தொலைபேசிக்கட்டணம்
நேரடி வசூல்
வாடிக்கையாளர் சேவை மையங்கள் இல்லாத
தொலைபேசி நிலையங்களில் உள்ள BSNL வாடிக்கையாளர்கள்
தங்களது தொலைபேசிக்கட்டணத்தை செலுத்த நீண்ட தூரப்பயணமும் நிறைய நேர விரயமும் செய்ய வேண்டியிருந்தது.
துணைப்பொதுமேலாளர்(நிர்வாகம்)
மற்றும் துணைப்பொதுமேலாளர்(நிதி)
ஆகியோர் நடத்திய அனைத்து தொழிற்சங்க கூட்ட முடிவின்படி
மார்ச் மாதம் முதல் காரைக்குடி மாவட்டத்தில்
வாடிக்கையாளர் சேவை மையங்கள் இல்லாத தொலைபேசி நிலையங்களில் மாதம் ஒருமுறை நேரில் சென்று தொலைபேசிக்கட்டணம் வசூல் செய்யும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப்பணியில் ஈடுபடும் தோழர்களுக்கு
உணவுப்படியாக நாளொன்றுக்கு ரூ.100/= வழங்கப்படும்.
பயணத்திற்கு இலாக்கா வாகன வசதி அளிக்கப்படும்.
நமது தோழர்கள் இந்தப்பணியில் உளப்பூர்வமாக ஈடுபட வேண்டும்.
மறுதலிப்பது மாண்புடையதல்ல. தோழர்கள் மறுதலிக்கும் இடங்களில் நமது கிளைச்செயலர்கள் இந்தப்பணியைச் செய்திட வேண்டும். கிளைச்செயலரும் மறுதலித்தால் மாவட்டச்செயலர் தொலைபேசிக்கட்டண வசூல் பணியில் ஈடுபடுவார்.
இன்றைய சூழலில் வாடிக்கையாளர்களை வசப்படுத்துவது..
BSNLஐ வலுப்படுத்துவது நமது கடமையாகின்றது.
BSNLஐகாப்போம் என்ற மேடை முழக்கத்தோடு ..நில்லாமல்
களப்பணி ஆற்றுதல்.. காரியம் முடித்தல்
என்பதனையும் மனப்பூர்வமாக செய்து முடிப்போம்..
No comments:
Post a Comment