செய்திகள்
ஜோத்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக
JTO இலாக்காத்தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்பை
நிறுத்தி வைக்குமாறு மாநில நிர்வாகங்களுக்கு
BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
7வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில் பங்கு பெறும் சங்கங்கள் 29/02/2016க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும்...
10/03/2016க்குள் விண்ணப்பங்களை விலக்கிக்கொள்ளலாம் எனவும்...
தேர்தல் 10/05/2016 அன்று நடைபெறும் எனவும்
BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.
BSNLலில் நேரடி நியமனம் பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் வழங்குவதற்கான திட்டம் BSNL வாரியக்கூட்ட ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. வாரியக்கூட்டத்தில் எழுப்பப்பட்ட சந்தேகங்களினால் தற்போது அது BSNL நிதிப்பிரிவின்
ஆய்விற்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது.
BSNL அகில இந்திய தடகளப் போட்டியில் பங்கு பெறும் ஊழியர்கள் பயிற்சி பெறுவதற்காக நாள்தோறும் நான்கு மணி நேரம் அவர்களுக்கு பணியில் இருந்து விடுப்பு அளிக்க BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
TM தோழர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச SIMலிருந்து
தொலைபேசி நிலையத்தில் உள்ள பழுது நீக்கும் பிரிவில் MDFல் உள்ள தொலைபேசியைக் கட்டணமில்லாமல் அழைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சினை நமது தமிழ் மாநில சங்கத்தால் எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
HRA வீட்டு வாடகைப்படி 78.2 சத இணைப்பின் அடிப்படையில் வழங்க வேண்டும் என மீண்டும் நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
JCM தேசியக்குழுக்கூட்டம் மார்ச் முதல் வாரமும்
BSNL வாரியக்கூட்டம் மார்ச் 4 அன்றும் நடைபெறலாம் என்று தெரிகிறது.
BSNL won't do anything for TTA cadre,its a sin cadre...we appointed as a TTA ...have to work more than that of EXECUTIVEs...have to retire as a TTA..this what management want from this cadre...no one formed any standard structure for growth of this pathatic cadre of TTAs...
ReplyDelete