போக்குவரத்துப்படி
நீதி..பாதி.. அநீதி.. பாதி..
மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்துப்படி TRANSPORT ALLOWANCE உயர்த்தப்பட்டுள்ளது. JCM தேசியக்குழுக்கூட்டத்தில் நமது மத்திய சங்கம் இப்பிரச்சினையை எழுப்பியதன் அடிப்படையில் BSNL நிர்வாகம் போக்குவரத்துப்படியை குறைந்த பட்சம் ரூ.1000/= என்று உயர்த்தி உத்திரவிட்டுள்ளது. இந்த உத்திரவு 11/07/2014ல் இருந்து அமுலுக்கு வரும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்துப்படி உயர்த்தப்பட்டது மகிழ்வுதான். ஆயினும் மகிழ்ச்சி மகிழ்ச்சியாய் இல்லை..
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசில் போக்குவரத்துப்படி ரூ.1000/= அதற்கு உரிய DAவுடன் சேர்த்து வழங்கப்படுகின்றது. BSNL நிர்வாகமோ ரூ.1000/= மட்டுமே வழங்கப்படும் என்று உத்திரவிட்டுள்ளது.
1000 வழங்குவது நீதி..
IDAவை மறுப்பது அநீதி..
07/05/2010 ஊதிய உடன்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து BSNL ஊழியர்களுக்கும் போக்குவரத்துப்படி உயர்வு 01/01/2012 அன்று
மறு பரிசீலனை செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் உயர்த்தப்பட்ட போக்குவரத்துப்படி 11/07/2014 முதல் அமுலுக்கு வரும் என்று BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
01/01/2012ல் இருந்து வழங்குவது நீதி.
11/07/2014ல் இருந்து வழங்குவது அநீதி..
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் சலுகையில் கூட கைவைக்கும்
நமது ஏமாற்றுத்திறனாளிகளின் சாதுர்யம் துடைத்தெறியப்பட வேண்டும்.
நீதி பாதி.. அநீதி பாதியாக வெளியிடப்பட்டுள்ள
நம் BSNL ஆளவந்தார்களின் உத்திரவு மாற்றப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் நியாயம் வெல்லப்பட வேண்டும்...
No comments:
Post a Comment