Thursday, 30 October 2014

கண்ணீ ர்...
அலைகள் ஓய்வதில்லை.. 
எல்லை தாண்டி மீன் பிடித்த ஐவருக்கு தூக்கு..  
இலங்கை இனவெறி அரசின் திமிர்த்தன போக்கு..
தமிழக மீனவன்...
தண்ணீரில் பிறந்தான்...
கண்ணீரில் கரைந்தான்...

உயிரை விற்று..

வயிறை நிரப்பும் மீனவர்கள்..
வறுமை வலையில்... 

வாழ்நாள் முழுக்க சிக்கியவர்கள்...

கருவாட்டு முள்ளெடுத்து..

குழந்தைக்கு...
காது குத்தும் கடையர்கள்..

மன்னார் வளைகுடாவிலே 

இன்று மீன்கள் சிக்குவதில்லை..
தமிழக மீனவனே சிக்குகிறான்...

இந்தியனுக்கு மச்சம் இல்லை..

இந்தியப்பகுதியிலும் மச்சம் இல்லை..
இலங்கைக்குத்தான் மொத்த மச்சமும்..

மச்சத்திற்கு ஏனோ.. 

இங்கு  வர அச்சம்..
சீர் கெட்ட சிங்களன் அதையும் 
சிறை வைத்தானோ..?

வலை வீசி செல்லும் மீனவன்..

சிங்கள வலையில் வீழ்கிறான்..

வறுமைச்சிறையிலே வாடிய  மீனவன் 

கொடுமைச்சிறையிலே தவிக்கிறான்...

சிறையிலே மீனவன் துடிக்க.. 

கரையிலே குடும்பம் துடிக்கும்..

அரசியல்வாதிகள் அறிக்கை வலையை 

அள்ளி வீசுவார்கள்..
வாக்கு மீன்களை வளைக்க...

இந்தப்பாவிகளால்தான்...

கச்சத்தீவு பறிபோனது..
கூடவே எங்கள் 
தாய்மார்களின் தாலியும்..
சேர்ந்தே போனது...

அனுமன் இன்றிருந்தால்..

அறுபட்ட தாலிக்கயிறு கொண்டு 
சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைத்திருப்பான்..

நாம் சிறுநீரை..
பொழிந்து விட்டால்.. 
அமிழ்ந்து விடும் இலங்கையென..
அங்கேயே பிறந்த எங்கள் 
தாத்தா எகத்தாளம் சொல்ல கேட்டதுண்டு..

இன்றோ..

சிறுமதி   இலங்கையால்..
நம் சகோதரர்கள்..
பெருந்துயர் படும்  அவலம்..
கேட்பதற்கோ.. நாதியில்லை..

இங்கே...

கன்னடத்து அம்மாவின்.. 
சிறைவாசம் நீங்க..
கண்மூடி உயிர்விட்டான் தமிழன்...

இன்று...

சொந்தச் சகோதரன் சாதல் கண்டும்..
சிந்தை மரத்து...
செம்மை மறந்து வாழ்கிறான்..

இம் என்ற இந்தியாவின் 

ஒரு சொல்லில்..
இடிந்து விடும்  இலங்கை..
சொல்வார்களா? என்பதுதான் கேள்வி..

இங்கே...
கங்கையை தூய்மைப்படுத்துகிறார்கள்..
கங்கை மைந்தர்களை 
துயரப்படுத்துகிறார்கள்..

இந்த..

தேசத்தைக்கண்ணுறும்போது...
"தாயைக்கொல்லும் பஞ்சத்தைத்
தடுக்க முயற்சியுறார்..
வாயைத்திறந்து சும்மா.. கிளியே... 
வந்தே மாதரமென்பார்.."
என்னும் பாரதியின் வரிகளே 
நினைவுக்கு வருகின்றன....
AITUC  
வாழிய.. வாழியவே..
அக்டோபர் 31 - 1920
அடிமைத்தளை அறுக்கப்பிறந்த 
அரிவாள்..சுத்தியல்..

அடிமட்ட உழைப்பாளியின் 
போர்ப்பறை...

பெரும் தலைவர்கள் பணி செய்த 
பாசறை...

பாரதத்தின் முதல் தொழிற்சங்கம்...
AITUC... வாழ்க... வாழ்கவே..

Wednesday, 29 October 2014

J C
னைத்து ஊழியர் 
சங்கங்கள் கூட்டமைப்பு 

போனஸ் உள்ளிட்ட 
30 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 
அனைத்து ஊழியர்கள் 
சங்க கூட்டமைப்பின் சார்பில் 

27/11/2014 அன்று 
நாடு தழுவிய 
ஒரு நாள் அடையாள 
வேலைநிறுத்தம். 

