JCM மாநிலக்குழு கூட்டம்
செப்டம்பர் 2019ல் நடைபெற்ற
8வது உறுப்பினர் சரிபார்ப்பிற்குப் பின்பாக... மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு தற்போது
தமிழ்நாடு JCM மாநிலக்குழு கூட்டம் இன்று 14/07/2021 நடைபெறவுள்ளது. காணொளி வாயிலாகவும்,
சென்னையில் உள்ள தோழர்கள் நேரிடையாகவும் கலந்து கொள்கின்றனர். 13/07/2021 அன்று
BSNLEU மற்றும் NFTE மாநிலக்குழு உறுப்பினர்கள்
பங்கேற்ற JCM முன்னோட்டக் கூட்டம் தோழர். நடராஜன் அவர்கள் தலைமையில் காணொளிக்காட்சியாக
நடைபெற்றது.
கீழ்க்கண்ட பிரச்சினைகள்
RJCMல் விவாதிக்கப்படவுள்ளன...
------------------------------------------
தரைவழி தொலைபேசி இணைப்புக்கள்
நாளும் குறைந்திடும் அபாயம்...
அகன்ற அலைவரிசை, மற்றும்
செல்சேவையில் உள்ள குறைபாடுகள்...
FTTH இணைப்புக்கள் கொடுப்பதில்
உள்ள பிரச்சினைகள்...
நாளும் குறைந்து வரும்
Mobile வாடிக்கையாளர் எண்ணிக்கை...
செல்கோபுரங்கள் சரிவர
பராமரிப்பின்மை மற்றும் சேவைக்குறைபாடு..
பிரிவு II மற்றும்
III வாடிக்கையாளர் சேவைமையங்களைக் கையாளுதல்.
தொய்வடைந்த தூய்மைப்பணி...
நாற்றமெடுக்கும் அலுவலகங்கள்...
காவல்பணி உள்ளிட்ட உள்கட்டமைப்பு
பராமரிப்பு பணிப்பிரச்சினைகள்
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை
பிரச்சினைகள்..
ஊழியருக்கு சலுகை கட்டணத்தில்
FTTH இணைப்புக்கள்...
18 ஆண்டு சேவை முடித்தோரின்
சேவைக்குறிப்பேடு ஆய்வுப்பணி.
சோப் மற்றும் துண்டு
போன்றவற்றிற்காக பணப்பட்டுவாடா.
தவறுதலாக பிடிக்கப்பட்ட
சம்பளத்தொகையை திருப்பித் தருதல்...
JCM தலமட்டக்குழு மற்றும்
பணிக்குழு கூட்டங்களை நடத்துதல்...
ஊழியர் குடியிருப்புக்களை
முறையாகப் பராமரித்தல்..
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை
அந்தந்த GMகள் முறையாக சந்தித்தல்...
இத்துடன் முந்தைய கூட்டங்களில்
விவாதிக்கப்பட்டு தேங்கியுள்ள பிரச்சினைகள்.
No comments:
Post a Comment