Friday, 31 May 2019


தேர்தல் பணிக்குழு

8வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலை நடத்துவதற்கு
நிர்வாகத்தரப்பில் 5 பேர் கொண்ட மையக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

  திரு.அருண்குமார் – PGM (Per) – குழுத்தலைவர்
திரு. S.K.சின்கா - PGM(Admn) – உறுப்பினர்
திரு. சவ்ரவ் தியாகி – Sr.GM(Estt) – உறுப்பினர்
திரு. A.M.குப்தா – GM (SR) – உறுப்பினர்
திரு. A.K. சின்கா – DGM (SR) – ஒருங்கிணைப்பாளர்

மேற்கண்ட மையக்குழு தொழிற்சங்கங்களுடனும், தொழிலாளர் ஆணையருடனும் தேர்தல் சம்பந்தமான பிரச்சினைகளைக் கையாளும்.

முதன்மைத் தேர்தல் அதிகாரியாக 
திருமதி. சமிதா லுத்ரா GM(Rectt)
நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் பற்றிய முறையான அறிவிப்பு 
03/06/2019 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Thursday, 30 May 2019

வாழ்க... பல்லாண்டு


இன்று 31/05/2019
பணிநிறைவு பெறும்
கடமை உணர்வு மிக்க
கணக்கு அதிகாரி...
என்றும் இளமை...
எல்லோரிடமும் இனிமை...
எப்போதும் கடமை...
NFTE முன்னாள் கிளைச்செயலர்...
அருமைத்தோழர்.
G.R. நாகராஜன்
அவர்களின் பணிநிறைவுக்காலம்
இளமையாய்... இனிமையாய்...
அமைந்திட நல்வாழ்த்துக்கள்....

வாழ்த்துக்களுடன்...
NFTE காரைக்குடி மாவட்டச்சங்கம்
 -------------------------------------------------------------------
பணிநிறைவு பாராட்டு விழா
31/05/2019 – வெள்ளி – காலை 11.00 மணி
அமராவதி மகால் – காரைக்குடி.
தோழர்களே... வாரீர்...

வாழ்த்து சொல்ல : 9486101966

பணி நிறைவு வாழ்த்துக்கள்

31/05/2019 காரைக்குடி மாவட்டத்தில்
பணிநிறைவு பெறும் அருமைத்தோழர்கள்

G.R.நாகராஜன் 
கணக்கு அதிகாரி/காரைக்குடி

G.இராஜாமோகன் 
TT/பாம்பன்

AL.மாரிமுத்தன்  
TT/குமாரவேலூர்

விருப்ப ஓய்வில் செல்லும்
A.சண்முகம் 
TT/ஒப்பிலான்

ஆகியோரது பணிநிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க  அன்போடு வாழ்த்துகின்றோம்...

அன்புடன்
NFTE தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி

Wednesday, 29 May 2019


தேர்தல் செய்திகள்

BSNLலில் 8வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல்
நடத்துவதற்கானப் பணிகள் துவங்கியுள்ளன.
ஜூன் 3 அன்று  தேர்தல் அறிவிப்பு வெளியாகும்
என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
19 சங்கங்கள் களத்தில் உள்ளன.
தேர்தலில் பங்கு பெற விரும்பாத சங்கங்கள்
ஜூலை 18க்குள் விலகிக்கொள்ளலாம்.
தேர்தல் செப்டம்பர் 16 அன்றும்...
வாக்கு எண்ணிக்கையும் முடிவுகள் அறிவிப்பும்
செப்டம்பர் 18 அன்றும் நடைபெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
 -----------------------------------------------------------
தற்போதைய சங்க அங்கீகார விதிகளின்படி
50 சத வாக்குகளுக்கு மேல் ஏதேனும் ஒரு சங்கம் பெற்றால்
அந்த ஒரு சங்கம் மட்டுமே 
அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக அறிவிக்கப்படும்.
ஏனைய சங்கங்கள் எத்தனை சத வாக்குகள் பெற்றாலும்
இரண்டாவது சங்கம் என்ற அங்கீகாரம் கிட்டாது. 

