செய்திகள்
இன்று 01/12/2014 முதல் தமிழகத்தில்
ERP முறை அமுல்படுத்தப்படுகின்றது.
BLACKOUT PERIOD என்னும் பணிகளற்ற காலம்
10/12/2014 வரை கடைப்பிடிக்கப்படும்.
15/12/2014லில் இருந்து ERP திட்டம்
நடைமுறையில் செயல்படுத்தப்படும்.
=======================================================
MTNL - BSNL இணைப்பு பற்றி அரசு தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் அது பற்றி பரிசீலிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்
மேலவை கேள்வி நேரத்தில் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
மேலும் விருப்ப ஓய்வு மற்றும் ஊழியர்களின் சம்பளச்சுமையில் ஒரு பகுதியை அரசே ஏற்றுக்கொள்ளுதல் போன்ற
முந்தைய அரசின் பரிந்துரையின் மீது இன்னும்
முடிவெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
=======================================================
அக்டோபர் 2014க்கான விலைவாசிப்படி உயர்வில்
மாற்றமில்லை என்று கூறப்படுகின்றது.
ஜனவரி 2015 விலைவாசிப்படி
உயராமலோ அல்லது குறைந்தோ போகலாம்.
=======================================================
மாற்றல் பிரச்சினைகளில் இருந்து
உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு விலக்கு அளித்து
BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
உடல் ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால்
அவர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
========================================================
டிசம்பர் 5 அன்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும்
இணைந்து மாநிலத்தலைநகரங்களில் மத்திய அரசின் ஊழியர் சட்டங்களை திருத்தும் போக்கிற்கு
கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கின்றன. .======================================================