பொருந்தாது. 
எனவே நாங்கள் இதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. 
இதை நீங்கள் எங்களிடம் வாதம் செய்வதை விட நாலுகட்டப் பதவி உயர்வு உடன்பாடு போட்டவர்களிடம் போய்க் கேளுங்கள் " என்று சொல்லி விட்டுத் தொலைபேசியைத் துண்டித்து விட்டார்கள். 

தோழர்களே...
இப்பிரச்சினை நாடு முழுவதுமுள்ள நமது TM தோழர்களைப் பாதிக்கும். ஓய்வூதியம் குறைவது மட்டுமல்ல... 
கடந்த காலத்திற்கு சம்பளப்பிடித்தம் செய்யக்கூடிய அபாயமும் உள்ளது. எனவே நமது மத்திய சங்கம் உடனடியாக இப்பிரச்சினையை 
BSNL நிர்வாகத்துடன் விவாதித்து சம்பளப்பிடித்தம் கூடாது 
என வலியுறுத்தியுள்ளது.

இப்பிரச்சினையில் நமக்கு இறுதியாக எழும் கேள்வி இதுதான்....
நாலு கட்டப் பதவி உயர்வு உடன்பாடு போட்டவர்களுக்கு 
இதெல்லாம் புரியவில்லையா?

சங்கம் என்பது 
இருப்பதை மேம்படுத்துவதற்கா?
இழப்புக்களை ஏற்படுத்துவதற்கா?

பாதிக்கப்பட்ட தோழர்கள் சிந்திக்க வேண்டும்...
மே 10ல் தங்கள் சிந்தனையை செயல்படுத்த வேண்டும்...

Tuesday, 23 February 2016

ஊதிய இழப்பு 

01/01/2007க்குப்பின் BSNLலில் பணி நிரந்தரம் பெற்ற 
TTA தோழர்களுக்கு அவர்களது ஊதிய இழப்பைச் சரிக்கட்ட ஒரு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை நமது சங்கத்தின் முயற்சியால் வழங்கப்பட்டது. 
ஆனால் மற்ற பகுதி ஊழியர்களுக்கு இது மறுக்கப்பட்டது. மற்றவர்களுக்கும் ஆண்டு உயர்வுத்தொகை வழங்கக்கோரி   நிர்வாகத்தை நமது சங்கம் வலியுறுத்தி வந்தது. 

தற்போது BSNL நிர்வாகக்குழு  01/01/2007 முதல் 07/05/2010 வரை 
பணி நியமனம் பெற்ற மற்ற பகுதி ஊழியர்களுக்கும் ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வழங்குவதற்கு பரிந்துரை செய்துள்ளது. 

BSNL வாரியத்தின் ஒப்புதலுக்குப்பின் இது அமுல்படுத்தப்படும். 
01/01/2007க்குப்பின் TTA தவிர  மற்ற பதவிகளில் 
பணி நியமனம் இல்லாததால் 
கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற 
தோழர்கள் இச்சலுகையை அனுபவிப்பார்கள்.
AITUC 
அகில இந்திய மாநாடு
கோவை 
25/02/2016 - 28/02/2016
28/02/2016
உழைக்கும் கரங்களின் 
உரிமைப்பேரணி 

இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் 
முதல் தொழிற்சங்கத்தின் 
முதன்மைத்தொழிற்சங்கத்தின் 
அகில இந்திய மாநாடு 
வெற்றி பெற  வாழ்த்துகிறோம்.

Monday, 22 February 2016

நிகழ்வுகள் 

இன்று 23/02/2016 காரைக்குடியில்  
JCM  தலமட்டக்குழுக் கூட்டம் நடைபெறுகின்றது.

காரைக்குடியில் புத்தகத்திருவிழா
19/02/2016 முதல் 28/02/2016 வரை 
கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறுகின்றது.

AITUC  41வது அகில இந்திய மாநாடு 
கோவையில் 25/02/2016 முதல் 28/02/2016 வரை 
நடைபெறுகின்றது.

NFTE விரிவடைந்த மத்திய செயற்குழு 
மார்ச் 1 மற்றும் 2 தேதிகளில்
 பாட்னாவில் நடைபெறுகின்றது.

மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் 
அகில இந்திய எதிர்ப்பு நாள் 
மார்ச் 10 அன்று நடைபெறுகின்றது.

34வது  JCM  தேசியக்குழுக்கூட்டம் 
மார்ச் 10 அன்று நடைபெறுகின்றது.

தமிழகத்தேர்தல் பிரச்சாரத்துவக்க விழா 
சேலத்தில் மார்ச் 15 அன்று நடைபெறுகின்றது.

காரைக்குடியில் தேர்தல் பிரச்சாரத்துவக்க விழா 
மார்ச் 22 அன்று நடைபெறுகின்றது. 
அகில இந்தியத்தலைவர் 
தோழர்.இஸ்லாம் சிறப்புரையாற்றுகிறார்.

Sunday, 21 February 2016

செய்திகள் 

உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் 
7வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில் போட்டியிடும் சங்கங்கள்  விண்ணப்பிக்க கடைசி நாள்: 01/03/2016.
நமது NFTE சங்கத்தின் சார்பில் தேர்தலில் 
போட்டியிட விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

 மேலும் உடனடியாகத் தேர்தல் அதிகாரிகளை 
நியமிக்குமாறு மாநில நிர்வாகங்களை  டெல்லி 
 CORPORATE அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
வங்கிக்கடன் 
UNION வங்கி போன்ற வங்கிகள் நமக்கு கடன் கொடுப்பதற்கு 
கடுமையான நிபந்தனைகளை  விதித்த காரணத்தினால்  புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுல்படுத்தப்படவில்லை. இன்னும் இரண்டு வாரங்களில்  கூடுதல் சலுகைகளுடனும், கடுமையான நிபந்தனைகள் இல்லாமலும் இரண்டு வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் என 
டெல்லி நிர்வாகம் நமது சங்கத்திடம் தெரிவித்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
GPF...
22/02/2016க்குப்பின் GPF நிதி ஒதுக்கீடு  நடைபெறும் என்று நம்பப்படுகிறது. ஆயினும் GPF சம்பந்தமாக CORPORATE அலுவலகம் கேட்டிருந்த சில விவரங்களை அனுப்பாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்பில்லை என்றும்  கூறப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------
BSNL நேரடி ஊழியர் ஓய்வூதியப்பலன்கள் 
BSNLலில் நேரடி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கான 
புதிய ஓய்வூதியத்திட்டம் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. 
இதனிடையே  18ந்தேதி டெல்லியில் 
NFTE மற்றும் AIBSNLEA  சங்கங்களிடம் 
இத்திட்டம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், 
BSNL தனது பங்காக 3 சத பங்களிப்பைச்செய்வதாகவும்..
 ஒவ்வொரு ஆண்டும் பங்களிப்பு சதவீதம் பரிசீலிக்கப்படும் 
எனவும்  நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

15 ஆண்டுகளாக ஓய்வூதியப்பலன்களோ, 
பாதுகாப்போ இல்லாமல் BSNL நேரடி  ஊழியர்கள் 
நிராதரவாய் BSNLலில் பணிபுரியும் நிலை 
நமது சங்கத்தால்  சுட்டிக்காட்டப்பட்டது. 
மேலும் 3 சதப்பங்களிப்பு குறைவென்றும்...  
நிர்வாகம்  கூடுதல் பங்களிப்பு 
CONTRIBUTION அளிக்க வேண்டும் 
எனவும்  கோரிக்கை விடப்பட்டுள்ளது. 
இப்பிரச்சினை மார்ச் 4 அன்று கூடவுள்ள 
BSNL வாரியக்கூட்டத்தின்  ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
JTO இலாக்காத்தேர்வு 
JTO இலாக்காத்தேர்வை எதிர்த்து ஏற்கனவே
 இராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில்.. 
கேரளா மற்றும் ஒரிசா மாநிலங்களிலிருந்தும் 
சில தோழர்கள் வழக்கு மன்றத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. 
இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும். 
இருந்தபோதும் நமது மத்திய சங்கம் சம்பந்தப்பட்ட 
தோழர்களை சந்தித்து சிக்கலைத் தீர்ப்பதற்கு முயன்று வருகிறது.

