Sunday, 7 February 2016

வெற்றி முரசெழுப்பிய... வேலூர் செயற்குழு 

நமது கோட்டையாம் வேலூரிலே 06/02/2016 அன்று 
நமது தமிழ் மாநில செயற்குழு 
"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" 
என்னும் நெஞ்சு நிமிர்த்தலோடு உணர்வு நிறைந்த 
உள்ள  நிறைவோடு நடந்து முடிந்துள்ளது.

ஆயிரங்களை அள்ளித்தந்த இலட்சம் 
மாநிலத்தலைவர் இலட்சம் தலைமை தாங்கினார். 
ஒரு மாத ஓய்வூதியத்தை மாநில மாநாட்டிற்கு அள்ளி வழங்கினார். 
தோழர் பட்டாபி மாநில செயற்குழுவின் நோக்கங்களை 
நமது கடமைகளை உள்ளம் தொட எடுத்துரைத்தார்.
மகாமகக் குடந்தையின் 
மாபெரும் தலைவர் தோழர்.ஜெயபால்
குடந்தையின் குணக்குன்று தோழர் ஜெயபால்
 மாநில செயற்குழுவை தனது சிம்மக்குரலால் 
கட்டியம் கூறி துவக்கி வைத்தார்.
ஓய்வறியா ஒப்பற்றத்தலைவர் 
தோழர். ஆர்.கே.,
அருமைத்தோழர்.ஆர்.கே., அவர்கள்
 எழுச்சியுரையாற்றி தோழர்களை வசப்படுத்தினார். 
இணைந்த கரங்களை 
வெற்றிக்கரங்களாக்கிட உறுதி சொன்னார்.
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.. 
எட்டாண்டில் எல்லாம் இழந்தோம். 
நமது காலத்தில் இழப்பைத்தடுத்தோம். 
இனி இருப்பதைக்காத்திடுவோம்..
மேலும் பெற்றிடுவோம்  என 
 நமது இயக்க வழிகாட்டி தோழர்.சேது சூளுரைத்தார். 
ஒற்றுமையே நம்  உயிர்மூச்சு என முழங்கிய
கோவை தோழர்.சுப்பராயன்
 
கோவை மாவட்டச்செயலர் தோழர்.சுப்பராயன்
 இயக்கமல்லால் நமக்குப் பெருமையில்லை...
ஒற்றுமையில்லால் நமக்கு உயர்வில்லை 
என உணர்வுபடக் கூறினார்.
தோழமைமிகு மாநிலப்பொருளர் 
தோழர்.அசோகராஜன் 
விதி வெல்லும் என்பது அந்தக்காலம்.
நிதியே வெல்லும் என்பது இந்தக்காலம்.
மதி நிறைந்த மாநிலப்பொருளர் 
தோழர்.அசோகராஜன் 
நமது நிதி நிலைதனை எடுத்துரைத்தார். 
சம்மேளனச்செயலர் தோழர்.SSG...
பணி நிறைவு பெற்ற 
பண்பு நிறை தோழர்.பாலு... 
மூத்த தலைவர் தோழர்.தமிழ்மணி, 
தோழர்.SSG ஆகியோர் கருத்துரையாற்றிட..
மாவட்டச்செயலர்கள், மாநிலச்சங்க நிர்வாகிகள்..
தேர்தலில் தமிழகத்தில்  இணைந்த கரங்களை 
முதன்மைக்கரங்களாய் உயர வைப்போம் 
என உறுதி சொல்லிட..

தமிழ் மாநில மாநாட்டு வரவேற்புக்குழுத்  தோழர்கள்

பார் வியக்க படை பெருக்க மாநில மாநாட்டை
சிறப்போடு நடத்துவோம் என சூளுரைக்க..
 
நமது மாநில துணைத்தலைவர்
 பண்பாளர் தோழர்.பாலு அவர்களின் 
பணி நிறைவு நிகழ்வோடு 
பாங்குற முடிந்தது 
வேலூர் மாநிலச்செயற்குழு...
 தோழர்களே...
ஓய்வகற்றுவோம்..
சோர்வகற்றுவோம்...
ஒற்றுமையாய் களமிறங்குவோம்...
காத்திருக்கிறது கடமை...

No comments:

Post a Comment