காணாமல் போன... காரைக்குடி...
டெலாய்ட்டியோ.. டிகால்ட்டியோ..
என்ன கருமமோ.. வாயிலேயே.. நுழையவில்லை.
BSNLஐ நட்டத்திலிருந்து மீட்டு...
தூக்கி நட்டமாக நிறுத்தப்போகின்றார்களாம்...
அதற்காக சில பல கோடிகளைக்கொட்டி
கரீம் நகர் எங்கிருக்கு?..
காரைக்குடி எங்கிருக்கு?..
என்ற பூகோள அறிவு கூட இல்லாத
சில சில்லுண்டிகளிடம் இருந்து
அறிக்கை பெறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் மீது
அனைத்து மாநில தலைமைப் பொதுமேலாளர்கள்
ஆகஸ்ட் மாதம் விவாதம் நடத்துவார்களாம்.
சரி.. நடப்பது.. நடக்கட்டும்..
நம்ம கதைக்கு வருவோம்..
இரண்டு நாள் நாம் ஊரில் இல்லை...
நமது தோழர்கள் தொலைபேசியில்
அவசரமாக அழைத்தார்கள்..
" அண்ணே.. காரைக்குடியைக் காணவில்லை.."
என்று பதட்டத்தில் கூறினார்கள்.
அட இப்பத்தானே.. வந்தேன்..
அதற்குள் காணாமல் போச்சா?
என்று நமக்கு தலை சுற்றல்.
நமது பாட்டன் சொத்து கச்சத்தீவை
இலங்கைக்கு தாரை வார்த்தது போல...
காரைக்குடியையும் தாரை வார்த்து விட்டார்களா?
என்ற கவலை பிறந்தது.
திருச்சி பேருந்து நிலையம் வந்து
காரைக்குடி வண்டியை பார்த்தபின்தான்
நமக்கு நிம்மதியே வந்தது.
டெலாய்ட்டி அறிக்கையை
தேடித்தேடி பார்த்தபின்புதான் தெரிந்தது
கரீம் நகர் தமிழ்நாட்டிலும்,
காரைக்குடி UP-EAST
கணக்கிலும் காட்டப்பட்டுள்ளது.
கங்கை காவிரி இணைப்புக்கு
இது முன் ஏற்பாடோ என்னவோ..
இனி கம்பன் விழா
கரீம் நகரில் ஒலிக்கலாம்..
சம்ஸ்கிருத வார விழா
காரைக்குடியிலும் நடக்கலாம்..
ஏதோ.. இந்தியாவுக்குள் காரைக்குடி உள்ளதே..
என்று நிம்மதி அடைய வேண்டி இருந்தது.
அதைவிட நமக்கு நிம்மதி.. தஞ்சாவூர்,கும்பகோணம்,விருதுநகர்,நாகர்கோவில்
மற்றும் தருமபுரிகாரர்களுக்கு கிட்டாத
AREA OFFICE தகுதி
காரைக்குடிக்கு UP-EAST ல் வழங்கப்பட்டுள்ளது.
நமக்கு அசையா நம்பிக்கை எப்போதுமே உண்டு..
இராமேஸ்வரம் இருக்கும்வரை..
இருபத்தோரு தீர்த்தங்களிலும் ஈரம் தட்டும் வரை..
அமைச்சர்களும்,
அவர் பரிவாரங்களும்,
CMDகளும் ..CGMகளும்,
சின்னப்பெரிய GMகளும்...
இடுப்பில் துண்டு கட்டும்வரை..
காரைக்குடிக்கு மவுசு கடுகளவும் குறையாது..
டெலாய்ட்டி கூறுகிறது..
காரைக்குடிக்கு தற்போதுள்ள
449 ஊழியர்கள் அவசியமில்லையாம்..
277 போதுமாம்..
அப்புறம் இராமேஸ்வரத்தில்
இவர்களை யார் குளிப்பாட்டுவது?
என்ற கவலை எழுகின்றது..
மாதந்தோறும்.. மரணங்கள்....
மளமளவென்று.. பணி ஓய்வுகள்...
இன்னும் நான்கைந்து ஆண்டுகளில்
மளமளவென்று.. பணி ஓய்வுகள்...
இன்னும் நான்கைந்து ஆண்டுகளில்
நிச்சயம் டெலாய்ட்டியின்
ஆசை நிறைவேறும்..
அதற்குள் என்ன அவசரம்?..
No comments:
Post a Comment