Wednesday, 17 February 2016

வருத்தம் சொல்லும் வைப்பு நிதி 
  • பிள்ளைகளின் படிப்புக்கட்டணம் 
  • பெற்றோர்களின் மருத்துவச்செலவு 
  • ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை 
  • சுமங்கலி பூஜை 
  • வீட்டு மராமத்து 
என்று எத்தனையோ காரணங்களைச்சொல்லி 
வைப்பு நிதி பட்டுவாடாவிற்கு   விண்ணப்பம் செய்து காத்திருக்கும் அப்பாவிகளின்  கவனத்திற்கு...

ஜனவரி 2016 வரை BSNL ஊழியர்களுக்குப் பட்டுவாடா செய்யப்பட்ட GPF வைப்புநிதி தொகையினை BSNLக்கு அந்தந்த 
மாநில  DOTCELL CCAக்கள் பட்டுவாடா செய்யாதவரை..
 
BSNL ஊழியர்களுக்கு வைப்பு நிதி பட்டுவாடா நடக்க வாய்ப்பில்லை என்று டெல்லி நிர்வாகம் மாநில  தலைமை கணக்கு  அதிகாரிகளுக்கு  
16/02/2016 அன்று  உறுதிபடஅறிவித்துள்ளது. 

இனி வைப்புநிதியை நம்பிப் பலனில்லை....
ஈட்டிக்காரர்களிடம் தஞ்சமடைவதைத்தவிர வழியில்லை...

இதனிடையே நமது 
அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அவர்கள் 
சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச்சந்தித்து உடனடியாக 
வைப்பு நிதியை பட்டுவாடா செய்யச்சொல்லி வற்புறுத்தியுள்ளார் 
என்பது மட்டுமே ஆறுதல் தரும்  செய்தியாகும்.

இப்போதுதான் நமது தோழர்களுக்கு...
பட்டு.. வாடா.. என்பதின் பொருள் புரிகிறது...

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முகில் குடம் உடைத்துப் பீறிடும்  மழைத்துளி
பனிக்குடம் உடைத்து வீறிடும்  புதுக்குழவி...

கார்முகில்  களித்தாடும் தோகை மயில்..
வாட்டம் போக்கும்   வைப்புநிதித்தொகை..

எப்போ.. வரும்.. எப்படி வரும்...
மனிதா.. உனக்கு அது புரியாது...
மகாதேவனுக்கும் அது  தெரியாது...

புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்று...
கவலை கொண்ட மனதை கவிதை சொல்லி ஆற்று...

Monday, 15 February 2016

மத்திய சங்க மடல்கள் 


 நமது மத்திய சங்கம் கீழ்க்கண்ட மடல்களை 
பல்வேறு பிரச்சினைகளின் தீர்விற்காக 
BSNL நிர்வாகத்தின் கவனத்திற்கு அனுப்பியுள்ளது.

JTO இலாக்காத்தேர்வு 
3 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் நடைபெறவிருந்த  
JTO  இலாக்காத்தேர்வு நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது இளம் TTA தோழர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது. மேலும் JTO பதவிகள் நிரப்பப்படாத நிலையில் BSNL சேவை வெகுவாக பாதிக்கப்படும் நிலையும் உருவாகும். எனவே நிர்வாகம் இப்பிரச்சினையை சட்ட ரீதியாக சந்திப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டு தேர்வு நடப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என 
மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது..

JAO இலாக்காத்தேர்வு 
ஏறத்தாழ 3 ஆண்டுகளாக JAO இலாக்காத்தேர்வு நடைபெறாததால் தற்போது நடத்தப்படவிருக்கும் JAO இலாக்காத்தேர்விற்கு 55 வயதுடைய தோழர்களையும் தேர்வெழுத  சிறப்பு அனுமதி வழங்குமாறு 
BSNL நிர்வாகத்தை மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

GPF வைப்பு நிதி ஒதுக்கீடு 
GPF பட்டுவாடா வழங்குவதற்கான  நிதி ஒதுக்கீட்டை 
மாநிலங்களுக்கு உடனடியாக மேற்கொள்ளுமாறு 
BSNL நிர்வாகத்தை மீண்டும் நமது சங்கம் வலியுறுத்தியுள்ளது.

