Thursday 29 June 2017

தீர்வை நோக்கி… திறனுக்கேற்ற கூலி…
DY. CLC  திரு.சீனிவாஸ் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை 
ஒப்பந்த ஊழியர்கள் திறன் அடிப்படையில் பிரிக்கப்பட்டு
அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ற கூலி வழங்கப்பட வேண்டும் என NFTCL தொடுத்த வழக்கின் விசாரணை 
29/06/2017 அன்று சென்னையில்...
துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர் முன்பு நடைபெற்றது. 

தமிழகத்தில் குடந்தை மற்றும் தஞ்சாவூர் தவிர
ஏனைய மாவட்டங்களில் இருந்து உண்மையான தகவல் 
மாநில நிர்வாகத்திற்கு அனுப்பப்படவில்லை. 

சென்னைத்தொலைபேசியில் 2 கோட்டங்களில் 
இருந்துதான் விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இப்பிரச்சினை உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் மேலும் காலதாமதம் செய்வது முறையானது அல்ல என்றும் DY.CLC உறுதியாக BSNL அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பல்வேறு விவாதங்களுக்குப்பின்…

ஒப்பந்த ஊழியர்களை அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ப
திறன் அடிப்படையில் பிரித்து உரிய கூலி வழங்குவதற்கு 
ஒரு குழு அமைக்கப்படும் எனவும்... 
அந்தக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்..
பணிகள் தரம் பிரிக்கப்படும் எனவும்…
பணிக்கேற்ற கூலி வழங்கப்படும் எனவும்...
இவை யாவும் விரைவில் செய்து முடிக்கப்படும் எனவும்... 
தமிழ்மாநில நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதிக கால அவகாசம் தர இயலாது எனவும்...
மேற்கண்ட பணி விரைவில் முடிக்கப்பட வேண்டும் எனவும்… 
அவசியமெனில் தமிழகம் மற்றும் சென்னை முதன்மைப் பொதுமேலாளர்களுக்குத் தாம் இதுபற்றி நேரில் வலியுறுத்த 
தயாராக இருப்பதாகவும் DY.CLC தெரிவித்தார். 

அடுத்த கூட்டம் 26/07/2017 அன்று நடைபெறும் எனவும்...
அதில் இப்பிரச்சினை இறுதி செய்யப்படவேண்டும் எனவும்...
DY.CLC முடிவாக அறிவித்தார்... சென்னைத்தொலைபேசியிலும் இதே நடைமுறை பின்பற்றப்படவேண்டும் எனவும் வழிகாட்டப்பட்டது. 

  • சென்னைத்தொலைபேசியில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும்… 
  • அனைத்துப்பணிகளும் ஒப்பந்த முறை TENDER மூலமே செயல்படுத்தப்படவேண்டும்… 
  • QUOTATION மூலம் பணிகள் செய்வது நிறுத்தப்படவேண்டும்…
  • மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சக்கூலி அமுல்படுத்தப்பட வேண்டும்..
என நமது சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னை மாநில நிர்வாகத்திற்கு உரிய முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

ஒப்பந்த ஊழியர்களுக்கு திறன் அடிப்படையில் கூலி வழங்கும் பிரச்சினை  ஜூலை 26க்குள் சாதகமாக முடிக்கப்படும் என்று நம்புகிறோம். அதற்கான சூழலை உருவாக்கிய அதிகாரிகளுக்கும்... DY.CLCக்கும் நமது நன்றிகள்.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள்
NFTCL
தோழர்.ஆனந்தன் – மாநிலச்செயலர்
தோழர்.பாபு – மாநிலத்தலைவர்
தோழர்.மாரி – மாநில செயல்தலைவர்
தோழர்.சம்பத் – மாநிலப் பொருளர்

TNTCW
தோழர்.முருகையா
தோழர்.பழனிச்சாமி
தோழர்.வினோத்

தமிழ் மாநில நிர்வாகம்
திரு.இராஜசேகரன் AGM

சென்னைத்தொலைபேசி
திரு.கருப்பையா DGM
திருமதி.சங்கரி AGM

பிரச்சினை தீர்வில் மனித நேயத்துடன் 
உரிய முறையில் பங்காற்றிய

திரு.இராஜசேகரன் AGM மற்றும் 
திரு.கருப்பையா DGM ஆகியோருக்கும் 
DY.CLC அவர்களுக்கும்   நமது நன்றிகள்….

No comments:

Post a Comment