Monday 25 February 2019


துரோகங்களைத் துடைத்தெறி…

விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார்.

நம்பிக்கை வைத்தவர்
துரோகம் இழைப்பாரேயானால்…
அந்த துரோகி இறந்தவருக்கு சமம்…
என்பது வள்ளுவர் வாக்கு…

மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில்…
முனைப்போடு தோழர்கள் பங்கேற்றனர்.
அன்றாடக்கூலிகளான ஒப்பந்த தொழிலாளரும்..
தங்களது சம்பள இழப்பைப் பொருட்படுத்தாது…
உணர்வோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்…

ஆனால்… வெட்கம்… வெட்கம்… வெட்கம்…
காரைக்குடி மாவட்டத்தில்…
NFTE இயக்கத்தில்…
மாவட்டப்பொருளராக இருந்த…
தோழர்.பாலமுருகன் JE (JTO EXAM APPEARED)
(அவரைத் தோழர் என்று சொல்லக்கூட நாகூசுகிறது…)
போராட்டத்தில் கலந்து கொள்ளாது பணி செய்துள்ளார்…
பணி செய்தது மட்டுமல்ல…
போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும்…
ஒப்பந்த ஊழியர்களைப் பணிக்கு
வரச்சொல்லி கட்டாயப்படுத்தியும்…
தரமற்ற செயல்களைப் புரிந்துள்ளார்…

தோழர்கள் எவ்வளவோ எடுத்துரைத்தும்…
அவர் செவிமடுக்கவில்லை…
சிந்தை உரைக்கவில்லை…

எனவே…. 25/02/2019 அன்று கூடிய
காரைக்குடி NFTE கிளைக்கூட்டத்தில்…
தோழர். பாலமுருகனை
NFTE அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து
நிரந்தரமாக நீக்குவது என்ற தீர்மானத்தை
கிளைத்தலைவர் தோழர்.காதர்பாட்சா முன்மொழிய
கிளைச்செயலர் தோழர்.ஆரோக்கியம் வழிமொழிய
கிளைக்கூட்டம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.  

ஒரு போராட்டத்தை விமர்சிக்கும் தகுதி
அந்தப் போராட்டத்தில் கலந்து
கொண்டவர்களுக்கு மட்டுமே உண்டு…
போராட்டத்தில் கலந்து கொள்ளாமல்…
மருத்துவ விடுப்பு எடுத்தவர்களுக்கும்..
மறை கழன்றவர்களுக்கும்…
போராட்டத்தை விமர்சிக்க
எந்தவொரு தகுதியும் அருகதையும் இல்லை…

எனவே அருகதையற்றவர்களை…
இயக்கத்தில் தொடர வைப்பது…
இயக்க நலனுக்கு உகந்ததல்ல…

துரோகங்களைத் துடைத்தெறிவோம்…
துன்மார்க்க செயல்களை உடைத்தெறிவோம்…

4 comments:

  1. காலம் பதில் கூறும்

    ReplyDelete
  2. இந்த பதிவை கண்ட என் குடும்ப உறுப்பினர்கள் மிக்க சந்தோசம் அடைந்தனர் அதற்க்கு சங்கத்திற்கு நன்றிகள் பல கோடி

    ReplyDelete
  3. If he realize his historical mistake pl admit him . Time and men may change .1968 non striker became south TN leader of us. please u take care .Don't push him to OPP to us (TU)

    ReplyDelete
  4. ஊதியம் இல்லை என்றவுடன் தலைநகரில் ஆர்ப்பாட்டத்துடன் முடிந்து விட்டதா அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தகவல் இல்லையே

    ReplyDelete