Tuesday 6 June 2017

தடைகளைத் தாண்டு… 
தடகள வீராங்கனை தோழியர்.கார்த்திகா 
NFTE காரைக்குடி GM அலுவலகக் கிளைச்செயலர்
அருமைத்தோழியர்.கார்த்திகா அவர்கள்
JTOவாகப் பதவி உயர்வு பெற்று பயிற்சி முடித்தார்…

தோழியர்.கார்த்திகா அவர்கள்
அகில இந்திய அளவில் தடகளப்போட்டியில்…
ஏராளமான விருதுகளைப் பெற்று
தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர்…
தாயாக ஆனபோதும் விருது பெற தடையில்லை…
JTO தேர்வு வந்தபோதும்
தயங்காமல் தடகளத்தில்..
தடம்பதித்து விருது பெற்றார்…

பெண்ணாக இருந்தும்…
தடகளத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும்…
அவரது சிறப்புக்களை கணக்கில் கொண்டு…
அவருக்கு காரைக்குடியிலேயே…
பதவி உயர்வில்...
பணியமர்த்த கோரிக்கை வைத்தோம்…

ஆனால் ஆணாதிக்க சமுதாயத்திலே…
எதிர்ப்புக்கள் பல்வேறு உருவில் வந்தன…
தற்போது தடைகளைத் தாண்டி…
தடங்கல்களைத் தாண்டி…
காரைக்குடி IMPCS பகுதியில் 
JTOவாகப் பொறுப்பேற்கிறார்…

டெல்லித் தலைமையகத்தில் இயக்குநராக…
சென்னைத் தலைமையகத்தில் முதன்மை அதிகாரியாக..
சிறப்பாகப் பெண்கள் பணிபுரியும் BSNL துறையில்…
கார்த்திகா போன்ற தோழியர்களின் கோரிக்கை…
கனிவோடு பரிசீலிக்கப்பட்டுள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது…

பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா
என பாரதி பெருமையோடு பாடினான்…
திறமை கொண்ட பெண்மைக்கு…
உரிய பெருமை சேர்க்கும் பணியில்
தங்கள் பங்கினைச்செலுத்திய…
அனைவருக்கும் நமது மனமார்ந்த நன்றிகள்…

தோழியர் கார்த்திகா அவர்களுக்கு..
பரிவுடன் பக்கபலமாக இருந்த
அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்…

நிர்வாகத்தின் சார்பில்…
DIRECTOR(HR)...
தமிழக CGM… GM (HR), DGM(HR)
காரைக்குடி பொதுமேலாளர்…

NFTE சார்பில்…
அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது…
அருமைத்தோழர்.C.K. மதிவாணன்
தமிழக மாநிலச்செயலர் தோழர்.நடராஜன்
தமிழக மாநிலத்தலைவர் தோழர்.காமராஜ்
தமிழக மாநில உதவிச்செயலர்.தோழர்.முரளிதரன்
தமிழக மாநில உதவிச்செயலர்.தோழர்.முருகேசன்..
தமிழக மாநில உதவித்தலைவர்.தோழர்.சென்னகேசவன்

AIBSNLEA சார்பில்…
அகில இந்தியத்தலைவர் தோழர்.சிவக்குமார்
தமிழக மாநிலச்செயலர் தோழர்.துரையரசன்
தமிழக மாநில உதவிச்செயலர் தோழர்.காமராஜ்
காரைக்குடி மாவட்டச்செயலர் தோழர்.மோகன்தாஸ்
ஆகியோருக்கு நமது நன்றிகள் பல...

எதிர்ப்பு நிலைக்காது... பரிவு அழியாது..
காலத்தினால் செய்த உதவி... ஞாலத்தினும் மானப்பெரிது..

தடைகளைத் தாண்டி…
தடங்கல்களைத் தாண்டி..
தன்மானமிக்க அதிகாரியாக…
தன்னலமற்ற தோழியராக…
தனது பணியில் முத்திரை பதிக்க…
தாயுள்ளத்தோடு 
தோழியர்.கார்த்திகாவை
மனதார வாழ்த்துகின்றோம்…

2 comments:

  1. தோழி கார்த்திகா பணி சிறக்க வாழ்த்துக்கள் உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் , தடைகளை ஏற்படுத்தி அனுபவ பாடத்தை கற்று கொடுத்த அந்த 2 நபர்களுக்கும் வாழ்த்துக்கள்.அவர்களது வாரிசுகளுக்காவது இவ்வாறாக செய்யாமல் இருக்க ஆண்டவனை வேண்டுவோம்...

    ReplyDelete
    Replies
    1. தடைகளைத் தாண்டி…
      தடங்கல்களைத் தாண்டி..
      தலைவர் துணையுடன்
      வெல்வோம் வீதி மீறுவோம்
      வென்றெடுப்போம்

      Delete