மைசூரில் டிசம்பர் 2018ல் நடந்த
BSNLEU அகில இந்திய மாநாட்டில் மேற்கண்ட அங்கீகார விதியில்
திருத்தம் வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது.

50 சதத்திற்கும் கூடுதலாக ஏதேனும் ஒரு சங்கம்  வாக்குகள் பெற்றாலும்
இரண்டாவது சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று
BSNLEU தீர்மானம் இயற்றி நிர்வாகத்திடம் அளித்திருந்தது.
ஆனால் இதுவரை நிர்வாகம் இது பற்றி பரிசீலிக்கவில்லை.

எனவே 27/05/2019 அன்று
BSNLEU பொதுச்செயலர் தோழர்.அபிமன்யு அவர்களும்...
NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்களும்
CMD அவர்களை சந்தித்து தேர்தல் விதிமுறைகளில்
மேற்கண்ட திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும்
என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவன ஈர்ப்பு தினம் 

N F T E 
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்

தமிழ்மாநிலச்சங்க அறைகூவலின்படி...
மாவட்டம் தழுவிய 
கவன ஈர்ப்பு தினம்

04/06/2019  - செவ்வாய்க்கிழமை – மதியம் 12.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
தொலைபேசி நிலையம் – பரமக்குடி
தொலைபேசி நிலையம் – சிவகங்கை
 --------------------------------------------------------
கோரிக்கைகள்

BSNL நிர்வாகமே...

  • சம்பளப்பிடித்தங்களை சரியான நேரத்தில் செலுத்து...
  • வங்கிகள் அபராதவட்டி விதிக்கும் செயலைத் தடுத்து நிறுத்து...
  • வருவாய் இல்லாத தொலைபேசி நிலையங்களை இழுத்து மூடு...
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிட உரிய நிதி வழங்கு...


சென்னைக்கூட்டுறவு சங்க நிர்வாகமே...

  • வெள்ளனூர் நிலத்தைக் கொள்ளையடித்துக் கூறுபோடுவதை நிறுத்து...
  • கடன் கேட்டுக் காத்திருக்கும் உறுப்பினர்களுக்கு உடனடியாக கடன் வழங்கு...
  • இறந்து போன உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு  பணப்பலன்களை உடனடியாகப் பட்டுவாடா செய்...
  • ஓய்வு பெற்ற மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியவர்களின் கணக்குகளை முடித்து அவர்களுக்கு சேரவேண்டிய தொகையை உடனடியாகப் பட்டுவாடா செய்...

தோழர்களே...
கோபக்கைகளை உயர்த்துவீர்...
கோரிக்கைகளை முழங்குவீர்...