மாவட்ட மட்டங்களில் 
JAC அமைத்திட 
மாநில சங்க பொறுப்பாளர்கள் 
கலந்து கொள்ளும் 
JAC சிறப்பு கூட்டங்கள் நடத்திட 
மாநில சங்கங்கள் வேண்டுகோள்.

கோரிக்கை விளக்க 
கூட்டங்கள் 
நடத்திடுவோம்...

வேடிக்கை.. 
மனிதரைப்போல் 
வீழ்ந்திடாமல்..
கோடிக்கை  பூதமாய் 
எழுந்திடுவோம்...
கோரிக்கைகளை 
வென்றெடுப்போம்..

தயாராவீ ர்.. தோழர்களே..
காலவரையற்ற 
வேலை நிறுத்தம்

அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் 
சங்க கூட்டமைப்பு  முடிவு

28/10/2014 அன்று  அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் 
சங்க கூட்டம் டெல்லியில் NFTE  அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது தலைமையில் நடைபெற்றது. 
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.


  • DELOITTE குழு அறிக்கையை எதிர்த்து..
  • BSNL மற்றும் MTNL  இணைப்பை எதிர்த்து.. 
  • தனியாக TOWER COMPANY ஆரம்பிப்பதை எதிர்த்து...
  • மத்திய அரசின் BSNL விரோத பொதுத்துறை விரோத கொள்கைகளை எதிர்த்து 
03/02/2015 முதல் 
நாடு தழுவிய 
கால வரையற்ற 
வேலை நிறுத்தம்
  • டிசம்பர் 2014ல் கோரிக்கை தினம் 
  • ஜனவரி 2015ல் 3 நாட்கள் தர்ணா 
  • நாடு தழுவிய போராட்ட விளக்க கூட்டங்கள் 
  • நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை விளக்குதல் 
  • நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் கூடி மற்ற நடவடிக்கைகளை இறுதிப்படுத்துதல்.
தோழர்களே....
ஊழியர் நலமுற்றிட 
BSNL வளம் பெற்றிட..
களம் காண்போம்..
இதுவே தருணம்...

Tuesday, 28 October 2014

ERP இம்சைகள்
ஆந்திரத்து அவலம்

ERP திட்டம் அமுல்படுத்தப்பட்ட 
கர்நாடகம், மகராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களில் பல்வேறு இம்சைகளை ஊழியர்களுக்கு  உருவாக்கியுள்ளது. அடிக்கடி புயலில் அடிபடும் ஆந்திரமாநிலம் ERPயில் சிக்கி சிதைந்து விட்டது. இந்நிலையில்தான் தமிழகத்திலும் ERP 
வலுக்கட்டாயமாக மையம் கொண்டுள்ளது. 
ஆந்திர மாநில ஊழியர்கள் கீழ்க்கண்ட பிரச்சினைகளை சந்தித்து தீர்வில்லாமல் திண்டாடி வருகின்றனர்.

  • மரணமுறும் தோழர்களுக்கு வழங்கப்படும் உடனடி நிவாரணம் கூட வழங்க முடியவில்லை.
  • GPF பட்டுவாடாவில் தேக்கம்.
  • விழாக்கால முன்பணம் FESTIVAL ADVANCE வழங்கப்படவில்லை.
  • சம்பளத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள். 
  • ஒப்பந்த ஊழியர்கள் சம்பளம் வழங்குவதில் கடுமையான தேக்கம்.
  • ஓய்வு பெறும் தோழர்களுக்கு விடுமுறைச்சம்பளம் LEAVE ENCASHMENT  வழங்கப்படவில்லை. அவர்களுக்கு அன்று வழங்கப்படும் பரிசுப்பணம் GIFT கூட வழங்கப்படவில்லை.
  • வங்கிகளில் நமது தோழர்கள் வாங்கிய கடனுக்காக பிடித்தம் செய்யப்பட்ட பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. வங்கிகள் கூடுதல் வட்டி கேட்டு மிரட்ட ஆரம்பித்து விட்டன.
  • சேமநல நிதி குளறுபடியால் திருமணக்கடன் வழங்கப்படவில்லை.
  • BAD CLIMATE ALLOWANCE  எனப்படும் சீரற்ற தட்பவெப்ப நிலைக்கான படி வழங்கப்படவில்லை.
  • ஆண்டு உயர்வுத்தொகை வழங்குவதில் குளறுபடி.
  • மருத்துவ பில்கள் தேக்கம்.
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக்கெடும் " 
என்றார் வள்ளுவர். தமிழகத்திலும் ERP நடைமுறைப்படுத்துதலில்  வருமுன் காக்கவில்லை என்றால் வைக்கோல் போர் பற்றி எரிந்து அக்கப்போர் உருவாவது  நிச்சயம். 
இது ஆருடம் அல்ல. 
அவதிப்படப்போகும் 
ஒரு மனிதனின் வேதனைக்குரல்.
வாழ்த்துக்கள் 

