Saturday 16 December 2017

டிசம்பர் 17 
ஊன்றுகோல் உறுதி கொண்ட நாள்
டிசம்பர் 17...
ஓய்வூதியர்  தினம்

சமூகத்தின் நெம்புகோல்…
மூத்த குடிமக்கள்…

நெம்புகோலாம்…
மூத்த குடிமக்களின்
ஊன்றுகோல் ஓய்வூதியம்….

டிசம்பர் 17 - 1982
இந்திய தேசத்தில்…
ஓய்வூதியமென்னும்…
ஊன்றுகோல் உறுதிப்பட்ட நாள்..

ஊதியம் உயரும் போது…
ஓய்வூதியமும் உயர வேண்டும் என்னும்
சமூக நீதியை சரித்திரத்தில்…
நீதிமன்றம் நிலை நாட்டிய நாள்…

D.S.நாக்ரா தொட்டு…
இன்றளவும்
ஓய்வூதிய உயர்வுக்குப் பாடுபடும்…
ஓய்வூதியம் காத்திடப் பாடுபடும்…
தலைவர்களைப் போற்றுவோம்…

தொலைத்தொடர்பில்…
உறுதி கொண்ட நெஞ்சினராய்ப் போராடி..
ஓய்வூதியம் காத்திட்ட...
ஓய்வூதியத்தின் தந்தை
ஓ.பி.குப்தாவின் புகழ் பாடுவோம்…

மூத்த குடிகளுக்கு….
இளைய குடிகளின்…
அன்பான ஓய்வூதியர் தின நல்வாழ்த்துக்கள்… 
------------------------------------------------------------------------------------------
 ஓய்வூதியர் தினச் சிறப்புக்கூட்டம்

17/12/2017 – ஞாயிறு – காலை 11.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

-: தலைமை :-
தோழர்.S.ஜெயச்சந்திரன்
மாவட்டத்தலைவர் – AIBSNLPWA

பங்கேற்பு : தோழர்கள்

N.நாகேஸ்வரன்
மாநில உதவிச்செயலர் - AIBSNLPWA

P.முருகன்
மாவட்டச்செயலர் - AIBSNLPWA

R.பூபதி
மாவட்டப்பொருளர் - AIBSNLPWA

மற்றும் தோழர்கள்…

தோழர்களே… வருக…

No comments:

Post a Comment