7வது உறுப்பினர் சரிபார்ப்பு
7வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் 10/05/2016 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 24/04/2016 அன்றுதான் தற்போதைய அங்கீகாரம் முடிவடைகிறது. எனவே தற்போதைய அங்கீகார காலம் வரை அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்க வேண்டும். 25/04/2016லிருந்துதான் 
தேர்தல் நடத்தை விதிகள் அமுல்படுத்தப்பட வேண்டும் 
என  நமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Sunday, 14 February 2016

செய்திகள் 

ஜோத்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக 
JTO இலாக்காத்தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்பை 
நிறுத்தி வைக்குமாறு மாநில நிர்வாகங்களுக்கு 
BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 

7வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில் பங்கு பெறும் சங்கங்கள் 29/02/2016க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும்...
10/03/2016க்குள் விண்ணப்பங்களை விலக்கிக்கொள்ளலாம் எனவும்... 
தேர்தல் 10/05/2016 அன்று நடைபெறும் எனவும் 
BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது. 

BSNLலில் நேரடி நியமனம் பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் வழங்குவதற்கான திட்டம் BSNL வாரியக்கூட்ட ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. வாரியக்கூட்டத்தில் எழுப்பப்பட்ட சந்தேகங்களினால் தற்போது அது BSNL நிதிப்பிரிவின் 
ஆய்விற்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது.

BSNL அகில இந்திய தடகளப் போட்டியில் பங்கு பெறும் ஊழியர்கள் பயிற்சி பெறுவதற்காக நாள்தோறும் நான்கு மணி நேரம் அவர்களுக்கு பணியில் இருந்து விடுப்பு அளிக்க BSNL நிர்வாகம்  உத்திரவிட்டுள்ளது. 

TM தோழர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச SIMலிருந்து 
தொலைபேசி நிலையத்தில் உள்ள பழுது நீக்கும் பிரிவில் MDFல் உள்ள தொலைபேசியைக் கட்டணமில்லாமல் அழைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சினை நமது தமிழ் மாநில சங்கத்தால் எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

HRA வீட்டு வாடகைப்படி 78.2 சத இணைப்பின் அடிப்படையில் வழங்க வேண்டும் என மீண்டும் நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

JCM தேசியக்குழுக்கூட்டம் மார்ச் முதல் வாரமும் 
BSNL வாரியக்கூட்டம் மார்ச் 4 அன்றும்  நடைபெறலாம் என்று தெரிகிறது.

Wednesday, 10 February 2016

குறைந்தபட்சக்கூலி 

மாதாந்திர சம்பளத்தின் அடிப்படையில் 
பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 
குறைந்தபட்சம் 26 நாட்கள் கூலி  
தர வேண்டுமென்று  மதுரை LEO... 
 LABOUR ENFORCEMENT OFFICER 
 காரைக்குடி மாவட்ட BSNL  நிர்வாகத்தையும், 
ஒப்பந்தக்காரர்களையும் பணித்துள்ளார்.

