Monday 6 May 2019


கூட்டுறவு சங்க(ட)ம் எதிர்த்து 
BSNLEU - NFTE ஆர்ப்பாட்டம்

ஊழலின் ஒட்டு மொத்த அடையாளம்...
சென்னைக் கூட்டுறவு சங்கத்தின்
ஊழலைக் கண்டித்து.... உன்மத்தம் கண்டித்து...
அலட்சியம் கண்டித்து.. அடாவடித்தனம் கண்டித்து..
கடன்பட்டு வாழும்... கஷ்டப்பட்டு வாழும்...
 உறுப்பினர்களின் நலனுக்கு எதிரான 
விரோதப் போக்கைக் கண்டித்து
BSNLEU – NFTE இணைந்த
ஆ ர் ப் பா ட் ட ம்
10/05/2019 – மதியம் 01.00 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி
-------------------------------------------------------------
கூட்டுறவு சங்க(ட) நிர்வாகமே...

பணியில் இருக்கும்போது இறந்து போன ஊழியரின் கணக்குகளை உடனடியாக  முடித்து வை. அவர்களது வாரிசுக்கு சேரவேண்டிய தொகையை தாமதமின்றிச் செலுத்து...

ஓய்வு பெற்ற ஊழியரின் கணக்குகளை முழுமை செய்து அவர்களது கணக்கில் சேரவேண்டிய பணத்தைச் செலுத்து..

பல மாதங்களாக தனிநபர்க்கடனுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் பல நூறு தோழர்களுக்கு உடனடியாக கடன் தொகையை வழங்கு... 

சங்கப் பாரபட்சமின்றி... வேண்டியவர் வேண்டாதவர் பாரபட்சமின்றி... விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக கடன் தொகையை வழங்கு...

உறுப்பினர்களுக்கு கடன் கொடுக்க வக்கில்லாவிட்டால்...
அவர்களது மாதாந்திரப் பிடித்தத்தை ரத்து செய்...

தோழர்களே...
நம் வியர்வையை உறிஞ்சி...
இரத்தத்தை உறிஞ்சி... வளர்ந்தது கூட்டுறவு சங்கம்...
இனியும் நம்மை உறிஞ்ச அனுமதிக்கலாமா?
அணி திரள்வீர்... ஆர்ப்பரிப்பீர்...

2 comments:

  1. நீண்ட காலத்திற்கு பிறகு போர்க்குணத்தோடு களம் புக எடுத்த முடிவைப் பாராட்டுகிறேன். தோழர்.ஜெகன் படத்தைப் போட்டு பிழைப்பு நடத்தும் வேஷதாரிகளின் முகமூடி கிழியட்டும். கூட்டுக் கொள்ளைக்குத் துணைபோகும் போலித் தலைவர்களை தோலுரிக்கும் பணி காரைக்குடியில் தொடங்கி இரூப்பது பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  2. கபடதாரிகளின் வேகத்தை கலைக்க பிள்ளையார் சுழி போட்ட காரைக்குடிக்கு சபாஷ்

    ReplyDelete