Sunday 17 December 2017

ஒரே தேசம்… ஒரே திருவிழா…
ONE INDIA… ONE FESTIVAL…

2018ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் பட்டியலும், 
RH எனப்படும் விருப்ப விடுமுறை நாட்கள் பட்டியலும் 
நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

இது வழக்கமான ஒன்றுதானே என நீங்கள் கேட்கலாம். 
உற்று நோக்கினால்தான் உள்குத்துக்கள் புரியும். 

இந்த ஆண்டு CLOSED HOLIDAYS பட்டியலில்
ADDITIONAL என்ற பெயரில் மகாசிவராத்திரியும், 
ஜென்மாஷ்டமி என்ற கிருஷ்ணன் பிறந்த நாளும் சேர்க்கப்பட்டுள்ளன. 

சென்ற ஆண்டு விடப்பட்ட பொங்கல் விடுமுறை
இந்த ஆண்டு நீக்கப்பட்டு RH பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 
பொங்கும் பொங்கலை விட 
சிவலோக சிவராத்திரியே சிறந்தது 
என அரசு முடிவு செய்திருக்கலாம். 
நல்ல வேளை பொங்கல் இந்த ஆண்டு 
ஞாயிறு அன்று பொங்கப்போகின்றது. 
ஞாயிறு அன்று விழாக்கள் வந்தாலும் 
அன்றும் விடுமுறை என்று அறிவிப்பதுதான் 
இதுவரை நடைமுறையாக இருந்தது. 
இந்த ஆண்டு விடுமுறை பட்டியலில் 
ஞாயிறு அன்று வரும் விழாக்கள் இடம் பெறவில்லை. 
அடுத்த ஆண்டு விடுமுறை பட்டியலில்
பொங்கல் இடம் பெறுமா? என்பது கேள்விக்குறிதான். 

இதுவும் ONE INDIA திட்டத்தின் 
ஒரு அம்சமாக இருக்கலாம். 
ONE INDIA ONE FESTIVAL 
என்ற முழக்கம் உருவாக்கப்படலாம்.


திடிரென நினைவு வந்தது... 
மீண்டும் விடுமுறை நாட்கள் 
பட்டியலை உற்று நோக்கினோம். 
அப்பாடி...
அண்ணல் காந்தி பிறந்த நாள் 
இன்னும் அப்படியேதான் உள்ளது. 

No comments:

Post a Comment