தமிழ் மாநில கூட்டு ஆலோசனைக்குழு 
RJCM உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட 
NFTE கடலூர் மாவட்டச்செயலர் 

தோழர். இரா.ஸ்ரீதர் 
அவர்களின் பணி சிறக்க 
வாழ்த்துகின்றோம்.

Sunday, 26 October 2014

அம்மாவின் கைப்பேசி 

தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனம் 
தனது செல்போன் உற்பத்தியை நிறுத்தியதோடு
 நவம்பர் 2014 முதல் நிறுவனத்தை மூடவும் முடிவெடுத்துள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற்று நடைபெற்று வந்த 
இந்த நிறுவனம் அரசின் அனுமதி இன்றி மூடப்படுவது 
சட்ட விரோதமானது என தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. 

இந்நிலையில் இந்த நிறுவனத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. அவ்வாறு உற்பத்தியாகும் செல்போனுக்கு AMMA CELL அம்மாவின் கைப்பேசி என பெயரிடலாம் எனவும் அதனை மிகக்குறைந்த 700 ரூபாய் விலையில் விற்கலாம் எனவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அம்மாவே இப்போதுதான் CELLலில் இருந்து வந்துள்ள நிலையில் AMMA CELL  பிறக்குமா? ஊழியர்கள் வாழ்வு சிறக்குமா? என்ற எதிர்பார்ப்பு தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.  எது எப்படியாயினும்.. 
நோக்கியா நிறுவனத்தை அரசே ஏற்று நடத்துவது மிகச்சரியான 
தீர்வாக இருக்கும் என தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

இப்போது தமிழகத்தில்..
மூச்சுக்கு.. மூச்சு.. அம்மா...
இனி பேச்சுக்கு.. பேச்சு.. அம்மா...

AMMA CELL...
ஊழியருக்கு பெற்றுத்தரும் வாழ்க்கை...
அம்மாவுக்கு பெற்றுத்தரும் வாக்கை...
அறந்தைத்தோழர் 
முருகேசன் 
நினைவஞ்சலிக்கூட்டம் 

27/10/2014 - திங்கள்கிழமை - மாலை 4 மணி 
தொலைபேசி நிலையம்  - அறந்தாங்கி 

நினைவு கூர்வோர் :  

தோழர். பழனியப்பன் - திருச்சி  மாவட்டச்செயலர் 
தோழர். மாரி - காரைக்குடி மாவட்டச்செயலர் 
தோழர். நடராஜன் - மாநில உதவிச்செயலர் 
தோழர். முருகன் - காரைக்குடி மாவட்டத்தலைவர் 
மற்றும் தோழர்கள்...

தோழர்களே.. வருக...

Friday, 24 October 2014

இரங்கல் 

இராமநாதபுரம் பகுதி அழகன்குளம் 
தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த 
தோழர். K.சீனி TM அவர்கள் 

24/10/2014 அன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 
நமது ஆழ்ந்த  இரங்கலை உரித்தாக்குகின்றோம். 


சிறு நீரகம் பழுதடைந்த நிலையிலும்..
தன் கடைசி நாள் வரை... 
தொலைபேசி பழுதுகளை நீக்கியவர் சீனி...
INDOOR என்றும் OUTDOOR என்றும் 
மேல்மாடி என்றும் கீழ்மாடி என்றும் 
ஊழியர்கள் தங்களது சுயநலத்திற்காக 
தொழிற்சங்கங்களை 
உலுக்கியெடுக்கும் காலத்திலே..

நலிவடைந்த உடல் நிலையிலும்..
நாள்தோறும் 40 கிலோமீட்டர் பயணம் செய்து 
நாணயத்துடன் பணி செய்தவர் தோழர்.சீனி...

