Monday, 31 December 2018

new year 2019 animation greetings க்கான பட முடிவு
HAPPY NEW YEAR 2019 
தேசம் தெளிவு பெறட்டும்...
பொதுத்துறைகள் பொலிவு பெறட்டும்…
உழைப்போர் உயர்வு பெறட்டும்…

அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

Sunday, 30 December 2018


பண்பில் உயர்ந்த பண்பாளர் வாழ்க…
PGM FINANCE திரு.இரவி அவர்களுடன் மாநிலச்செயலர் தோழர்.நடராஜன்
மாநில உதவிச்செயலர் தோழர்.முரளி, தோழர்.மனோஜ், தோழர்கள்.மாரி மற்றும் லால்பகதூர்
 இன்று 31/12/2018  பணிநிறைவு பெறும்
தமிழ்மாநில PGM FINANCE
முதன்மைப்பொதுமேலாளர் நிதி
அன்புக்கும் மரியாதைக்கும் உரிய
உயர்திரு. G.இரவி
அவர்களின் பணிநிறைவுக்காலம்
நலமுடனும்… வளமுடனும்…
சிறப்புடனும் விளங்க வாழ்த்துகின்றோம்.
 ---------------------------------------------------------------------------------------
இறுகிய இதயங்கள் கொண்ட நிதிப்பிரிவில்…
இவர் ஓர் இளகிய இதயம்…
சட்டங்களை மட்டும் சொல்லி
சங்கங்களுக்கு சங்கடங்கள் தந்ததில்லை…
மனிதநேயத்தைக் காட்டி…
மாற்று வழி சொல்லிடுவார்…
தனிநபர் துயரங்களைத்
தனது துயரம் போல் எண்ணிடுவார்…
கணக்குப் பிரிவு அதிகாரிகளுக்கு..
கணக்கற்ற நன்மைகள் செய்திட்டார்…
எண்ணற்ற நன்மைகளை…
எல்லோருக்கும் செய்திட்டார்…
உயர் பதவியில் இருந்தாலும்…
உற்ற தோழமையைக் காட்டிடுவார்…
பதவியில் உயர்ந்த…
பண்பில் உயர்ந்த...
பாசத்தில் உயர்ந்த...
பண்பாளர் திரு.இரவி அவர்கள்
பல்லாண்டு காலம் வாழ்க… வாழ்க…
என வாழ்த்துகின்றோம்…
---------------------------------------------------------------------------------
வாழ்த்துக்களுடன்...
NFTE காரைக்குடி மாவட்டச்சங்கம்

பயனுற வாழ்த்துகின்றோம்…. 

இன்று 31/12/2018 பணி நிறைவு பெறும்
SEWA BSNL அகில இந்தியத்தலைவர்
அன்புத்தோழர்… அருமைச்சகோதரர்…
திரு P.N.பெருமாள்
அவர்களின் பணிநிறைவுக்காலம்
அல்லலுறும் அடித்தட்டு மக்களுக்களின்
மேன்மைக்காகப் பயனுற வாழ்த்துகின்றோம்….

காரைக்குடி NFTE மாவட்டச்சங்கத்தின் சார்பாக
நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்…

Friday, 28 December 2018


பணி நிறைவு வாழ்த்துக்கள்

காரைக்குடி மாவட்டத்தில்
31/12/2018 அன்று பணிநிறைவு பெறும்
அன்புத்தோழர் 
S.ஸ்ரீனிவாசன்  
TT/காரைக்குடி

அருமைத்தோழியர் 
J.சண்முகவள்ளி 
 TT/காரைக்குடி
ஆகியோரின் பணிநிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.
===================================================
பணி நிறைவு விழா
29/12/2018 – சனிக்கிழமை – மாலை 05 மணி
கிருஷ்ணா திருமண மண்டபம் – காரைக்குடி.
தோழர்களே… வாரீர்…

Tuesday, 25 December 2018


பொது வேலைநிறுத்தம் 

2019 ஜனவரி 8 - 9
இந்திய தேசத்தின் 
அனைத்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்த
மாபெரும் தேசம் தழுவிய  
இரண்டு நாள் வேலை நிறுத்தம்…
 BSNL தொழிற்சங்கங்கள் பங்கேற்பு…

