Wednesday, 21 June 2017



வைப்புநிதி 
GPF வைப்புநிதி பட்டுவாடா சனிக்கிழமையன்று துவங்கியுள்ளது. பட்டுவாடா இன்னும் முழுமையாக முடியவில்லை. கர்நாடகாவின் காவிரித்தண்ணீர் போல் வைப்புநிதி பட்டுவாடா வந்து சேருகிறது. 
எந்த அடிப்படையில் வைப்புநிதி பட்டுவாடா நடைபெறுகிறது என்பதுவும் புரியவில்லை. அவரவர்களுக்குரிய அதிர்ஷ்டம் மற்றும் மச்சத்தின் அடிப்படையில் பட்டுவாடா வந்து சேருகிறது. 
பட்டுவாடா இந்த வாரம் முழுமையாக நடந்து முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது DOTCELL நேரடியாகப் பட்டுவாடா செய்வதால் நிதிப்பிரச்சினை உருவாகாது. 
ஆனாலும் DOTCELLக்கு இது புதிய நடைமுறை என்பதால் 
ஒரிரு மாதங்கள் சற்று தாமதம்  நேரலாம். 
விரைவில்  வைப்புநிதி பட்டுவாடா சீராகும் என்று நம்புவோம்.
------------------------------------------------------------------------------------------
NODAL OFFICER
ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளைக் கேட்டறியவும்… குறைகளைத் தீர்த்து வைக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 
NODAL OFFICER  – பொறுப்பதிகாரிகளை நியமனம் செய்யவேண்டும் என AIBSNLPWA ஓய்வூதியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும்… CAO FINANCE முதன்மை கணக்கதிகாரி நிதி பொறுப்பதிகாரியாகச் செயல்படுவார் என்றும் CAO இல்லாத இடங்களில் கணக்கு அதிகாரிகள் பொறுப்பதிகாரியாகச் செயல்படுவார்கள் எனவும் மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
78.2 சத IDA
10/06/2013க்கு முன் ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 IDA இணைப்புப் பணி ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. பெரும்பகுதி தோழர்கள் நிலுவை பெற்றுள்ளனர். சில தோழர்களுக்கு உத்திரவு வெளிவந்துள்ளது. இதனிடையே முந்தைய ஆண்டுகளில் கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை EXTRA INCREMENT கிடைக்கப்பெற்று ஓய்வூதியப் பலன்களைப் பெற்றவர்களின் 78.2 சத IDA இணைப்பை DOTCELL நிராகரித்துள்ளது. EXTRA INCREMENT ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது என்ற உத்திரவு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தவறாக கொடுக்கப்பட்ட பணத்தை பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் அதற்காக வழிகாட்டுதல் கேட்கப்பட்டுள்ளதாகவும் DOTCELL கூறியுள்ளது. காரைக்குடி மாவட்டத்தில் 36 தோழர்களின் 78.2 சத இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள் சங்கத்திற்கு தற்போது கூடுதல் பிரச்சினை உருவாகியுள்ளது. தலையிட்டுத் தீர்த்திட வேண்டுகிறோம்.
------------------------------------------------------------------------------------------

கருணை அடிப்படைப்பணி 

பரிவு அடிப்படை வேலைக்கான உயர்மட்டத் தேர்வுக்குழு 
ஜூலை மாதத்தில் கூடவுள்ளது. எனவே மாவட்டங்கள் 30/06/2017க்குள் தங்கள் கைவசமுள்ள விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் 
என மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
ஒப்பந்த ஊழியர் பணித்திறன்

ஒப்பந்த ஊழியர்களை அவர்கள் பார்க்கும் வேலைத்தன்மையின் அடிப்படையில் தரம் பிரித்து விவரங்கள் அளித்திட 
மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களைப் பணித்திருந்தது.  இன்னும் 7 மாவட்டங்களில் இருந்து விவரங்கள்
 வரவில்லையெனவும்... 29/06/2017 அன்று கூட்டம் நடைபெறவிருப்பதால் உடனடியாக விவரங்கள் அனுப்பப்படவேண்டும் எனவும் மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 
பல மாவட்டங்களில் இருந்து NIL REPORT  அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறோம். துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர் முன்பாக இது தவறென நிலை நாட்டுவோம்... நமது உரிமையை.. கோரிக்கையை வலுவாக NFTCL சார்பாக எழுப்புவோம்..
------------------------------------------------------------------------------------------
துயர்துடைப்பு நிதி
BSNL ஊழியர்களுக்கு நமக்கு நாமே திட்டத்தின் அடிப்படையில் துயர் துடைப்பு நிதி உருவாக்கிட நிர்வாகம் முனைந்துள்ளது. ஆண்டுதோறும் 1600 ஊழியர்கள் மரணமுறுவதாகவும், குறைந்தபட்சம் தலைக்கு ரூ.2 லட்சம் துயர்துடைப்பு நிதியாக வழங்கினாலும் ஆண்டுதோறும் 32 கோடி நிதி தேவைப்படும் எனவும் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே நிதி துவக்கத்திற்கு என தனியான பங்களிப்பும், மாதந்தோறும் தனிப்பங்களிப்பும் தேவைப்படும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கங்கள் இது பற்றிய தங்களின் கருத்துக்களை 30/06/2017க்குள் தெரியப்படுத்திட வேண்டும் 
என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

துயர்துடைப்பு நிதிக்கு முதற்கட்டமாக ஓவ்வொரு ஊழியரும் ரூ.1000/- ONE TIME CONTRIBUTION அளிக்கலாம். மாதந்தோறும் ரூ.100/- பங்களிப்பாக செலுத்தலாம் என்பது நமது கருத்தாகும்.

No comments:

Post a Comment