காரைக்குடி BSNL  பொதுமேலாளருக்கு 
அவர் அனுப்பிய 08/02/2016 தேதியிட்ட கடிதத்தின்படி 
  • மாதாந்திர சம்பளத்தின் அடிப்படையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 26 நாட்கள் குறைந்தபட்சக்கூலி வழங்கப்பட வேண்டும். 
  • மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வந்தாலும் மாதம் 26 நாட்கள் குறைந்தபட்சக்கூலி வழங்கப்பட வேண்டும். 
  •  நிறுவனத்தில் வாரத்தில் 5 நாட்கள் வேலை முறை என்றாலும்  ஊழியர்களுக்கு 26 நாட்கள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். 
  • வார ஓய்வில் வேலை வாங்குதல் கூடாது.
  • விடுமுறை நாட்களில் வேலை செய்யவில்லை என்று சொல்லி  ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க முடியாது.
  • விடுமுறை நாட்களில் ஒப்பந்த ஊழியர்களிடம் வேலை வாங்கிக்கொள்வதோ..  ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதோ..   ஒப்பந்தக்காரரின் பணியாகும். 
  • சம்பளம் மாதந்தோறும் 7 அல்லது 10ந்தேதிக்கு முன் பட்டுவாடா செய்யப்படவேண்டும்.
  • ஒப்பந்தக்காரர் உரிய தேதியில் பட்டுவாடா செய்யத்தவறினால் BSNL நிர்வாகமே கூலியை பட்டுவாடா செய்ய வேண்டும்.
  • BSNL நிர்வாகம் பில்களை உரிய தேதியில் ஒப்பந்தகாரருக்கு பட்டுவாடா செய்யத்தவறினாலும், ஒப்பந்தக்காரர் குறித்த தேதியில் சம்பளத்தை பட்டுவாடா செய்ய வேண்டும்.
  • ஒப்பந்த ஊழியர்கள் தங்களை எந்தப்பணிக்காக ஒப்பந்தக்காரர் தேர்வு செய்துள்ளாரோ அந்தப்பணியை மட்டுமே செய்ய வேண்டும். 
  • BSNL நிறுவனம் தொழிலாளர் சட்டப்படி அனைத்து பதிவேடுகளையும் பராமரிக்க வேண்டும்.
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு BSNL நிறுவனமே அடையாள அட்டை வழங்க வேண்டும்.
  • மேற்கண்டவற்றை BSNL நிர்வாகம் அமுல்படுத்த தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தோழர்களே...
மாதம் குறைந்த பட்சக்கூலி 26 நாட்கள் வழங்க வேண்டும்...
கூலி 7 அல்லது 10ந்தேதிக்குள் வழங்கப்பட வேண்டும்..
அடையாள அட்டை BSNL நிறுவனமே வழங்க வேண்டும்...
என தெளிவுபட தொழிலாளர் அமுலாக்க அதிகாரி
 தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
அவருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக..

தொடர்ந்து LEO அவர்களை சந்திப்பதிலும்..
பிரச்சினைகளை விவாதிப்பதிலும்..
நம்முடன் இணைந்து பணியாற்றிய 
TNTCWU அகில இந்திய உதவிப்பொதுச்செயலர்  
தோழர். C.பழனிச்சாமி அவர்களுக்கும்  நமது நன்றிகள் பல...

காரைக்குடி மாவட்ட நிர்வாகம் 
அடிமட்ட ஊழியர்களின் தேவைகளை 
நிச்சயம் நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.

Tuesday, 9 February 2016

கருணை அடிப்படை வேலை 

மரணமுற்ற ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்குவதில் உள்ள விதிகளைத் தளர்த்த வேண்டும் என நமது சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. JCM தேசியக்குழுக்கூட்டத்திலும் இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பாக BSNL நிர்வாகம் 05/02/2016 அன்று புதிய உத்திரவொன்றைப்  பிறப்பித்துள்ளது. 
அதன்படி...
  • பணி செய்துகொண்டிருக்கும் போது ஏற்படும் மின்விபத்து..
  • தொலைபேசி மற்றும் கேபிள் பழுது நீக்கும்போது ஏற்படும் விபத்து..
  • பயங்கரவாத தாக்குதல்..
  • தொலைபேசி நிலையத்தில் தீ விபத்து 
  • மின் சாதனங்களைப் பழுது நீக்கும்போது  ஏற்படும் மின்விபத்து 

போன்றவற்றால் உயிர் இழக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக நேரடியாக கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என BSNL நிர்வாகம் உத்திரவில் தெரிவித்துள்ளது. மேலும்  இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு தற்போதைய மதிப்பெண் வழங்கும் முறை பொருந்தாது எனவும் விளக்கமளித்துள்ளது.

மரித்தவர்களின் வாரிசுகளுக்கு பணி தரும் முறை மெல்ல மெல்ல மரித்து வரும் நிலையில்..  இப்பிரச்சினைக்கு உயிரூட்டி தீர்வு கண்ட நமது மத்திய மாநில சங்கங்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.
------------------------------------------------------------------------------------------------------------------
கருணை அடிப்படையில் வேலை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது பணி வழங்கும் ஆணை அனுப்பப்பட்டுள்ளது. காரைக்குடி மாவட்டத்தில் நான்கு  பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  எட்டு  விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஊழியர்களின் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.  விண்ணப்பங்களை மதிப்பெண் முறையில் தேர்வு செய்வதால் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கிடைக்க கூடிய  மதிப்பெண்ணை தெரிந்து கொண்டு விண்ணப்பிப்பது நலம் தரும். நமது முன்னணித் தோழர்கள் இதற்கு உதவிட வேண்டும்.

