ERP இம்சைகள்
ஆந்திரத்து அவலம்
ERP திட்டம் அமுல்படுத்தப்பட்ட
கர்நாடகம், மகராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களில் பல்வேறு இம்சைகளை ஊழியர்களுக்கு உருவாக்கியுள்ளது. அடிக்கடி புயலில் அடிபடும் ஆந்திரமாநிலம் ERPயில் சிக்கி சிதைந்து விட்டது. இந்நிலையில்தான் தமிழகத்திலும் ERP
வலுக்கட்டாயமாக மையம் கொண்டுள்ளது.
ஆந்திர மாநில ஊழியர்கள் கீழ்க்கண்ட பிரச்சினைகளை சந்தித்து தீர்வில்லாமல் திண்டாடி வருகின்றனர்.
- மரணமுறும் தோழர்களுக்கு வழங்கப்படும் உடனடி நிவாரணம் கூட வழங்க முடியவில்லை.
- GPF பட்டுவாடாவில் தேக்கம்.
- விழாக்கால முன்பணம் FESTIVAL ADVANCE வழங்கப்படவில்லை.
- சம்பளத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள்.
- ஒப்பந்த ஊழியர்கள் சம்பளம் வழங்குவதில் கடுமையான தேக்கம்.
- ஓய்வு பெறும் தோழர்களுக்கு விடுமுறைச்சம்பளம் LEAVE ENCASHMENT வழங்கப்படவில்லை. அவர்களுக்கு அன்று வழங்கப்படும் பரிசுப்பணம் GIFT கூட வழங்கப்படவில்லை.
- வங்கிகளில் நமது தோழர்கள் வாங்கிய கடனுக்காக பிடித்தம் செய்யப்பட்ட பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. வங்கிகள் கூடுதல் வட்டி கேட்டு மிரட்ட ஆரம்பித்து விட்டன.
- சேமநல நிதி குளறுபடியால் திருமணக்கடன் வழங்கப்படவில்லை.
- BAD CLIMATE ALLOWANCE எனப்படும் சீரற்ற தட்பவெப்ப நிலைக்கான படி வழங்கப்படவில்லை.
- ஆண்டு உயர்வுத்தொகை வழங்குவதில் குளறுபடி.
- மருத்துவ பில்கள் தேக்கம்.
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக்கெடும் "
என்றார் வள்ளுவர். தமிழகத்திலும் ERP நடைமுறைப்படுத்துதலில் வருமுன் காக்கவில்லை என்றால் வைக்கோல் போர் பற்றி எரிந்து அக்கப்போர் உருவாவது நிச்சயம்.
இது ஆருடம் அல்ல.
அவதிப்படப்போகும்
ஒரு மனிதனின் வேதனைக்குரல்.
இது ஆருடம் அல்ல.
அவதிப்படப்போகும்
ஒரு மனிதனின் வேதனைக்குரல்.
No comments:
Post a Comment