அம்மாவின் கைப்பேசி
தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனம்
தனது செல்போன் உற்பத்தியை நிறுத்தியதோடு
நவம்பர் 2014 முதல் நிறுவனத்தை மூடவும் முடிவெடுத்துள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற்று நடைபெற்று வந்த
இந்த நிறுவனம் அரசின் அனுமதி இன்றி மூடப்படுவது
சட்ட விரோதமானது என தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.
இந்நிலையில் இந்த நிறுவனத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. அவ்வாறு உற்பத்தியாகும் செல்போனுக்கு AMMA CELL அம்மாவின் கைப்பேசி என பெயரிடலாம் எனவும் அதனை மிகக்குறைந்த 700 ரூபாய் விலையில் விற்கலாம் எனவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அம்மாவே இப்போதுதான் CELLலில் இருந்து வந்துள்ள நிலையில் AMMA CELL பிறக்குமா? ஊழியர்கள் வாழ்வு சிறக்குமா? என்ற எதிர்பார்ப்பு தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எது எப்படியாயினும்..
நோக்கியா நிறுவனத்தை அரசே ஏற்று நடத்துவது மிகச்சரியான
தீர்வாக இருக்கும் என தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இப்போது தமிழகத்தில்..
மூச்சுக்கு.. மூச்சு.. அம்மா...
இனி பேச்சுக்கு.. பேச்சு.. அம்மா...
AMMA CELL...
ஊழியருக்கு பெற்றுத்தரும் வாழ்க்கை...
அம்மாவுக்கு பெற்றுத்தரும் வாக்கை...
No comments:
Post a Comment