செவிடன் காதில் ஊதிய சங்கு..
DELOITTEE குழு பரிந்துரை...
ஊழியர் குறைப்பு, SSA மாவட்டங்கள் குறைப்பு, OFF ROLE எனப்படும் அத்தக்கூலிகளை வேலைக்கு அமர்த்துதல் போன்ற மிக மோசமான பரிந்துரைகளைச் செய்த DELOITTEE குழுவின் அறிக்கையை அனைத்து சங்கங்களும் ஓரணியில் நின்று எதிர்த்து வரும் வேளையில்,
BSNL நிர்வாகம் DELOITTEE குழு பரிந்துரைகளை
மகராஷ்டிரா மாநிலத்தில் சோதனை அடிப்படையில்
அமுல்படுத்தக்கூறி 14/10/2014 அன்று உத்திரவிட்டுள்ளது.
தொழிற்சங்கங்களை கலந்தாலோசிக்காமல்
தான்தோன்றித்தனமாக
BSNL நிர்வாகம் இவ்வாறு செயல்படுவது
கடுமையாக கண்டிக்கத்தக்கது.
BSNLலில் தொழிற்சங்கங்களே இல்லையா?
BSNL கேட்பதற்கு நாதியில்லாத இடமா?
என்னும் கோபம் பொங்குகின்றது.
மகராஷ்டிரா தோழர்கள் இன்று 20/10/2014
ஓன்றுகூடி இது பற்றி முடிவெடுக்க உள்ளனர்.
DELOITTEE குழு விவகாரத்தில் நாடு தழுவிய ஒன்றுபட்ட களப்போராட்டம் உடனடியாகத்தேவை.
அகில இந்தியத்தலைவர்கள்
இதன் அவசரமும் அபாயமும் உணர வேண்டும்...
துரிதமாக செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment