Sunday 22 July 2018


வரப்புயரட்டும்… வரம்புயரட்டும்…

சோறுடைத்த சோழநாட்டு மன்னனை வாழ்த்தும்போது…
வரப்புயர என்று வாயார வாழ்த்தினார் ஒளவையார்…
கடைநிலை... உயர்நிலை எய்தும்போது….
சகலநிலைகளும் சரிசமமாக உயரும்
என்பதே ஒளவையின் வாக்கு….

BSNL ஊழியர்களின் ஊதியப்பேச்சுவார்த்தை துவங்கி விட்டது….
DOT ஊழியர்களுக்கு இதுவே கடைசி ஊதியத்திருத்தம் என்பதால்…
எதிர்பார்ப்புக்களும் அதிகம்… ஏக்கங்களும் அதிகம்…

ஆறாவது ஊதியக்குழுவில்…
கடைசி ஊதியநிலையாக இருந்த ரூ.7000/= என்பது
ஏழாவது ஊதியக்குழுவில்  01/01/2016 முதல்…
ரூ.18000/= என்று உயர்த்தப்பட்டுள்ளது.
2.57 மடங்கு அடிப்படைச்சம்பளம் உயர்ந்துள்ளது.

தற்போது BSNLலில் 2007ல்…
இரண்டாவது ஊதிய மாற்றத்தில்…
ரூ.7760/- என்பது கடைசிநிலை ஊதியமாகும்….
01/01/2017 அன்று 120.3 சத IDAவை இணைத்து…
மொத்தச்சம்பளத்தில் 15 சத ஊதிய உயர்வு அளித்தால்…
(நிச்சயம் 15 சதம் ஊதிய உயர்வு கிட்டும் என்று நம்புவோம்…)
புதிய அடிப்படைச்சம்பளம் ரூ.19660/- ஆகும்.
ஏழாவது ஊதியக்குழு கணக்கீட்டின்படி…
அடிப்படைச்சம்பளத்தை  2.57 பெருக்கு மடங்கில் பெருக்கினால்….
புதிய அடிப்படைச்சம்பளம் ரூ.19943/= ஆகும்…

எனவே அடிமட்ட ஊழியர்களான GROUP ‘D’ ஊழியர்களின்
அடிப்படைச்சம்பளம் 01/01/2017 முதல்
ரூ.20000/= என்று உயர்த்தப்பட்டால் மட்டுமே…
கடைநிலை ஊழியர்களுக்கு நியாயம் கிட்டும்….

ஆனால் இன்று BSNLலில்
வேதனையில் உழன்று விதியை நொந்து வாழ்பவர்கள்..
GROUP ‘D’ பதவியில் உள்ள கடைநிலை ஊழியர்களே…
காரணம் ஏக்கநிலையான STAGNATION என்னும் தேக்கநிலை…
எந்த தவறும் செய்யாமல்... 
ஆண்டுதோறும்...
ஆண்டு உயர்வுத்தொகையை
ஆயிரக்கணக்கான ஊழியர்கள்
அநியாயமாக இழந்து வருகின்றார்கள்…

நாலுகட்டப்பதவி உயர்வு வந்தது….
ஆனால் அதன் பயன் பலருக்கு கிட்டவில்லை….
காரணம் தேக்கநிலை…

78.2 சத IDA இணைப்பு வந்தது….
ஆனால் அதன் பயன் பலருக்கு கிட்டவில்லை….
காரணம் தேக்கநிலை…

ஆண்டுகள் பல ஆனாலும்…
தேக்கநிலை ஏக்கநிலையாகவே தொடருகின்றது…
எனவே BASIC PAY என்னும் அடிப்படைச்சம்பளம் போலவே…
MAXIMUM என்னும் அதிகபட்ச சம்பளமும் உயர்த்தப்படவேண்டும்…
ரூ.20000/= அடிப்படைச்சம்பளம் என்றால்…
ரூ.48000/= அதிக பட்ச சம்பளமாக உயர்த்தப்பட வேண்டும்….
இல்லையேல் அடிமட்ட ஊழியர்கள்
தொடர்ந்த துயரங்களையே அனுபவிப்பார்கள்…

மூன்றாவது ஊதிய மாற்றத்தில்….
அடிமட்ட  ஊழியர்களின்…
அடிப்படைச்சம்பளம் என்னும் வரப்பு உயரட்டும்…
அதிகபட்ச சம்பளம் என்னும் வரம்பும் உயரட்டும்…

வரப்பு உயரட்டும்… வரம்பும் உயரட்டும்…
ஊதியக்குழு உறுப்பினர்களுக்கு
நமது தலைவர்களுக்கு…
நமது அன்பான வேண்டுகோள் இதுவே…

No comments:

Post a Comment