பணி நிறைவு வாழ்த்துக்கள்
AIBSNLEA
அதிகாரிகள் சங்கப்பொதுச்செயலர்
அருமைத்தோழர்
S. சிவக்குமார்
அவர்களின் பணி நிறைவுக்காலம்
சீரோடும் சிறப்போடும் விளங்க
வாழ்த்துகின்றோம்.
--------------------------------------------------------------------
தஞ்சையில் தன் சங்கப்பணி தொடங்கினார்....
தலைநகரில் தன் பணி முடிக்கின்றார்....
என்கடன் பணி செய்வதே
என்றுரைத்து....
இந்திய தேசம் முழுவதும்
வலம் வந்தார்...
அதிகாரிகள் நலம் பெற...
BSNL வளம் பெற... நாளும்
பொழுதும் ...
தன் உழைப்பை வியர்வையை
நல்கினார்...
அதிகாரிகள் சங்கத் தலைவராக
இருந்தாலும்...
அடிமட்ட ஒப்பந்த ஊழியர்கள்
பிரச்சினை வரை
தனிக்கவனம் செலுத்தி
பேருதவி செய்தார்...
தீர்த்து வைத்த தனிநபர்
பிரச்சினைகள் ஏராளம்....
நிர்வாகத்திற்கு எழுதிக்
குவித்த கடிதங்கள் தாராளம்...
BSNL ஊழியர்களின் ஒவ்வொரு
மாத
சம்பளப்பட்டுவாடாவிலும்
அவரது பங்கு எதிரொலிக்கும்...
தலைநகர் செய்திகள் அவரிடமிருந்தே....
தேசம் முழுவதும் FORWARD ஆகும்....
BSNLக்கு DOT தரவேண்டிய 39 ஆயிரம் கோடி...
அவரது அழுத்தத்தினாலே
அகில இந்திய அளவில்
அனைவருடைய கோரிக்கையானது...
AUAB அனைத்து சங்க ஒற்றுமைக்கு
அவரது பங்களிப்பு மகத்தானது....
கொண்ட கொள்கையில் உறுதியானவர்....
கூறும் கருத்தில் தெளிவானவர்....
இடைவிடாத பேச்சிற்கும்...
நடைவிடாத எழுத்திற்கும்
என்றும் சொந்தக்காரர்...
நட்பில்... பாசத்தில்....
தோழமையில்...
என்றும் நெஞ்சிற்கு இதமானவர்....
அவரது பணி நிறைவுக்காலம்
அவரது பொதுவாழ்விற்கு
மேலும் வலு சேர்க்கட்டும்...
புகழ் சேர்க்கட்டும்...
தலைநகர் டெல்லியில்....
செயல்குமாராக செயல்பட்ட
தோழர் சிவக்குமார் அவர்கள்
வாழ்க பல்லாண்டு....