Sunday, 7 February 2016

வெற்றி முரசெழுப்பிய... வேலூர் செயற்குழு 

நமது கோட்டையாம் வேலூரிலே 06/02/2016 அன்று 
நமது தமிழ் மாநில செயற்குழு 
"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" 
என்னும் நெஞ்சு நிமிர்த்தலோடு உணர்வு நிறைந்த 
உள்ள  நிறைவோடு நடந்து முடிந்துள்ளது.

ஆயிரங்களை அள்ளித்தந்த இலட்சம் 
மாநிலத்தலைவர் இலட்சம் தலைமை தாங்கினார். 
ஒரு மாத ஓய்வூதியத்தை மாநில மாநாட்டிற்கு அள்ளி வழங்கினார். 
தோழர் பட்டாபி மாநில செயற்குழுவின் நோக்கங்களை 
நமது கடமைகளை உள்ளம் தொட எடுத்துரைத்தார்.
மகாமகக் குடந்தையின் 
மாபெரும் தலைவர் தோழர்.ஜெயபால்
குடந்தையின் குணக்குன்று தோழர் ஜெயபால்
 மாநில செயற்குழுவை தனது சிம்மக்குரலால் 
கட்டியம் கூறி துவக்கி வைத்தார்.
ஓய்வறியா ஒப்பற்றத்தலைவர் 
தோழர். ஆர்.கே.,
அருமைத்தோழர்.ஆர்.கே., அவர்கள்
 எழுச்சியுரையாற்றி தோழர்களை வசப்படுத்தினார். 
இணைந்த கரங்களை 
வெற்றிக்கரங்களாக்கிட உறுதி சொன்னார்.
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.. 
எட்டாண்டில் எல்லாம் இழந்தோம். 
நமது காலத்தில் இழப்பைத்தடுத்தோம். 
இனி இருப்பதைக்காத்திடுவோம்..
மேலும் பெற்றிடுவோம்  என 
 நமது இயக்க வழிகாட்டி தோழர்.சேது சூளுரைத்தார். 
ஒற்றுமையே நம்  உயிர்மூச்சு என முழங்கிய
கோவை தோழர்.சுப்பராயன்
 
கோவை மாவட்டச்செயலர் தோழர்.சுப்பராயன்
 இயக்கமல்லால் நமக்குப் பெருமையில்லை...
ஒற்றுமையில்லால் நமக்கு உயர்வில்லை 
என உணர்வுபடக் கூறினார்.
தோழமைமிகு மாநிலப்பொருளர் 
தோழர்.அசோகராஜன் 
விதி வெல்லும் என்பது அந்தக்காலம்.
நிதியே வெல்லும் என்பது இந்தக்காலம்.
மதி நிறைந்த மாநிலப்பொருளர் 
தோழர்.அசோகராஜன் 
நமது நிதி நிலைதனை எடுத்துரைத்தார். 
சம்மேளனச்செயலர் தோழர்.SSG...
பணி நிறைவு பெற்ற 
பண்பு நிறை தோழர்.பாலு... 
மூத்த தலைவர் தோழர்.தமிழ்மணி, 
தோழர்.SSG ஆகியோர் கருத்துரையாற்றிட..
மாவட்டச்செயலர்கள், மாநிலச்சங்க நிர்வாகிகள்..
தேர்தலில் தமிழகத்தில்  இணைந்த கரங்களை 
முதன்மைக்கரங்களாய் உயர வைப்போம் 
என உறுதி சொல்லிட..

தமிழ் மாநில மாநாட்டு வரவேற்புக்குழுத்  தோழர்கள்

பார் வியக்க படை பெருக்க மாநில மாநாட்டை
சிறப்போடு நடத்துவோம் என சூளுரைக்க..
 
