Sunday, 31 December 2017
பிறந்தது புத்தாண்டு ….
பிறக்குமா?... புத்துணர்வு?…
2018…
புத்தாண்டு பிறந்து
விட்டது….
இரவிலே வாங்கியதாம்
சுதந்திரம்… எனவே…
இந்திய தேச மக்கள்..
இரவெல்லாம் தூங்காமல்…
இனிமையாய்க் கொண்டாடி
விட்டனர்…
பிறந்து விட்டது….2018
ஆனால்…
பிறக்கவில்லை….
மனதில்… இன்னும் உற்சாகம்...
தலைவிரித்தாடும்
மதவெறி…
இனவெறி…சாதிவெறி….
அதிகாரத்திற்கு
ஆசைப்படும்
அரிதார அசிங்கங்கள்…
இலஞ்சமும்... ஊழலும்...
பஞ்சமில்லாமல் பரவிடும் கொடுமை…
கூலித்தொழிலாளிகள்
கூலிக்கு அல்லாடும் துயரம்...
வயிற்றுக்குச்
சோறிடும்
விவசாயி கயிற்றில் தொங்கும் கேவலம்…
நிரந்தரத் தொழிலாளர்கள்
ஊதிய உயர்வுக்குப் போராடும் அவலம்…
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள்
ஓய்வூதிய உயர்வுக்கு ஏங்கிடும் நிலைமை…
இரவிலே வாங்கினோம்
சுதந்திரம்…
இருளிலே
இருக்கிறது இன்பம்...
இனிப்பை வழங்கு…
இருட்டிலே கொண்டாடு…
நாடு எப்படிப்
போனால் நமக்கென்ன?
Friday, 29 December 2017
பஞ்சப்படி
இணைப்பு ஓர் கானல் நீர்….
ஜனவரி
2018 முதல் 2.6 சதம் IDA
உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
தற்போது
BSNL ஊழியர்களின் ஒரே ஆறுதல் பரிசு IDA மட்டுமே. அதுவும் சில நேரங்களில் வீழ்ச்சியடைந்து
காலை வாரி விடுகின்றது. பஞ்சப்படி 50 சதத்தை தாண்டினாலே அது அடிப்படைச்சம்பளத்துடன்
இணைக்கப்பட வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்ட காலங்கள் உண்டு. இன்று பஞ்சப்படி 126.9
சதம் உயர்ந்த பின்னும் அதன் இணைப்பு பற்றி எந்த சிந்தனையோ முணுமுணுப்போ
இல்லாத நிலையே நிலவுகிறது.
2007ல் பஞ்சப்படி
68.8 சதமாக இருந்த போது
50 சதம் இணைக்கப்பட்டு பின் மிச்சமுள்ள
18.8ல் பாதியான 9.4
சதமும் சேர்த்து
78.2 (68.8+9.4) என கணக்கிடப்பட்டு
பஞ்சப்படி இணைக்கப்பட்டு
புதிய ஊதிய
மாற்றம் அமுல்படுத்தப்பட்டது.
2017ல் 2007ஐ விட ஏறக்குறைய இரு மடங்கு பஞ்சப்படி உயர்ந்த
பின்னும் அதன் இணைப்பு பேசப்படாமலே இருக்கின்றது.
இலாபம் இருந்தால்தான் சம்பள மாற்றம் உண்டு என விதிகள்
உருவாக்கப்பட்டு விட்டன. இலாபம் இருந்தால்தான் பஞ்சப்படி இணைக்கப்பட வேண்டும் என விதிகள்
உருவாகி விட்டனவா?
கானல் நீராகி
விட்டதா பஞ்சப்படி இணைப்பு?