அவரது மறைவு 
இயக்கத்திற்கு இலாக்காவிற்கு இழப்பு...
இறுதிச்சடங்கு உதவித்தொகையை 
வழக்கமாக  தவணையாக தாமதமாக
வழங்கும் காரைக்குடி மாவட்ட நிர்வாகம் 
இம்முறையாவது...
சீனியின் பூதவுடல்... 
பூவுலகை விட்டுப்போகுமுன்னே.. 
உதவித்தொகையை உரிய நேரத்தில் 
வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்...
உண்மையாய் உழைத்த ஊழியனுக்கு 
நிர்வாகம் செலுத்தும் மரியாதை இதுவேயாகும்...
E...R...P... 

ERP எனப்படும் புதிய திட்டத்தை அமுல்படுத்த 
தமிழ் மாநில நிர்வாகம் மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றது. 
ERP அமுலாக்கம் செய்யப்பட்ட கர்நாடகம், குஜராத் போன்ற மாநிலங்களில் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை 
சந்தித்து வருகின்றனர். 

தற்போதைய தமிழக CGM முன்பு STR பகுதியில் CGM  ஆக இருந்தபோது அங்கு ERP திட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். 
எனவே இங்கும் அதிக ஆர்வம் செலுத்துகின்றார். 

தற்போதைய நிலவரப்படி அனைத்து பில் பட்டுவாடாக்களும் 
மாவட்ட அளவில் 31/10/2014க்குள் முடிக்கப்படும். 
அதன் பின் பணம் பட்டுவாடா செய்யும் அதிகாரம்
 மாநில நிர்வாகத்திற்கு மட்டுமே உண்டு. 
மாவட்ட நிர்வாகங்களுக்கு இருக்காது. 

நவம்பர் 14 வரை எங்கும் எந்த வித பணப்பட்டுவாடாக்களும் இருக்காது. நமது நிர்வாகங்கள் நல்ல நாளிலேயே தில்லை நாயகங்கள்.. 
இது போன்ற சூழ்நிலையில் சொல்லவே வேண்டியதில்லை...  

GPF.. FESTIVAL, ஒப்பந்த ஊழியர் சம்பளம்,LIC , மனமகிழ்மன்றம்,சங்க சந்தா,வருமான வரி என பிரச்சினைகள் சூழ நின்று சூன்யம் வைக்கும். 

1008 பிரச்சினைகளை சந்தித்து மாநிலச்சங்கங்கள் 
24 மணி நேரமும் 108 சேவை போல் 
செயல்பட வேண்டிய நிலை உருவாகும். 

தமிழகத்தின் அனைத்து சங்கங்களும் இணைந்து 
இன்னும் ஒரு மாதம் இந்த வேதனையை 
தள்ளி வைக்க வேண்டுகோள் விட்டுள்ளன. 

எதையும் காதில் போட்டுக்கொள்ளாத நிர்வாகம் 
என்ன நிலை எடுக்கும் என தெரியவில்லை...
ஆனால்...
எதையும் எதிர் கொண்டு பழகியுள்ள நமது தோழர்கள் 
இதையும்  எதிர்கொள்வார்கள் 
என்பது மட்டும் நிச்சயம்...
இலட்சிய நடிகர் 
S S

சென்னை டமில் பேசும் 
நடிகர்கள் கூட்டத்தில்... 
செம்மைத் தமிழ் பேசிய 
நடிகன் இவன்..

இந்தி எதிர்ப்பு போராட்ட 
முனையிலே முகத்து நின்றவன்..

சில்லரையும் சிற்றின்பமும் 
நடிகனுக்கு இலட்சணம்..
செந்தமிழும் திராவிடமும் 
இவனுக்கு இலட்சியம்..

முத்தமிழால் வளர்ந்து 
மூன்று தேவிகளை மணந்த 
இலட்சிய நடிகர் 
S.S.இராஜேந்திரன்  
நினைவைப் போற்றுவோம்..

Thursday, 23 October 2014

அஞ்சலி 
முற்போக்கு எழுத்தாளர் 
இராஜம் கிருஷ்ணன்
பேனா முனையில் 
பெண்ணடிமை எதிர்த்த 
அற்புதப் படைப்பாளி
முள்ளும் மலரும் 
எழுத்திலும் கண்டு 
வாழ்விலும் கண்ட 
சாகித்ய அகாடமி விருதாளர் 

தோழியர்.
இராஜம் கிருஷ்ணன் 
அவர்கள் மறைவிற்கு 
நமது அஞ்சலி..

Tuesday, 21 October 2014

தீப ஒளித்திருநாள்...
நல்வாழ்த்துக்கள்...

சீனாக்காரன் வைத்தான்..
சிவகாசிக்கே... வேட்டு...