தோழமையுடன்...
NFTE மற்றும் NFTCW மாவட்டச்சங்கங்கள் - காரைக்குடி

Monday, 27 May 2019


செ ய் தி க ள்

8வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் உத்தேசமாக 2019  செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் அதற்கான அறிவிப்பு ஜூன் 3 அன்று வெளியாகும் என்றும் 27/05/2019 அன்று டெல்லியில் நடைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. தற்போதுள்ள தேர்தல் விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாத சூழலில் பழைய விதிகளின்படியே தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுகின்றது.
------------------------------------------------------------------------------------
 வணிகப்பகுதி இணைப்பில் இணைக்கப்படும் மாவட்டத்தின் மாவட்டச்சங்கம் அப்படியே நீடிக்க வேண்டும் எனவும்… JCM தலமட்டக்குழு தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் BSNLEU சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நடைபெறவுள்ள 8வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் SSA அளவில் நடைபெறுமா? அல்லது வணிகப்பகுதி அளவில் நடைபெறுமா? என்பதைப் பொறுத்தே சங்கங்களின் அமைப்புக்கள் நீடிக்க முடியும் என்று  தோன்றுகிறது. வணிகப்பகுதி என்று உருவாகி விட்டபின் SSA அளவில் சங்கங்கள் தொடர்ந்து செயல்படுவது அர்த்தமற்றதாகும்.
 ------------------------------------------------------------------------------------
ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 58 ஆகக்குறைக்க அரசுக்கு DOT பரிந்துரை செய்ய உள்ளதாக பல்வேறு செய்திகள் உலா வந்தன. இத்தகைய முயற்சி விதிகளுக்கு முரணானது என நமது மத்திய சங்கம் DOT செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது.
 ------------------------------------------------------------------------------------
நமது மத்திய சங்க விரிவடைந்த மத்திய செயற்குழு மைசூரில் 08/06/2019 முதல் 10/06/2019 முதல் நடைபெறுகின்றது. அதற்கான சிறப்பு சிறுவிடுப்பு உத்திரவு வெளியாகியுள்ளது.
 ------------------------------------------------------------------------------------
இந்தியாவில் தொடர்ந்து எண்ணிக்கையில் கூடிவந்த செல்போன் சந்தாதாரர்  எண்ணிக்கை மார்ச் மாதம் குறையத்தொடங்கியுள்ளது. 118 கோடியாக இருந்த எண்ணிக்கை 116 கோடியாக குறைந்துள்ளது. வோடாபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் செல்போன் சந்தாதாரர் எண்ணிக்கை 3 கோடி அளவிற்கு குறைந்துள்ளது. ஆனாலும் வழக்கம்போல் JIO நிறுவனம் 95 லட்சம் சந்தாதாரர்களை மார்ச் மாதம் கூட்டியுள்ளது.
 ------------------------------------------------------------------------------------
போன்மெக்கானிக் இலாக்காத் தேர்வு 08/09/2019 அன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 3207 காலியிடங்கள் உள்ளன. ஆனால் தகுதி உள்ள தோழர்கள் 100 பேர் கூட தமிழகத்தில் தேறமாட்டார்கள். காரணம் கல்வித்தகுதி SSLC என்பது குறைக்கப்படவில்லை. போகாத ஊருக்கு சாலை போடுவதால் என்ன பயன்?….
 ------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் 04/06/2019 அன்று NFTE சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நாள் நடைபெறுகின்றது.

Friday, 24 May 2019


பல்லாண்டு வாழ்க... பயனுற வாழ்க...

தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரையிலே...
தொழிற்சங்கம் வளர்த்த தலைவன்...

நெற்றிக்கண்ணைத் திறப்பினும்...
நியாயம் கேட்க அஞ்சிடாத  நக்கீரன்...

வேதனைகளில் வீழ்ந்திடாத வீரன்....
சோதனைகளில் சுடர்முகம் காட்டிய தீரன்...

தோழர்களிடம் இன்முகம் காட்டிய தோழன்...
சாதனைகளைச் சத்தமின்றி செய்த சரித்திரன்..

உரிமைக்கு குரல் கொடுத்த உணர்வாளன்...
ஒற்றுமைக்கு உருக்கொடுத்த சீராளன்...

பாதை மாறாத கொள்கைப் பற்றாளன்...
பதவிகளை  நாடாத தூய பரிசுத்தன்...

NFTE இயக்கத்தின் பெருமைமிகு போராளி...
BSNL நிறுவனத்தின் கடமைமிகு தொழிலாளி...

கண்ணியமிகு தலபதி... கட்டுப்பாடுமிகு தளபதி....
நான்மாடக்கூடலின் நாணயமிகு தலைவன்...
அருமைத்தோழர் மாவட்டத்தலைவர்...
சிவகுருநாதன் அவர்கள் ...
பல்லாண்டு காலம்...பல நூறு காலம்...
மண் பயனுற... மதுரை  பயனுற
வாழ்வாங்கு வாழ்ந்திட... வாழ்த்துகின்றோம்...

அன்புடன் வாழ்த்தும்...
NFTE - காரைக்குடி மாவட்டச்சங்கம்

Thursday, 23 May 2019

மக்களவைத் தேர்தல் 


மக்களவைத் தேர்தல்
 ---------------------------------
மக்களுக்கான ஆட்சி...
மக்களால் நடத்தப்படும் ஆட்சி...
மக்கள் நலன் காக்கும் ஆட்சி...
மதவெறி கொள்ளா மாண்புமிகு ஆட்சி...
மக்கள் சொத்தைக் காக்கும் ஆட்சி..
மகாத்மா வழி செல்லும் ஆட்சி...
மலரும் என்று நம்பியிருந்தோம்...