Wednesday, 27 December 2017
BSNL புத்தாக்கமும்...BJP கடமையும்…
நாடாளுமன்றத்தில்
கேட்கப்பட்ட பல்வேறு
கேள்விகளுக்குப்
பதிலளித்த நமது இலாக்கா அமைச்சர்
BSNL மற்றும்
MTNL நிறுவனங்களின்
கடன் மற்றும் நட்டக்கணக்கைப்
பட்டியலிட்டுள்ளார்.
கடந்த மூன்று வருடங்களில் BSNL சந்தித்துள்ள
நட்டம்
2014-15 Rs.8234/- கோடி
2015-16 Rs.4875/- கோடி
2016-17 Rs.4786/- கோடி
கடந்த மூன்று வருடங்களில்
BSNL வாங்கியுள்ள கடன்
2014-15 Rs.6385/- கோடி
2015-16 Rs.7883/- கோடி
2016-17 Rs.3813/- கோடி
கடந்த மூன்று வருடங்களில்
MTNL சந்தித்துள்ள நட்டம்
2014-15 Rs.2893/- கோடி
2015-16 Rs.2005/- கோடி
2016-17 Rs.2970/- கோடி
கடந்த மூன்று வருடங்களில்
MTNL வாங்கியுள்ள கடன்
2014-15 Rs.12070/- கோடி
2015-16 Rs.13398/- கோடி
2016-17 Rs.15160/- கோடி
2016-17ம் நிதியாண்டில்
BSNL வாங்கியுள்ள கடன்
ரூ.3813/- கோடியாகும்.
அதே வேளை மிகப்பெரும்
சந்தையைக் கைவசம் வைத்துள்ள
AIRTEL நிறுவனத்தின்
கடன் செப்டம்பர் 2017 நிலவரப்படி
ரூ.91480/=
கோடியாகும்.
நமது நிறுவனத்தை
விட 24 மடங்கு
கடன் சுமையில் AIRTEL தத்தளிக்கின்றது.
மேலும் BSNL மற்றும்
MTNL நிறுவனங்களின்
புத்தாக்கத் திட்டம்
பரிசீலனையில் இருப்பதாகவும்
நமது அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
BSNL நிறுவனம்
திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது
BJP ஆட்சிக்காலத்தில்
ஆரம்பிக்கப்பட்ட பொதுத்துறையாகும்.
திரு.வாஜ்பாய்
அவர்களின் பிறந்த தினத்தை
நல்லாட்சி தினமாக
BJP கொண்டாடுகிறது.
அவரது நல்லாட்சியில்
துவங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை
நல்லபடியாக காப்பாற்ற
வேண்டியது
தற்போதைய அரசின்
கடமையாகும்.
BSNL என்ற பொதுத்துறை
BJP பெற்ற பிள்ளையாகும்.
இதைக் காக்க வேண்டியது...
BJP அரசின் கட்டாயக் கடமையாகும்.
காலம் செய்யும்
கோலம் என்ன?
பொறுத்திருந்து
பார்ப்போம்….
Monday, 25 December 2017
கூலி கொடு… கூலி கொடு…
NFTCL
ஒப்பந்த ஊழியர்களுக்கு
சம்பளம் வழங்க
நிதி ஒதுக்கீடு செய்யாத
டெல்லி bsnl corporate
நிர்வாகத்தைக் கண்டித்து..
ஒப்பந்த ஊழியர்களுக்கு
மாதந்தோறும் 7ம்தேதி
சம்பளம் வழங்கக்கோரி….
தமிழகம் தழுவிய
கறுப்புக்கொடி
கண்டன ஆர்ப்பாட்டம்
26/12/2017 - செவ்வாய் – மாலை 05 மணி
----------------------------------------------------------------------
gM அலுவலகம் – காரைக்குடி
தொலைபேசி நிலையம்
– பரமக்குடி
தொலைபேசி நிலையம்
– சிவகங்கை
தொலைபேசி நிலையம்
– இராமநாதபுரம்
----------------------------------------------------------------------
தோழர்களே… அணி திரள்வீர்…
Subscribe to:
Posts (Atom)