Sunday, 11 June 2017

கடைத்தேங்காய்

இந்த தேசத்தை நாசமாக்கும்
ஆட்சியாளர்களின் சாதனைகளை… விளம்பரப்படுத்திட…
நாடு தோறும் சாதனை விளக்க கூட்டம் நடைபெறுமாம்…
இதற்கான செலவுகளை மக்களுக்கு சொந்தமான
பொதுத்துறைகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்…

கடைத்தேங்காய்களை...
வழிப்பிள்ளையாருக்கு
உடைத்தாலும் பரவாயில்லை….
மக்களை வரியிலும்...
பசியிலும்... கொடுமையிலும் வாட்டும்…
வழிப்பறி பிள்ளையாருக்கு உடைத்திடலாமா…
அதை நாம் அனுமதித்திடலாமா?

தோழர்களே… அணி திரள்வீர்…
பொதுத்துறைகளின் பணம் யார் அப்பன் வீட்டுப்பணம் அல்ல…
இந்திய தேசத்தின் குப்பன் வீட்டு… சுப்பன் வீட்டுப்பணம்…

எனவே இந்த கொள்ளை எதிர்த்து…
தமிழகம் முழுவதும்… அனைத்து தொழிற்சங்கங்களும்
12/06/2017 
கண்டன ஆர்ப்பாட்டம்…

காரைக்குடியில்… கண்டன ஆர்ப்பாட்டம்...
12/06/2017 – திங்கள் மதியம் 01 மணிக்கு
பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெறும்….

வைப்புநிதி பட்டுவாடா செய்ய வக்கில்லை…
வானுயர விளம்பரங்களுக்கு நம் பணம் வீணாவதோ?
தோழர்களே… வருக… கண்டனக்குரல் தருக…

No comments:

Post a Comment