Thursday 9 May 2019


கூட்டுறவு சொத்து குலநாசம்...

சிவன் சொத்து குலநாசம் என்பது பழமொழி...
சிவகோத்திரம் எனப்படும் தொழிலாளர்களின் சொத்துக்களை சூறையாடுவோரின் குலமும் நிச்சயமாக இறுதியில்
நாசமாகத்தான் போகும் என்பதில் ஐயமில்லை.

சென்னைக்கூட்டுறவு சங்கம்
பாவப்பட்ட ஊழியர்களின் வட்டிப்பணத்தில் உருவானது.
பலருடைய நலனுக்காக உருவாக்கப்பட்ட  கூட்டுறவில்
கூடாத உறவுகள் உருவாகி ஊழியர் நலன்கள்
முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

தேனெடுத்தவன் கையை நக்குவான்
என்பது கிராமத்துப் பழமொழி.
முன்பெல்லாம் கூட்டுறவு சங்கத்தை நடத்திய தலைவர்கள்
தேன்பட்ட கையை யாருக்கும் தெரியாமல்
நக்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இன்றோ...
தேன்பட்ட கையை அல்ல...
அந்த தேன்கூடு இருக்கும் மரத்தையே
நக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழகத்தில்... அகில இந்திய அளவில்
எந்தவொரு நிகழ்வு நடந்தாலும்
உறுப்பினர்களின் சொத்து நன்கொடை என்ற பெயரில்
அள்ளி அள்ளிக் கொடுக்கப்படுகின்றது
அவர்களது அப்பன் வீட்டுப் பணத்தைப் போல...

இதில் யாரும் விதிவிலக்கல்ல...
தொழிலாளியின் ரத்தத்தை நக்கிக்குடிப்பதில்  
யாரும் சளைத்தவர்கள் அல்ல...

வெள்ளனூர் நிலத்தை உறுப்பினர்களுக்குப்
பிரித்துக் கொடுப்போம் என்றார்கள்.
கலர் கலராக கார்டு அடித்துக் கொடுத்தார்கள்.
கடைசியில் கருப்பு வெள்ளையில்  
உறுப்பினர் நெற்றியில் நாமத்தை இட்டனர்.
விதவிதமான கூட்டணிகள்...
விதவிதமான வாக்குறுதிகள்...
அத்தனையும் போலிகள்...
அசல் பித்தலாட்டங்கள்...

இன்று சாதாரன உறுப்பினர்
தனது மகளின் திருமணத்திற்கு...
பிள்ளைகளின் கல்விச்செலவிற்கு..
குடும்பத்தேவைகளுக்கு கடன் கிடைக்காமல்
திண்டாடும் நிலை உருவாகி விட்டது.
கடன் கிடைக்காததற்குப்
பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
கொடுத்த கடன் சரிவரப் பிடித்தம் செய்து கொடுக்கப்படுவதில்லையாம்.
காரைக்குடியில் நூறுசதம்
உறுப்பினர்களிடம் இருந்து கடன்வாங்கிய தொகை
பிடித்தம் செய்து தரப்படுகின்றது.

54 சதம் மட்டுமே RECOVERY என்பது
ஒரு கடைந்தெடுத்த... தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யாகும்.
எனவே வாங்கிய கடனை அநியாய வட்டியோடு
மாதந்தோறும் செலுத்தும் அப்பாவித்தோழன்
தன் தேவைகளுக்கு கடன் கிடைக்காமல் திண்டாடுவது
மிகப்பெரிய கொடுமையாகும். அநீதியாகும்.
இதற்கு யார் என்ன காரணம் சொன்னாலும் ஏற்புடையதல்ல..
இந்த அநீதி எதிர்த்து BSNLEU சங்கம்
கூட்டுறவு சங்கம் முன்பாகப் போராட்டம் நடத்தியுள்ளது.
இன்று காரைக்குடியில் NFTE – BSNLEU
இணைந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. 

வங்கிக்கடன் புரிந்துணர்வு புதுப்பிக்கப்படாத சூழலில்...
GPF எப்போது கிடைக்கும் என்பது தெளிவில்லாத நிலையில்...
புதிய சம்பளம்... ஊதியநிலுவை என எதுவுமே கிட்டாத நிலையில்... ஊழியர்களுக்கு ஒரே வழி... கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறுவதுதான்.
எனவே உடனடியாக ஊழியர்களுக்கு கடன் தொகை வழங்கப்படவேண்டும் என்பதுவே நமது கோரிக்கை.

தங்களது தேவைகளுக்காக...
10 ஏக்கர் நிலத்தை விற்றது போல்... 
இன்னும் ஒரு 10 ஏக்கர் நிலத்தை விற்று உறுப்பினர்களுக்கு
கடனை வழங்கினாலும் ஆட்சேபணையில்லை.
அதை விடுத்து கூட்டுறவு சங்கம் என்பது
கூட்டுறவாய் கொள்ளையடிக்க மட்டுமே என்று செயல்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பாவப்பட்டவர்களாக இருக்க முடியாது.
சிவன் சொத்தைக் கொள்ளையடிப்பவர்கள்...
உறிஞ்சி வாழ்பவர்கள் ஒருநாள்
தங்கள் குலத்தோடு நாசமாவார்கள்
என்பது மட்டும் உறுதி.. அறுதி...

2 comments:

  1. தேன் கூட்டில் வரும் தேன் முழுவதையுமே நோக்கிக் கொண்டிருப்பவர்கள் யார் யார் என்பது தெரியுமா? காரைக்குடி கேள்விக்கு பதில் எங்கிருந்து வருகிறது பார்த்தீர்களா? பழைய இயக்குனர் தவறுக்கு இவர்கள் சிலுவை சுமக்கிறார்களாம். எப்படியோ சிலுவையில் அறையப்படப் போகிறவர்கள் யார் யார்? பார்ப்போம்! கூட்டுக் கொள்ளைக்குத் துணைபோகும்- மாபெரும் தலைவர்களை தொழிலாளிக்கு அடையாளம் காட்டத் துணிந்த காரைக்குடித் தோழர்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நக்கிக் கொண்டிருப்பவர்கள் என திருத்தி படிக்கவும்.

    ReplyDelete