தறிகெடும்... தமிழகம்...
அன்றைய தமிழகத்தின் தாழ்ந்த நிலை கண்டு
அறிஞர் அண்ணா அவர்கள்
"ஏ!.. தாழ்ந்த தமிழகமே .."
என்று எழுதுகோலில் தன் வேதனை சொன்னார்.
அறிஞர் அண்ணா அவர்கள்
"ஏ!.. தாழ்ந்த தமிழகமே .."
என்று எழுதுகோலில் தன் வேதனை சொன்னார்.
இன்று தொலைத்தொடர்பில் தமிழக நிலை காணும்போது வங்கக்கடலோரம் உறங்கும் அறிஞர் அண்ணா வேதனையுடன் கூறிய அந்த வார்த்தைகளே நம் நினைவலைகளில் நிழலாடுகின்றன.
இலாக்கா செயல்திறனிலும்,
ஊழியர் பிரச்சினை தீர்விலும்,
அகில இந்தியாவிற்கே வழிகாட்டியாய்
விளங்கிய தமிழகம்
இன்று சீரற்று கேடுற்று நிற்கும்
நிலை காண்கின்றோம்.
ஊழியர் பிரச்சினை தீர்விலும்,
அகில இந்தியாவிற்கே வழிகாட்டியாய்
விளங்கிய தமிழகம்
இன்று சீரற்று கேடுற்று நிற்கும்
நிலை காண்கின்றோம்.
இன்றும் மனசாட்சியுடன்,
மனம் நிறைந்த நேர்மையுடன்
பணி செய்யும் தோழர்கள்
இருக்கத்தான் செய்கின்றார்கள்.
இருப்பினும் நிறைகளை விட குறைகளே..
தமிழகத்தில் விஞ்சி நிற்கின்றன.
- நட்டத்தில் இயங்கும் பல மாவட்டங்கள்..
- காத்திருக்கும் கன்னியாய் புதிய இணைப்புக்கள்..
- இடமிருந்தும் மறுதலிக்கப்படும் BB இணைப்புக்கள்..
- சிரஞ்சீவியாய் வாழும் பழுதுகள்...
- உதார் விடும் உதான் குழுக்கள்...
- கொள்வாரில்லா விற்பனைக்குழுக்கள் ..
- சாய்ந்து கிடக்கும் கோபுர பராமரிப்புக்குழுக்கள் ..
- எரிந்த வீட்டில் பிடுங்கி வாழும் அதிகாரிகள்...
- ஆண்டிகளின் மடங்களாய் ஆகிவிட்ட அலுவலகங்கள்...
- அரசத்தனம், அரசித்தனம் கொண்ட ITS அதிகாரிகள்...
- வேதாளங்களைச் சுமக்கும் தொழிற்சங்க விக்கிரமாதித்தியர்கள்...
- மாடாய் உழைத்தாலும் சம்பளத்திற்கும், சலுகைகளுக்கும் ஏங்கிப்போன ஒப்பந்த ஊழியர்கள்..
இப்படி நாம் அடுக்கி கொண்டே போகலாம்..
இதில் மிகக்கொடுமை...
துயரப்படும் தொழிலாளர் பிரச்சினையை
காது கொடுத்துக் கேட்க கூட
தமிழகத்தில் நாதியற்றுப் போனதுதான்..
எனவேதான் இரண்டு மாநிலச்சங்கங்களும்
ஒரே தொனியில் புதிய மாநில நிர்வாகத்திடம்
குறை கேட்கும் முறையை உயிர்ப்பிக்க கோரின.
புதன்கிழமை உத்திரவும் வந்தது.
இன்று... முதல்புதனும் வந்து விட்டது..
இதில் மிகக்கொடுமை...
துயரப்படும் தொழிலாளர் பிரச்சினையை
காது கொடுத்துக் கேட்க கூட
தமிழகத்தில் நாதியற்றுப் போனதுதான்..
எனவேதான் இரண்டு மாநிலச்சங்கங்களும்
ஒரே தொனியில் புதிய மாநில நிர்வாகத்திடம்
குறை கேட்கும் முறையை உயிர்ப்பிக்க கோரின.
புதன்கிழமை உத்திரவும் வந்தது.
இன்று... முதல்புதனும் வந்து விட்டது..
காரைக்குடி மாவட்டத்திற்கு நிரந்தர அதிகாரி இல்லை.
மதுரை,தஞ்சாவூர்,விருதுநகர் என்று பல மகுடங்களைச் சுமப்பவருக்கு பாவப்பட்ட காரைக்குடியை கவனிக்க நேரமிருக்காது.
துணைப்பொது மேலாளரும் இன்று
வெளியூர் பயணம் சென்று விட்டார்.
8 மணி இரயிலை 6 மணிக்கே பிடித்து விட்டார்..
இன்று குறை கேட்க நாதியில்லை..
இது முதல் கோணல் அல்ல...
முற்றிய கோணல்..
மதுரை,தஞ்சாவூர்,விருதுநகர் என்று பல மகுடங்களைச் சுமப்பவருக்கு பாவப்பட்ட காரைக்குடியை கவனிக்க நேரமிருக்காது.
துணைப்பொது மேலாளரும் இன்று
வெளியூர் பயணம் சென்று விட்டார்.
8 மணி இரயிலை 6 மணிக்கே பிடித்து விட்டார்..
இன்று குறை கேட்க நாதியில்லை..
இது முதல் கோணல் அல்ல...
முற்றிய கோணல்..
சரி.. தொழிலாளர்கள் யாரிடம் துயர் சொல்வது?
பிள்ளையார்பட்டிக்கோ..
குன்றக்குடிக்கோ... செல்லலாம்..
அதுவும் இராமேஸ்வரத்திலிருந்தோ..
முதுகுளத்தூரிலிருந்தோ.. வந்து சேருவதற்குள்..
அங்கும் நடை சாத்தி விடுவார்கள்...
இது வேடிக்கை அல்ல.. வேதனை...
தமிழகம்..
இன்று தறி கெட்டு நிற்கின்றது...
இன்று தறி கெட்டு நிற்கின்றது...
தலை நிமிருமா?
கவலையே.. மிஞ்சுகிறது..
the face of mgmt teared out....
ReplyDelete