நமது மாநில துணைத்தலைவர்
 பண்பாளர் தோழர்.பாலு அவர்களின் 
பணி நிறைவு நிகழ்வோடு 
பாங்குற முடிந்தது 
வேலூர் மாநிலச்செயற்குழு...
 தோழர்களே...
ஓய்வகற்றுவோம்..
சோர்வகற்றுவோம்...
ஒற்றுமையாய் களமிறங்குவோம்...
காத்திருக்கிறது கடமை...

Friday, 5 February 2016

NFTE
தமிழ் மாநில செயற்குழு 

வேலூர் தமிழ் மாநில செயற்குழுவில் 
தோழர்.லால் பகதூர் காரைக்குடி  மாவட்டச்செயலராகவும் 
தோழர்.மாரி, மாநில அமைப்புச்செயலராகவும் கலந்து கொள்வர்.

Thursday, 4 February 2016


ஒப்பந்த ஊழியர் 
வைப்புநிதி நிரந்தர கணக்கு எண் ஒதுக்கீடு 
EPF UAN - UNIVERSAL ACCOUNT NUMBER ALLOTMENT 

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வைப்புநிதி எண் UAN வழங்கப்பட வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை. 

தற்போது அலுவலக துப்புரவுப்பணிகளை HOUSE KEEPING 
குத்தகை எடுத்துள்ள ALERT SECURITY என்ற குத்தகை நிறுவனம் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு வைப்பு நிதி UAN ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது காரைக்குடி மாவட்டத்தில் இப்போதுதான் ஒரு குத்தகை நிறுவனம்  ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக, 
முதன் முறையாக  வைப்புநிதியை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பெயரிலே செலுத்தியுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

துப்புரவுப்பணிகள் தவிர  காவல் பணி, கேபிள் பணி போன்ற பணி செய்யும் ஊழியர்களுக்கான UAN இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதற்கான குத்தகைக்காரர்கள் வேறு வேறு ஆட்கள் 
என்பதால் இந்நிலை நிலவுகிறது. 

UAN ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு 
EPF அலுவலகத்திலிருந்து குறுந்தகவல் SMS அனுப்பப்படும். 
EPF இணையதளத்தில் நிரந்தர வைப்புநிதி எண்ணை சம்பந்தப்பட்ட ஊழியரின் USER NAME - உபயோக பெயரில் சென்று  
ACTIVATE -  செயல்படுத்த வேண்டும். 

நமது கிளைச்செயலர்களும், கணிணியில் பணி புரியும் தோழர்களும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவிட வேண்டும். வாய்ப்பு இல்லாதவர்கள் மாவட்டச்சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.

Wednesday, 3 February 2016

ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் 
சமரசப்பேச்சுவார்த்தை 

ஒப்பந்த ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மீதான சமரசப்பேச்சுவார்த்தை 06/02/2016 அன்று காரைக்குடியில் நடைபெறும் என்று மதுரை தொழிலாளர் அமுலாக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சமரசக்கூட்டத்தில் 
BSNL  நிர்வாக அதிகாரிகள் , ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழிற்சங்கத்தலைவர்கள் பங்கேற்பர்.

தொழிற்சங்கங்களின் சார்பாக
 NFTE  - TMTCLU,   BSNLEU  -TNTCWU 
சங்கத்தலைவர்கள் பங்கேற்பர்.

06/02/2016 அன்று வேலூரில் 
தமிழ் மாநில செயற்குழு நடைபெறுவதால் 
TMTCLU மாவட்டச்செயலர்  தோழர்.முருகன் தலைமையில் 
நமது தோழர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வர் .
உறங்கும் WORK ORDERகள் 

காரைக்குடி மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டம் 
முழு வீச்சுடன் செயல் படுத்தப்பட்டு வருகிறது. 

ஜனவரி மாத SIM விற்பனையில் காரைக்குடி
மாநிலத்தில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. 
ஆயினும் MNPயில் இன்னும் எதிர்மறை நிலையே நிலவுகிறது. 

தரைவழி இணைப்பு , அகன்ற அலைவரிசை இணைப்புக்கள் கேட்டு  நாளும் வாடிக்கையாளர்கள் நம்மைத்தேடி வருகிறார்கள். 

ஆனால் நம்மால்தான்  அவர்களுக்கு  உடனடியாக 
இணைப்பு கொடுக்க இயலவில்லை. 

