Sunday 2 October 2016

ஒப்பந்த ஊழியர் போனஸ் 

ஒப்பந்த ஊழியர்களுக்கான போனசை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யக்கோரி BSNLEU - NFTE சங்கங்கள்  இணைந்து 
காரைக்குடி நிர்வாகத்திற்கு கடிதம் அளித்துள்ளன.

ஏற்கனவே இது பற்றி ஒப்பந்தக்காரர்களுக்கு கடிதம் எழுதப்பட்டு விட்டதாகவும்.. மீண்டும் அவர்களை வலியுறுத்துவதாகவும்...  
உரிய போனஸ் கிடைக்க வகை செய்வதாகவும்  
துணைப்பொது மேலாளர் தெரிவித்துள்ளார். 

போனஸ் விதிகளின்படி 8.33 என்ற கணக்கீட்டில் ... 
ஒரு மாத சம்பளம்  அல்லது குறைந்தபட்சம் 
ரூ.7000/= போனசாக வழங்கப்பட வேண்டும். 

மத்திய அரசு குறைந்த பட்ச போனசை 
2014-15ம் ஆண்டிலிருந்து ரூ.7000/-மாக உயர்த்தி உத்திரவிட்டுள்ளது. 
ஆனால் 7000 போனஸ் வழங்கிட 
ஒப்பந்தக்காரர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.  

ஒப்பந்த ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் ரூ.246/=. 
ஒரு மாத சம்பளம் ரூ.7380/= ஆகும்.  
எனவே குறைந்தபட்சம் ரூ.7000/= வழங்கிட  நியாயம் உள்ளது.

ஆனால் ஒப்பந்தக்காரர்கள் ஒரு நாள் அடிப்படைச்சம்பளமான  
ரூ.120 X 26 நாட்கள் = ரூ.3120/= 
வழங்குவதற்கு தயாராகவுள்ளனர். 

ஒப்பந்தக்காரர்கள் சட்டப்படியான போனஸ் வழங்கிட வேண்டும். 
இதற்கு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் 
என்பதே தோழர்களின் எதிர்பார்ப்பு.

ஒப்பந்த ஊழியர்களுக்கு  நியாயமான போனஸ்
 வழங்கிட தொடர்ந்து வலியுறுத்துவோம்.

No comments:

Post a Comment