சீனி வெடி வெடித்த இந்தியன் இன்று..
சீன வெடி வெடிக்கின்றான்..

உள்நாட்டு நரகாசூரன்..
உடன்பாடு போடுகின்றான்..
அயல்நாட்டு நரகாசூரனோடு..

வதம் செய்ய வேண்டிய 
இந்நாட்டு மன்னர்கள்...
தொலைந்து போனார்கள்...
தொலைக்காட்சியில்...

இங்கே.. 
வெளிச்சத்திற்கு வேலையில்லை..
இருளுக்குத்தான் இப்போது..மவுசு...

சூழும் இருள் விலக்கிட..
சூளுரைப்போம்... தோழர்களே..

அனைவருக்கும் 
இனிய 
தீப ஒளித்திருநாள் 
நல்வாழ்த்துக்கள்...

Sunday, 19 October 2014

ஒப்பந்த ஊழியர்  
அக்டோபர் 2014 VDA 

01/10/2014 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கான 
VDA  விலைவாசிப்படி உயர்விற்கான 
உத்திரவு வெளியாகியுள்ளது. 
அதன்படி..

A  பிரிவு நகரம்  - 01/04/2014 அன்று கூலி ரூ.329= 
                                - 01/10/2014 அன்று கூலி ரூ.332/=  மாதம் ரூ.90/= உயர்வு.

B  பிரிவு நகரம்  - 01/04/2014 அன்று கூலி ரூ.273= 
                                - 01/10/2014 அன்று கூலி ரூ.276/=  மாதம் ரூ.90/= உயர்வு.

C  பிரிவு நகரம்  - 01/04/2014 அன்று கூலி ரூ.220= 
                                - 01/10/2014 அன்று கூலி ரூ.222/=  மாதம் ரூ.60/= உயர்வு.

01/10/2014 முதல் DA நிரந்தர ஊழியர்களுக்கு அதிகளவு கூடியுள்ளது.
ஆனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு மிகக்குறைவாக கூடியுள்ளது.
சித்திரகுப்தன் கணக்கை விட நமது DA கணக்குகள் விசித்திரமாக உள்ளன. 
செவிடன் காதில் ஊதிய சங்கு..
DELOITTEE குழு பரிந்துரை... 

ஊழியர் குறைப்பு, SSA மாவட்டங்கள் குறைப்பு, OFF ROLE எனப்படும் அத்தக்கூலிகளை வேலைக்கு அமர்த்துதல் போன்ற மிக மோசமான பரிந்துரைகளைச் செய்த DELOITTEE குழுவின் அறிக்கையை அனைத்து சங்கங்களும் ஓரணியில் நின்று எதிர்த்து வரும் வேளையில்,
 BSNL  நிர்வாகம்  DELOITTEE குழு பரிந்துரைகளை
மகராஷ்டிரா மாநிலத்தில் சோதனை அடிப்படையில் 
அமுல்படுத்தக்கூறி 14/10/2014 அன்று  உத்திரவிட்டுள்ளது. 

தொழிற்சங்கங்களை கலந்தாலோசிக்காமல் 
தான்தோன்றித்தனமாக 
BSNL நிர்வாகம் இவ்வாறு செயல்படுவது 
கடுமையாக கண்டிக்கத்தக்கது. 
BSNLலில் தொழிற்சங்கங்களே இல்லையா?
BSNL கேட்பதற்கு நாதியில்லாத இடமா? 
என்னும் கோபம் பொங்குகின்றது.  
மகராஷ்டிரா தோழர்கள் இன்று 20/10/2014 
ஓன்றுகூடி  இது பற்றி முடிவெடுக்க உள்ளனர். 
DELOITTEE குழு விவகாரத்தில்  நாடு தழுவிய  ஒன்றுபட்ட  களப்போராட்டம் உடனடியாகத்தேவை. 
அகில இந்தியத்தலைவர்கள் 
இதன் அவசரமும் அபாயமும் உணர வேண்டும்... 
துரிதமாக செயல்பட வேண்டும்.

Friday, 17 October 2014

N F T E 
தேவகோட்டைக்கிளை 
17/10/2014 
சிறப்புக்கூட்ட தீர்மானங்கள் 

காரைக்குடி மாவட்ட நிர்வாகமே...

