Saturday 9 August 2014

வாழ்வும்... வீ ழ்வும்...
LIFE AND DEATH 

மரித்து வரும் BSNL நிறுவனத்தை 
எரித்து விடும் நிலைக்கு 
எடுத்துச்செல்ல விட மாட்டோம் 
என நமது துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் 
உறுதிபடக்கூறியதைக்கேட்டு 
உள்ளம் நிறைந்த மிக்க மகிழ்ச்சி... 
நம் எல்லோருக்கும்...

புதிய அரசு அமைந்துள்ளது...
எந்த வேலையும் கிடைக்காமல்...
மூன்று வேளையும் புசிக்காமல்...
இந்த தேசத்தில்...
வாடி வதங்கும் மக்களுக்காக 
மூன்று வேளை உடையுடுத்தி 
வாடாமல் வதங்காமல்.. மக்கள் 
வாட்டம் போக்கப்பாடுபடும் 
புதிய மக்கள் பிரதிநிதிகளை நினைத்து 
நமக்குத் தாங்கவே  முடியவில்லை.. மகிழ்ச்சி..

இத்தகைய புதிய அரசின் அமைச்சர்...
BSNL நிறுவனத்தை வீழ விட மாட்டோம்.. என்று 
கூறியதோடு  நிறுத்தியிருந்தால்.. 
எல்லோருக்கும் நிம்மதி பிறந்திருக்கும்..
ஆனால் 
அடுத்த வரியில்.. BSNL நொடிப்புக்கு காரணம் 
அதன் ஊழியர் செலவுகளே என்று சொன்னதும்... 
அவரது வரிகளுக்கு உடனடி ஒப்பனை செய்து.. 
ஊடகங்கள் ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு 
என்று செய்திகளை உலவ விட்டதும்தான் 
நமக்குத்தாங்க முடியவில்லை...

ஊழியர் செலவு மட்டும்தான் 
இந்த நிறுவன நொடிப்புக்கு காரணமா?
வேறு காரணங்களே.. கிடையாதா?
ஒத்துக்கொண்டபடி ஓய்வூதிய செலவுகளை 
அரசு  ஏற்றுக்கொண்டாலே..
BSNL எழுந்து விடுமே..
MTNLக்கு ஒரு நீதி..
BSNLக்கு ஒரு நீதியா?

BSNLஐ சாக விடமாட்டோம்...
BSNL ஊழியர்களை வாழ விடமாட்டோம்...
என்பதுதான்... இந்த அரசின் கொள்கையா?

இந்தப்பிறவி முழுக்க... 
இந்த இலாக்கா வளர்ச்சிக்காகவே..
வாழ்ந்து கொண்டிருக்கும் ஊழியர்களை..
அறுபது  அன்று கைகுலுக்கி அனுப்புவார்களா?.. 
இல்லை அதற்கு முன்... 
கழுத்தைப்பிடித்து அனுப்புவார்களா?

என்று  சாதாரண தொழிலாளிக்கு..
சந்தேகங்களும் கேள்விகளும்  எழுகின்றன...
கேட்பது நம் உரிமை..
தீர்ப்பது அரசின் கடமை..

No comments:

Post a Comment