Wednesday 10 February 2016

குறைந்தபட்சக்கூலி 

மாதாந்திர சம்பளத்தின் அடிப்படையில் 
பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 
குறைந்தபட்சம் 26 நாட்கள் கூலி  
தர வேண்டுமென்று  மதுரை LEO... 
 LABOUR ENFORCEMENT OFFICER 
 காரைக்குடி மாவட்ட BSNL  நிர்வாகத்தையும், 
ஒப்பந்தக்காரர்களையும் பணித்துள்ளார்.

காரைக்குடி BSNL  பொதுமேலாளருக்கு 
அவர் அனுப்பிய 08/02/2016 தேதியிட்ட கடிதத்தின்படி 
  • மாதாந்திர சம்பளத்தின் அடிப்படையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 26 நாட்கள் குறைந்தபட்சக்கூலி வழங்கப்பட வேண்டும். 
  • மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வந்தாலும் மாதம் 26 நாட்கள் குறைந்தபட்சக்கூலி வழங்கப்பட வேண்டும். 
  •  நிறுவனத்தில் வாரத்தில் 5 நாட்கள் வேலை முறை என்றாலும்  ஊழியர்களுக்கு 26 நாட்கள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். 
  • வார ஓய்வில் வேலை வாங்குதல் கூடாது.
  • விடுமுறை நாட்களில் வேலை செய்யவில்லை என்று சொல்லி  ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க முடியாது.
  • விடுமுறை நாட்களில் ஒப்பந்த ஊழியர்களிடம் வேலை வாங்கிக்கொள்வதோ..  ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதோ..   ஒப்பந்தக்காரரின் பணியாகும். 
  • சம்பளம் மாதந்தோறும் 7 அல்லது 10ந்தேதிக்கு முன் பட்டுவாடா செய்யப்படவேண்டும்.
  • ஒப்பந்தக்காரர் உரிய தேதியில் பட்டுவாடா செய்யத்தவறினால் BSNL நிர்வாகமே கூலியை பட்டுவாடா செய்ய வேண்டும்.
  • BSNL நிர்வாகம் பில்களை உரிய தேதியில் ஒப்பந்தகாரருக்கு பட்டுவாடா செய்யத்தவறினாலும், ஒப்பந்தக்காரர் குறித்த தேதியில் சம்பளத்தை பட்டுவாடா செய்ய வேண்டும்.
  • ஒப்பந்த ஊழியர்கள் தங்களை எந்தப்பணிக்காக ஒப்பந்தக்காரர் தேர்வு செய்துள்ளாரோ அந்தப்பணியை மட்டுமே செய்ய வேண்டும். 
  • BSNL நிறுவனம் தொழிலாளர் சட்டப்படி அனைத்து பதிவேடுகளையும் பராமரிக்க வேண்டும்.
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு BSNL நிறுவனமே அடையாள அட்டை வழங்க வேண்டும்.
  • மேற்கண்டவற்றை BSNL நிர்வாகம் அமுல்படுத்த தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தோழர்களே...
மாதம் குறைந்த பட்சக்கூலி 26 நாட்கள் வழங்க வேண்டும்...
கூலி 7 அல்லது 10ந்தேதிக்குள் வழங்கப்பட வேண்டும்..
அடையாள அட்டை BSNL நிறுவனமே வழங்க வேண்டும்...
என தெளிவுபட தொழிலாளர் அமுலாக்க அதிகாரி
 தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
அவருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக..

தொடர்ந்து LEO அவர்களை சந்திப்பதிலும்..
பிரச்சினைகளை விவாதிப்பதிலும்..
நம்முடன் இணைந்து பணியாற்றிய 
TNTCWU அகில இந்திய உதவிப்பொதுச்செயலர்  
தோழர். C.பழனிச்சாமி அவர்களுக்கும்  நமது நன்றிகள் பல...

காரைக்குடி மாவட்ட நிர்வாகம் 
அடிமட்ட ஊழியர்களின் தேவைகளை 
நிச்சயம் நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.

2 comments:

  1. ஆனால் தோழரே,இன்று தேதி 10 ஆனால் ஹவுஸ் கீப்பிங் மேலாளரிடம் கேட்டால் நாளை என்று நாள் காட்டுகின்றார், உண்மையிலேயே வெறுத்து விட்டது,,,, இங்கே உண்மைக்கு மதிப்பு இல்லை. நமது சங்கம் இன்று வரை போராடிகொண்டிருக்கின்றது ஆனால் அதன் முடிவு இன்னமும் தொழிலாளர்களுக்கு சாதகம இல்லை, அது பற்றி தலைமை சங்கமும் கண்டு கொண்டதாக தெரிய வில்லை.... ஆனால் நமது சங்கத்தையும் , உங்களையும், நாங்களாகிய நானும் தொழிகாளர்களும் நம்புகின்றோம் நல்லதே நடக்கும் என நம்புகின்றோம்,,,, தவறு இருந்தால் மன்னிக்கவும் இயலாமையுடனும் வருத்தத்துடனும் என்றும் சங்க விசுவாசி,,,,

    ReplyDelete
  2. மன்னிக்கவும் தலைமை என்றது சென்னை தலைமையகத்தை தோழரே

    ReplyDelete