  • OUTDOOR பகுதி என்பது தீண்டத்தகாதவர்கள் பணி செய்யும் பகுதி என்னும் இழிநிலை மாற்று...
  • OUTDOOR பகுதியில் கூடுதல் TMகளை நியமனம் செய்..
  • பத்து மணிக்குள் அனைவரையும் பணிக்கு வரச்சொல்...
  • பழுதுகள் பட்டியலை பத்து மணிக்குள்ளாவது  TM தோழர்களிடம் அளித்து விடு...
  • BROADBAND பழுதுகள் அனைத்தையும் TMகள் தலையில் கட்டும் நிலை மாற்று...
  • GROUPS பகுதியில் TTAக்களை நியமனம் செய்...
  • பொறுப்புள்ள அதிகாரிகளை தேவகோட்டை பகுதியில் நியமனம் செய்...
  • ஒப்பந்த ஊழியரை கொத்தடிமையாக நடத்தாதே...
  • CM பகுதியில் உள்ளவர்களை பராமரிப்பு பணிக்குத்திருப்பு....
  • பழுதான  காரைக்குடி மாவட்டத்தின் பழுது மிக்க பகுதியான தேவகோட்டை மீது கவனம் செலுத்து..

    செய்திகள் 

    01/10/2014 முதல் 6.8 சத IDA  உயர்விற்கான BSNL  உத்திரவு  வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே புள்ளி விவரங்களின்படி மொத்த IDA  உயர்வு 98.1556 சதம் உயர்ந்துள்ளதால் அதனை (98.2) 
    6.9 சத உயர்வு என  அறிவிக்கக்கோரி  AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கம் DPE இலாக்காவிற்கு கடிதம் எழுதியுள்ளது.
    ==============================================
    01/01/2007க்கு முன்னும் பின்னும் ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பிற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டும் என DEPARTMENT OF EXPENDITURE (செலவின இலாக்கா)  DOTக்கு கடிதம் எழுதியுள்ளது. 01/01/2007க்குப்பின் ஓய்வு பெற்றோருக்கு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அவசியமில்லை. ஆயினும் DOE இப்பிரச்சினையில் கட்டையைப் போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. 
    78.2 சத IDA  இணைப்பில் மேலும்  தாமதம் தொடரும்..
    ==============================================
    EPF திட்டத்தில் UNIVERSAL ACCOUNT NUMBER எனப்படும் UAN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் நாடு முழுக்க பல்வேறு நிறுவனங்களில் பணி புரிந்தாலும் ஒரே EPF எண்ணில் அவர்களது EPF கணக்கு நடைமுறைப்படுத்தப்படும்.  இதற்கு முன்பு தொழிலாளர்கள் பணியாற்றிய  ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு EPF எண் தொடங்கப்பட்டதால்  ஏறத்தாழ 27000 கோடி ரூபாய்  கேட்பாரின்றி கிடக்கின்றது. தோழர்கள் UAN எண்ணைத் தெரிந்து கொண்டு 
    Epfindia.com என்னும் இணைய தளத்தில் தங்களது 
    தனிப்பட்ட EPF கணக்கைத் துவக்க வேண்டும்.
    ==============================================
    போராடும் நெய்வேலித் தோழர்களுக்கு ஆதரவாகவும், 
    நோக்கியா நிறுவன மூடலை எதிர்த்தும்  
    16/10/2014 அன்று காரைக்குடி பொது மேலாளர் அலுவலகம் முன்பாக 
    NFTE - BSNLEU  இணைந்த
    ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    கலந்து கொண்ட தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

    Thursday, 16 October 2014

    ஈடில்லா...  இழப்பு
    தோழர். A.முருகேசன், TM
    அறந்தாங்கி

    மறைவு : 09/10/2014 
    முருகேசன்...
    அறந்தாங்கி நகரிலே.. சங்கத்தைத் தன் 
    சிரந்தாங்கி வளர்த்த தோழன்..

    காரைக்குடியின் கெளரவ அழைப்பாளன்...

    அவனில்லாத நிகழ்வு அண்மையில் ஏதுமில்லை...

    செயலாற்றல் மிக்க பதி அவன்..

    சேதுபதியின் சிறகு அவன்..

    பாசத்திற்கு என்றும்  பணிந்தவன்..
    பாதகத்தை எதிர்க்கத் துணிந்தவன்..

    சுறுசுறுப்பு நிறைந்தவன்..
    சுயநலம் அறியாதவன்...

    அன்பே உருவானவன்..
    அமைதி நிறைவானவன்... 

    முனைப்பு மிக்கவன் முருகேசன்..

    அன்பெனும் பிணைப்பு மிக்கவன் முருகேசன்..

    கலை இலக்கியத்தை நேசித்தவன்...
    காலத்தே காரியங்களை  செய்திட்டவன்..

    காலத்தே காரியங்களை செய்துவிட்டதால்.. 

