BSNL விரிவாக்கம்
BSNL நிறுவனம் தனது விரிவாக்கத்திற்காக
ரூ.11,000/= கோடி முதலீடு செய்யவுள்ளது என்று
இலாக்கா அமைச்சர் திரு.இரவிசங்கர் பிரசாத்
நாடாளுமன்றத்தில் 25/02/2015 அன்று
எழுத்து வடிவில் தகவல் அளித்துள்ளார்.
தொலைபேசி நிலையங்களை நவீனப்படுத்துவது...
வலைப்பின்னல் அமைப்பை NETWORK மேம்படுத்துவது.
நக்சலைட்கள் தடம் பதித்த பகுதிகளில்
செல் கோபுரங்கள் அமைப்பது
போன்ற பணிகளில் இந்த முதலீடு செய்யப்படும்.
BSNL மற்றும் MTNL நிறுவனங்கள்
தங்கள் சேவையை மேம்படுத்துவதற்கும்..
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தரமான சேவை அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- ரூ.4804 கோடி செலவில் 14421 2G சேவை செல் கோபுரங்களும்...10605 3G சேவை செல் கோபுரங்களும் அமைக்கப்படும்.
- ரூ.600 கோடி செலவில் தரை வழி சேவை மேம்படுத்தப்படும்,,, மற்றும் தொலைபேசி நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்...
- ரூ.350 கோடி செலவில் தொலைபேசி நிலையங்களில் C-DOT மூலம் பழைய தொழில்நுட்பங்கள் புதிய தொழில் நுட்பங்களாக மாற்றப்படும்...
- ரூ.3568 கோடி செலவில் நக்சல் பகுதிகளில் செல் கோபுரங்கள் அமைப்பதற்கான பணி BSNLக்கு வழங்கப்படும்...
- ரூ.1976/= கோடி செலவில் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் செல் சேவை வழங்கப்படும்.
- டெல்லியில் 1080 3G கோபுரங்களும்.. 800 2G கோபுரங்களும்..மும்பையில் 566 2G கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளன.
நாடாளுமன்றப் பேரணியை
நாம் நடத்திய அதே தினத்தில் அமைச்சர் மேற்கண்ட
அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆள்வோர்கள் சொல்லோடு இல்லாமல்...
செயலிலும் இறங்கினால்..
நிச்சயம் BSNL உயிர்த்தெழும்...
No comments:
Post a Comment