Monday 4 December 2017

செய்து முடிப்போம்… 


ஊதிய மாற்றம் அமுலாக்கம்…
செல் கோபுரங்கள் பிரிப்பதற்கு எதிர்ப்பு…

இரண்டே இரண்டு கோரிக்கைகளுக்காக…
இந்திய தேசம் முழுவதும் BSNL தொழிலாளர்கள்…
இணைந்து… எழுந்து… டிசம்பர் 12… 13…
இரண்டு நாள் வேலை நிறுத்தம்..

கோபம் குமுறும்போது…
கோரிக்கைகள் குறையும்…

எல்லோருக்கும் தெரியும்…
இது..
இரண்டு நாளில்...
அசைந்து விட… அசந்து விட…
எளிதான… எளிமையான அரசு அல்ல…

ஆனாலும்… 
எறும்புகள் ஊர கல்லும் குழியும்…
நாமோ உழைப்பில் எறும்புகள்... 
உறுதியில் வார்த்தெடுத்த இரும்புகள்…

தொழிலாளி வர்க்கம்…
செத்து மடிவதற்கல்ல….
செய்து முடிப்பதற்கு…

உறுதியுடன் களம் காண்போம்…
உரிமைகள் வெல்வோம்…
உணர்வு கொள்வீர் தோழர்களே...

No comments:

Post a Comment