    காலத்தே காலனிடமும் சென்றுவிட்டான்..

    மனிதர்களை நாள்தோறும் சந்திக்கலாம்..

    முருகேசனை நாம் இனி என்று சந்திப்போம்?

    பிரிவு என்னும் காயத்திற்கு... 

    காலமே மருந்து.. 

    முருகேசன் பிரிவிற்கு.. 
    எது இங்கு மருந்து?... ஏது இங்கு மருந்து?...

    Wednesday, 15 October 2014

     ஜபல்பூர்
    அகில இந்திய மாநாடு
     ஜபல்பூர் அகில இந்திய மாநாடு..
    மாபெரும் தலைவர்கள் இல்லாத மாநாடு.
    மரபு வழியில் அடியொற்றி நடந்த மாநாடு..
    பிரமாண்ட மேடை அமைத்த மாநாடு...

    முதியோர்கள் நிரம்பி நிற்க...
    இளையோர்களும் இழையோடிய மாநாடு...
    தர்க்கங்களைக் குறைத்து..
    வெயில் தாக்கங்களைப்  பொறுத்து 
    சார்பாளர்கள் சகிப்போடு நடந்த மாநாடு...

     வலி நிறைந்த இன்றைய அரசியலை
    நம் வழிகாட்டி தோழர்.தார் 
    உடல்வலி பொறுத்து 
    அரசியல் வழி காட்டிய  மாநாடு...

    தோழமை சங்கத்தலைவர்கள் 
    நம் தோள் நிற்க தோழமை  சொன்ன மாநாடு..
     
     போனஸ் எங்கள் பாட்டன் சொத்து 
    அதைப் போராடி மீட்டிடுவோம்..
    என தோழர்கள் தோள் உயர்த்திய மாநாடு..

    "இலாபத்தை அடைந்திடுங்கள்..
    கோரிக்கையை வென்றிடுங்கள்.." என  
     CMDயும் தொழிலாளிகளைப் பார்த்து
    கோரிக்கைகளை கதைத்த  மாநாடு...

    சிந்தனைச்சிறகு விரித்து 
     மாநிலச்செயலர் பட்டாபி
     சிறப்பான உரை தந்த மாநாடு...

     மாற்றங்களும் பிரதிபலிக்க...
    ஏமாற்றங்களும் எதிரொலிக்க...
    மாறாத தலைமை தந்த  மாநாடு...
     
     நிர்வாகிகளுக்கு நிகராக..
    சிறப்பு அழைப்பாளர்களை..
    தேர்வு செய்த மாநாடு...
     
    நிறுவனம் நிமிர்ந்திட ..
    தொழிலாளர் உயர்ந்திட..
    தீர்க்கமான தீர்மானங்களை 
    தீவிரமாய் சிந்தித்து சொன்ன மாநாடு..
     
    ஜபல்பூர் மாநாடு...
    என்றும் மனதில் நிற்கும்...
    நீங்காமல் நம் நினைவில் நிற்கும் ...

    Sunday, 5 October 2014


    चलो... जबलपुर...
    ஜபல்பூர்.... செல்வோம்...
    NFTE அகில இந்திய மாநாடு
     ஜபல்பூர் - அக்டோபர் 10-12

    கருணை அடிப்படை வேலை..
    தேக்க நிலை நீக்கம்...
    நாலு கட்டப்பதவி உயர்வு குளறுபடிகள்..
    SC/ST  தோழர்களுக்கு சலுகைகள்...
    இளம் தோழர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்புக்கள்...
    எளிய முறை இலாக்காத்தேர்வுகள்...
    போனஸ்... LTC.. மருத்துவப்படி...
    78.2 IDA நிலுவை...
    ஓய்வு பெற்றோருக்கு 78.2 இணைப்பு ...
    50 சத IDA சம்பளத்துடன் இணைப்பு..
    TTA சம்பள இழப்பை சரி செய்தல்...
    அச்சுறுத்தும் விருப்ப ஓய்வு...
    மிரட்டும் DELOITTE குழு அறிக்கை..
    MTNL - BSNL இணைப்பு...
    தேய்ந்து வரும் BSNL...

    எத்தனை.. எத்தனை... பிரச்சினைகள்... 
    அத்தனையும்... விவாதிப்போம்...
    அர்த்தமுள்ள.. முடிவெடுப்போம்..
    வாருங்கள்... தோழர்களே....
    சந்திப்போம்... ஜபல்பூரில்...

    தியாகத்திருநாள் 
    நல்வாழ்த்துக்கள் 

    மதத்தை வளர்ப்போம்...
    மக்கள் மனங்களிலே...
     எம்மதமும்.. நம்மதம் எனும் 
    சம்மதத்தை வளர்ப்போம்..

    அனைவருக்கும்.. 

    பகுத்துண்டு... 
    பல்லுயிர் காக்கும்... 
    பண்பாடு போற்றும்...
    பக்ரீத் 
    நல்வாழ்த்துக்கள்...

    Friday, 3 October 2014

    செய்திகள்
    ================
    அகில இந்திய மாநாடு

    நமது அகில இந்திய மாநாடு  மத்தியப்பிரதேசம்  ஜபல்பூர் நகரில் 
    கிறித்தவ மேல் நிலைப்பள்ளியில் 10/10/2014 முதல் 12/10/2014 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
    ஜபல்பூரில் உள்ள நமது BRBRAITT பயிற்சி மையத்தில் கட்டண அடிப்படையில் தங்குவதற்கான அறைகள் கிட்டும். பெரிய அறைகளுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் வசூலிக்கப்படும். தேவைப்படும்  தோழர்கள் 0761 2605910 என்ற தொலைபேசி எண்ணில் தங்களது வேண்டுகோளை FAX செய்ய வேண்டும்.  
    தொடர்புக்கு தொலைபேசி எண்: 0761 2605650
    DIVISIONAL ENGINEER(HOSTEL)
    BRBRAITT, BSNL , JABALPUR. 
    ===========================================================
    பரிவு அடிப்படை பணி 

    பரிவு அடிப்படையிலான பணி நியமனத்திற்கான தேர்வுக்கூட்டம் HPC இதுவரை டெல்லி CORPORATE அலுவலகத்தில் நடந்து வந்தது. 
    இனிமேல் அந்தந்த மாநில நிர்வாகங்களே தேர்வு செய்யலாம் என உத்திரவிடப்பட்டுள்ளது. இதைத்தவிர  வேறு ஏதும் மாற்றங்கள்செய்யப்படவில்லை. வழக்கம் போலவே டெல்லி உத்திரவு வெண்ணெயில் ஊறிய வெண்டைக்காயாக உள்ளது.
    ========================================================
    IDA - விலைவாசிப்படி உயர்வு 

    01/10/2014 என்பது நமது BSNL நிறுவன தொடக்க நாள் என்பதோ அதற்கு அடுத்த நாள் அண்ணல்  பிறந்த நாள், ஆயுத பூஜை என்பதோ நமது தோழர்களுக்கு நினைவில்லை. அவர்கள் நினைவில் நின்றதெல்லாம் 
    IDA... IDA.. IDA..தான். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு IDA 6.9 சதம் உயர்ந்துள்ளது.  இத்துடன் மொத்தப்புள்ளிகள் 98.2ஐத் தொட்டு நூற்றுக்கு அருகில் உள்ளது. எனவே 50 சத விலைவாசிப் படியை சம்பளத்துடன் இணைக்கக்கோரி நாம் குரல் கொடுக்க வேண்டும்.
    ========================================================
    அடக்கி வைக்கப்பட்ட    அநியாய உத்திரவு 

    18/09/2014 அன்று இம்மென்றால் சிறைவாசம்.. ஏனென்றால் வனவாசம்.. என்ற வழியில்... ஆர்ப்பாட்டம்,தர்ணா எது நடத்தினாலும் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என டெல்லி உத்திரவு வெளியானது. 
    ஊழியர் தரப்பு ஓங்கிக்குட்டிய பின் தற்போது 
    அந்த உத்திரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    ======================================================
    TM தேர்வு..

    28/09/2014 அன்று தமிழகத்தில் நடைபெறவிருந்து தள்ளி வைக்கப்பட்ட 
    TM தேர்வு 19/10/2014 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    Wednesday, 1 October 2014

     வாழ்க.. நீ.. எம்மான்..
    அக்டோபர் -2
    அண்ணல் பிறந்த நாள்
     குப்பைக்குப் போனது..
    உன் கொள்கைகள்...
    சுத்தமாகுது.. இந்தியா...
    =================================
    அண்ணல் காந்தி  பிறந்த நாள் 
    சிறப்புக்கூட்டம் 
    02/10/2014 வியாழன் 
    காலை 12.00 மணி 
    சங்க அலுவலகம் 
    காரைக்குடி .

    சிறப்புரை 
    முனைவர். பேராசிரியர் 
    பழனி இராகுலதாசன் 
    தோழர்களே.. வாரீர்..