இதோ மீண்டும்...
தனவணிகர் நலன் காக்கும்....
தாமரையின் ஆட்சியே மலர்ந்துள்ளது....
பத்துக் காகங்களின் கூக்குரல் முன்னே...
எட்டுக் குயில்களின் குரலோசை அடங்கிப்போகும்...
இதுவே நம் ஜனநாயகம்...

மே 23 கடந்து விட்டது...
வென்றவர்கள்... 
கிரீடங்களைச் சுமக்கின்றார்கள்...
மக்களோ வழக்கம் போல்... 
தங்கள் சுமைகளை...

காந்தி தேசம்...
காவி தேசமாகி விட்டது...

இனி... நாம்...
இமைகள் சோரமாட்டோம்...
சுமைகளால் வீழமாட்டோம்...
உணர்வுகளைக் கூர் தீட்டுவோம்...
உரிமைகளுக்காய் போராடுவோம்...
காந்தி தேசம்... மீட்டிட...
மக்கள் சொத்தைக் காத்திட...
அகிம்சை வழியில்...
அயராமல் செல்வோம்... 

Saturday, 18 May 2019


சிலையாகிப் போனவனே...

நீ...
தொலைத்தொடர்பு தினத்தில் பிறந்தாய்...
நாங்கள்...
தொடர்புகளைத் தினம் தினம் தொலைக்கின்றோம்...

நீ...
நேர்மையை  மூச்சாகக் கொண்டாய்...
நாங்கள்...
நேர்மையின் மூச்சைக் கொன்றோம்...

நீ...
தெருக்கோடி மனிதர்களைப் பற்றி சிந்தித்தாய்...
நாங்கள்...
கோடிகளை சம்பாதிக்க கேடிகளாய்  சிந்திக்கின்றோம்...

நீ...
கூட்டுறவாய் வாழ்ந்தாய்...
நாங்கள்...
கூட்டுறவில் வாழ்கின்றோம்...

நீ...  சிலையாகி விட்டாய்...
நாங்கள் ... பிழையாகி விட்டோம்... 

SORRY... COMRADE...  JEGAN

Tuesday, 14 May 2019

S S A  இணைப்பு
தமிழகத்தில் 6 சிறிய மாவட்டங்களை அருகில் உள்ள பெரிய மாவட்டங்களுடன் இணைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி திருச்சியில் 13/05/2019 அன்று
NFTE மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடைபெற்றது.
------------------------------------------------------------------
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

தற்போதைய சூழலில் SSA இணைப்பு என்பது BSNL நிறுவனத்திற்கு எந்தப்பலனும் அளிக்காது. மாறாக தற்போதைய சூழலையும் கெடுத்து விடும். எனவே BSNL நிர்வாகம் மாவட்டங்கள் 
இணைப்பு என்பதைக் கைவிடவேண்டும்.

அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக இது பற்றிக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இணைப்பு என்பது உறுதி செய்யப்பட்டால் அனைத்து சங்கங்களுடன் கலந்து 
அடுத்த கட்ட நடவடிக்கை முடிவு செய்யப்படும்.
-----------------------------------------------------------------
மாவட்டங்கள் இணைப்பினால் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என நிர்வாகம் 2015ல் தெளிவுபட உத்திரவிட்டுள்ளது. உபரியாக உள்ள ஊழியர்கள் SALES AND MARKETING பிரிவில் பயன்படுத்தப்படுவார்கள். எனவே ஊழியர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களது சேவை பணி நிறைவு பெறும் வரை  
அந்தந்த மாவட்டங்களிலேயே தொடரும்.

சங்கங்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தாலும் 
நிர்வாகம் மாவட்டங்கள் இணைப்பை வேகமாக முடுக்கி விட்டுள்ளது. எனவே தாமதம் ஆனாலும் மாவட்டங்கள் இணைப்பு நடந்தேறும் 
என்பதே இன்றைய நிலையாக உள்ளது.