Thursday 25 February 2016

தொடரும் இழப்புக்கள்..

சமீபத்தில் பணி நிறைவு பெற்ற நமது தோழர் ஒருவர் 
நம்மைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 
அவருடைய   ஓய்வூதியம் நாம் கணக்கிட்டுக் கொடுத்த 
தொகையளவு வராமல் குறைவாக வந்துள்ளதாகக் கூறினார். 
மேலும் அவர் " ஓய்வூதியக்கணக்குப் போட உனக்குத் தெரியுமா? 
என்றும் சூடாகக் கேள்வி கேட்டார்.

ஓய்வூதியக்கணக்கீடு ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. 
எனவே கணக்கீட்டில் தவறுக்கு வாய்ப்பில்லை. 
எனவே அவரது வார்த்தையைக் கேட்டு நாம் கோபம் கொள்ளவில்லை.  இருந்த போதும் விளக்கம் பெறுவதற்காக  
DOT CELLஐத் தொடர்பு கொண்டோம். DOT CELL அதிகாரிகள் 
சொன்ன விளக்கம்தான் நமக்கு கோபத்தைத் தூண்டியது.

சம்பந்தப்பட்ட ஊழியர் TELECOM MECHANIC  பயிற்சி முடித்த பின் உடனடியாக TM பதவியில் அமர்த்தப்படவில்லையென்றும்  01/10/2000க்குப்பின் அவருக்கு LINE MAN சம்பள விகிதத்தில் ஒரு ஆண்டு உயர்வுத்தொகையுடன் சம்பள நிர்ணயம் செய்யப்பட்டு அதன் பின் TM ஆகப் பதவி உயர்வு செய்யப்பட்டதாகவும் கூறினார்கள். 

பயிற்சி முடித்து TM காலியிடங்கள்  இல்லாததால் காத்திருந்த தோழர்களுக்கு  தோழர் குப்தா ஏற்படுத்திக் கொடுத்த ஆறுதல் பரிசுதான் இந்த LINEMAN சம்பள விகித நிர்ணயம். இதில் DOTCELLக்கு என்ன வருத்தம் என்று அவர்களை வினவினோம். அவர்கள் சொன்னார்கள் எங்களுக்கு ஒன்றும் இதில் பிரச்சினை இல்லை. 

" NEPP என்னும் நாலுகட்டப்பதவி உயர்வு உடன்பாட்டில் 01/10/2000க்குப்பின் ஊழியர்கள் முந்தைய OTBP/BCR பதவி உயர்வு   அல்லது NEPP என்னும் நாலுகட்டப்பதவி உயர்வு இவற்றில் ஒன்றில்தான் பதவி உயர்வு பெற வேண்டும். LINE MAN சம்பள விகிதத்தில் செய்யப்பட்ட நிர்ணயம் என்பது இவையிரண்டிலும் பொருந்தாது. 
எனவே நாங்கள் இதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. 
இதை நீங்கள் எங்களிடம் வாதம் செய்வதை விட நாலுகட்டப் பதவி உயர்வு உடன்பாடு போட்டவர்களிடம் போய்க் கேளுங்கள் " என்று சொல்லி விட்டுத் தொலைபேசியைத் துண்டித்து விட்டார்கள். 

தோழர்களே...
இப்பிரச்சினை நாடு முழுவதுமுள்ள நமது TM தோழர்களைப் பாதிக்கும். ஓய்வூதியம் குறைவது மட்டுமல்ல... 
கடந்த காலத்திற்கு சம்பளப்பிடித்தம் செய்யக்கூடிய அபாயமும் உள்ளது. எனவே நமது மத்திய சங்கம் உடனடியாக இப்பிரச்சினையை 
BSNL நிர்வாகத்துடன் விவாதித்து சம்பளப்பிடித்தம் கூடாது 
என வலியுறுத்தியுள்ளது.

இப்பிரச்சினையில் நமக்கு இறுதியாக எழும் கேள்வி இதுதான்....
நாலு கட்டப் பதவி உயர்வு உடன்பாடு போட்டவர்களுக்கு 
இதெல்லாம் புரியவில்லையா?

சங்கம் என்பது 
இருப்பதை மேம்படுத்துவதற்கா?
இழப்புக்களை ஏற்படுத்துவதற்கா?

பாதிக்கப்பட்ட தோழர்கள் சிந்திக்க வேண்டும்...
மே 10ல் தங்கள் சிந்தனையை செயல்படுத்த வேண்டும்...

No comments:

Post a Comment