நமது இயலாமைக்கு  
உபகரணங்கள் இல்லை.. உரிய பொருட்கள் இல்லை... 
ஊழியர்கள் இல்லை  என பல்வேறு காரணங்கள் உண்டு. 

உதாரணத்துக்கு இராமநாதபுரம் INDOOR  பகுதியில்
 CDRல்  நிறைவு செய்யப்படாத 
WORK ORDERகள் நூற்றுக்கணக்கில்... நாட்கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன. 

தூங்கிக்கிடக்கும் வேலை ஆணைகளால் 
நமது வருமானமும் தூங்கி வழிகிறது. 

குறைந்த பட்சம் 10 JTOக்கள்.. 
15 TTAக்கள் இல்லாமல் 
இராமநாதபுரம் INDOOR  பகுதியில் தேங்கிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான WORK ORDERகளை 
முழுமை செய்ய முடியாது என தலமட்ட நிர்வாகம் கருதுகிறது.

எனவே  மாவட்ட நிர்வாகம்  தற்போது மானாமதுரை பகுதியில் சிறப்புக்கவனம் செலுத்துவதைப் போன்று  இராமநாதபுரம் பகுதியிலும்  சிறப்பு  சிறப்புக்கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். 

Tuesday, 2 February 2016

மார்ச் - 10
அகில இந்திய எதிர்ப்பு நாள் 

 செப்டம்பர் 2 - 2015 
அகில இந்திய வேலை நிறுத்தத்தில் 
முன் வைக்கப்பட்ட 
12 அம்சக்கோரிக்கைகளில் 
எந்தக் கோரிக்கையிலும் 
முன்னேற்றம் இல்லாத 
கொடுமையை எதிர்த்தும்  

தொழிலாளர் பிரச்சினையில் 
கண் மூடித்தூங்கும் 
மோடி அரசைக் கண்டித்தும் 

தினம் தினம் அல்லல்படும்..
கோடிக்கணக்கான உழைக்கும் வர்க்கத்தின் 
அடிப்படை உரிமைகளை வழங்கக்கோரியும்..

10/03/2016
இந்திய தேசத்தின் 
அனைத்து தொழிற்சங்கங்களும்  
பங்கேற்கும் 

அகில இந்திய எதிர்ப்பு தினம் 

இணைந்து நிற்போம்...
கோரிக்கைகள் நிறைவேறும் வரை 
எதிர்த்து நிற்போம்...
வாரீர்... தோழர்களே...

Monday, 1 February 2016

நம்மால் முடியும்...

BSNL SIM விற்பனையில் 
புதிய சாதனை படைத்துள்ளது..

டிசம்பர் 2015ல் 17.5 இலட்சம் SIM விற்பனை..
ஜனவரி 2016ல்  20 இலட்சம் SIM விற்பனை..

நம்மால் முடியும்... 
எதுவும் தொட்டு விடும் தூரம்தான்.. 
உயரப் பறப்போம்...
ஒன்றாய்ப் பறப்போம்...

வாழ்த்துக்கள் தோழர்களே...
சங்க அங்கீகாரத்தேர்தல்  


7வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் அறிவிப்பை BSNL நிர்வாகம் 01/02/2016 அன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 26/04/2016 அன்று தேர்தல் நடைபெறும்  என்று சொல்லப்பட்டு தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.

01/02/2016 தேதி அறிவிப்பின்படி...

  • தேர்தல் நாள் : 10/05/2016
  • முடிவு அறிவிக்கும் நாள் : 12/05/2016
  • சங்கங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01/03/2016.
  • வாக்காளர் பட்டியல் 01/03/2016க்குள் இறுதி செய்யப்பட வேண்டும்.
  • 30/04/2016 வரை பணி ஓய்வு பெறுவோருக்கு  வாக்காளர்  பட்டியலில்இடமில்லை.
  • தேர்தல் அறிவிப்பு செய்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்களுக்கு இலாக்கா மாற்றல் இடக்கூடாது.

தோழர்களே...
களம் காண்போம்... 
ஊழியர் நலம் காப்போம்....
இணைந்த கரங்களே... எழுக... 
எதிர்ப்போரை  வெல்க...

நமது சின்னம் 

இணைந்த கரங்கள்