உறங்கும் WORK ORDERகள்
காரைக்குடி மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டம்
முழு வீச்சுடன் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
ஜனவரி மாத SIM விற்பனையில் காரைக்குடி
மாநிலத்தில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
மாநிலத்தில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஆயினும் MNPயில் இன்னும் எதிர்மறை நிலையே நிலவுகிறது.
தரைவழி இணைப்பு , அகன்ற அலைவரிசை இணைப்புக்கள் கேட்டு நாளும் வாடிக்கையாளர்கள் நம்மைத்தேடி வருகிறார்கள்.
ஆனால் நம்மால்தான் அவர்களுக்கு உடனடியாக
இணைப்பு கொடுக்க இயலவில்லை.
நமது இயலாமைக்கு
உபகரணங்கள் இல்லை.. உரிய பொருட்கள் இல்லை...
ஊழியர்கள் இல்லை என பல்வேறு காரணங்கள் உண்டு.
உதாரணத்துக்கு இராமநாதபுரம் INDOOR பகுதியில்
CDRல் நிறைவு செய்யப்படாத
WORK ORDERகள் நூற்றுக்கணக்கில்... நாட்கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன.
தூங்கிக்கிடக்கும் வேலை ஆணைகளால்
நமது வருமானமும் தூங்கி வழிகிறது.
குறைந்த பட்சம் 10 JTOக்கள்..
15 TTAக்கள் இல்லாமல்
இராமநாதபுரம் INDOOR பகுதியில் தேங்கிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான WORK ORDERகளை
முழுமை செய்ய முடியாது என தலமட்ட நிர்வாகம் கருதுகிறது..
எனவே மாவட்ட நிர்வாகம் தற்போது மானாமதுரை பகுதியில் சிறப்புக்கவனம் செலுத்துவதைப் போன்று இராமநாதபுரம் பகுதியிலும் சிறப்பு சிறப்புக்கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment