NO...COMMENTS...
நோ... கமெண்ட்ஸ்...
- தோழர்.. GPF போட்டேன்... எல்லோருக்கும் வந்திருக்கு... எனக்கு மட்டும் வரவேயில்லையே...
- அண்ணே... இரண்டு மாசம் GPF அப்ளிகேசன் கொடுத்தேன். காசு ஒரு மாசத்திற்குத்தான் வந்திருக்கு...
- தம்பி... இன்னும் 3 மாசத்தில் ரிட்டையர் ஆகப்போறேன்... கடைசி கடைசியாக ஒரு GPF போட்டேன்.. அதுவும் வராமல் போச்சே...
- சார்.. GPFல் போன மாதம் பிடித்தம் செய்த பணத்தையே காணோமே...கணக்கு TALLYயே ஆகலையே...
- ஏம்பா... GPFல் எனக்கு மட்டும் 3 முட்டை வந்திருக்குப்பா.... CLOSING BALANCE ல் BALANCE CLOSE ஆகிப்போச்சுப்பா...
- யோவ்... என்னாயா யூனியன் நடத்துறீங்க...GPF அப்ளிகேசன் கொடுத்தால் வாங்க மாட்டேங்குறாங்க... ERPயில் தான் போடணுமாம்.. 3 நாளா முட்டி முட்டிப் பார்த்தும் ERPயில் உள்ளேயே போக முடியலேயா ...
- அட என்னாங்க.. ஒரே அக்கப்போரா இருக்கு... நவம்பர் மாதம் இன்கம்டாக்ஸ் மைனசில் இருந்துச்சு.. இப்போ என்னடானா... 4 ஆயிரம் ரெக்கவரி காட்டுதுங்க ...
- ஹலோ... உங்களுக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா உரைக்காதா...போன மாசந்தான் கடனை உடனை வாங்கி சொசைட்டியை CLOSE பண்ணினேன். மறுபடியும் இந்த மாசம் ரெக்கவரி பண்ணினா என்னங்க நியாயம்...
- அடப்பாவிகளா.. பேங்க் லோன் குளோஸ் ஆகி ரெண்டு மாசமாச்சு.. இன்னும் விடாமல் புடிச்சிக்கிட்டே இருக்கீங்களே...
- ஏங்க.. வீட்டு வாடகை ரசீது மாசாமாசம் குடுக்கிறேன்... இப்போ குடுத்தால் வாங்க மாட்டேங்குறீங்க... நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு.. இப்போ திடீர்னு உங்களுக்கு என்னங்க ஆச்சு...
- அதெல்லாம் சரிங்க... நவம்பர்லே ஒன்றரை லட்சமா இருந்த SAVINGS.. ஜனவரியிலே.. ஒன்னு முப்பதா போயிருச்சுங்க... இது என்னங்க... அதிசயம்...
- இதெல்லாம் நியாயமாங்க... இன்கம்டாக்சை கூடக்கூட புடிச்சுக்கிட்டே இருக்காங்க... கேட்டால் அவங்ககிட்டேயே ரீபண்டு வாங்கிக்க சொல்றாங்க.. இதெல்லாம் நடக்கிற காரியமாங்க...
- கேட்டீங்களா... இந்தக்கொடுமையை ... நவம்பர் மாசம் வரை HRMSல் எனக்கு ரெண்டு புள்ளைங்க... இப்போ ERPயிலே ஒரு புள்ளையைக் காணாமுங்க...
- தலைவா.. என் சோகக் கதையைக் கேளுங்க...என் சம்சாரத்துக்கு அவங்க அப்பா அம்மா வச்ச பேரு பத்மாவதிங்க ... இப்போ ERPயிலே இவங்க வச்ச பேரு பாடாவதிங்க..
இந்த அவலம் தேவை தன் பே்ாரட்டம் இல்லாத தலைவனுக்கு சாதகமாக பேசும் தொழிலாளி இருக்கும் வரை இது தொடரும்
ReplyDeleteஇந்த அவலம் தேவை தன் பே்ாரட்டம் இல்லாத தலைவனுக்கு சாதகமாக பேசும் தொழிலாளி இருக்கும் வரை இது தொடரும்
ReplyDeleteரெக்கவரி என்னும் தலைப்பில் உள்ள தொகைகளை ஒவ்வொன்றாகக் கூட்டிப் பார்த்தால் டோட்டல் ரெக்கவரி கடந்த 2 மாதங்களாக் டேலி ஆக மாட்டீங்க்குது 1173 ரூபாய் ஒதைக்குது கேட்டா தொழில் வரி அப்படீங்கறாங்க ஒரு வருஷத்துக்கு 3 தடவை தொழில்வரி பிடிச்சாச்சு இன்னும் எத்தனை மாதம் பிடிப்பாங்களோ
ReplyDelete