கோரிக்கைகள்
 மத்திய அரசே… 
வேலை வாய்ப்புக்களை உருவாக்கு…
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து…
ஒப்பந்த ஊழியர் முறையை ரத்து செய்…
பன்னாட்டு மூலதனத்தை அனுமதிக்காதே…
குறைந்த பட்ச ஊதியம் ரூ.18000/= வழங்கு…
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.3000/= வழங்கு…
தொழிலாளர் பணிக்கொடை அளவை உயர்த்து…
பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை நிறுத்து…
தொழிலாளர் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்து…
தொழிலாளர் விரோத சட்டங்களை உருவாக்காதே…
ஒப்பந்த ஊழியருக்கு நிரந்தர ஊழியர் கூலி வழங்கு…
போனஸ் மற்றும் வைப்புநிதி EPF உச்சவரம்பை நீக்கு…
அனைத்து தொழிலாளருக்கும் நலத்திட்டங்களை அமுல்படுத்து..
இரயில்வே, இராணுவம் மற்றும் ஆயுள் காப்பீட்டை சீரழிக்காதே….
 ---------------------------------------------------------------------------------
தோழர்களே…
தேசத்தை சீரழிக்கும்…மத்திய அரசின் 
மக்கள் விரோத… தொழிலாளர் விரோத…
கொள்கைகளுக்கு எதிராய்…
களம் காண்போம்…. உரிமை வெல்வோம்…
தயாராவீர் தோழர்களே…

Monday, 24 December 2018


கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

பாவங்கள் தொலைகவே…
மனிதநேயம் மலர்கவே…


அனைவருக்கும்…
இனிய கிறிஸ்துமஸ்
நல்வாழ்த்துக்கள்..

Sunday, 23 December 2018


மக்களின் தலைவர்…
 
டிசம்பர் – 24
மக்கள் திலகம் எம்ஜியார் 
நினைவு நாள் 

எம்ஜியார் தமிழக முதல்வராக இருந்தபோது...
மதிய உணவுத்திட்டம் என்ற பெயரால்
மக்கள் வரிப்பணத்தை வீணாக்கலாமா?
என்ற கேள்வி எழுப்பப்பட்டது….

அதற்கு எம்ஜியார் அவர்களே மனம் உருகி சொன்ன பதில்…

நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.
பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு?
பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத்
தொழில் முறை நடிகர்களை வைத்து 
நாடகம் போடும் நிறுவனங்கள்.
அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள்.
வறுமையின் காரணமாகவும்,
கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள்.
எல்லோரும் ஒன்றாகத் தங்கிஒன்றாக உண்டு,
ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள்.
சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்.

வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது.
ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப்
பழி தீர்த்துக் கொள்வதும் அப்போதுதான்.
வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்...

ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்ந்திருக்கோம்.
நல்ல பசி இலை போட்டாச்சு.
காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க.
சோறு வந்துகிட்டே இருக்கு
என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர்
நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு.
வேகமாக என்கிட்ட வந்தாரு.
' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதல் பந்தி கேட்குதானு?...
கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார்.
கையில சோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில
எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்?
ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட
அவமானம்தான் அதிகமாக இருந்தது
அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது,
கேள்வி கேட்க முடியாது...
தன் கிட்ட அதிகாரம் இருக்குனுதானே எழுப்பிவிடறாரு?
எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா
நான் நாலு பேருக்குச் சோறு போடுவேன்
எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்னு
அன்றைக்கு நினைச்சேன்...

இன்னிக்கு எல்லோரும் என்னை
வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது
எனக்கு அவங்களுக்கு சோறு போடற
கடமை இருக்கிற நினைப்பு வருது.
அடுத்த வேளைச் சோற்றுக்கு 
உத்திரவாதம் இருக்கிறவங்க...
ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன
வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்.
எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை….

அவரது அனுபவ விளக்கம்....
எந்தப்பொருளாதாரத் தத்துவங்களாலும் விளக்க முடியாதது….

ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள்
படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு விலகும் விகிதம் (DROP OUT)
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு.

NUEPA - The National University of Educational Planning and Administration
என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த அறிக்கையின்படி
தமிழகத்தில் நூறுசத மாணவர்கள்
தங்கள் ஆரம்பக்கல்வியை படித்து முடிக்கின்றார்கள்.

அதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள சத்துணவுத்திட்டம்.
சத்துணவுத்திட்டம் என்றாலே
பெருந்தலைவர் காமராஜரும்…
மக்கள் திலகம் எம்ஜியாருமே
மக்கள் மனங்களில் நிற்பார்கள்…

மக்களுக்கு மயிலிறகாக வாழ்ந்து மறைந்த
மக்கள் திலகம் நினைவைப் போற்றுவோம்….

Saturday, 22 December 2018


என்றும் அவரே பெரியார்…

டிசம்பர் - 24

தந்தைப் பெரியார் நினைவு நாள்


1938 நவம்பர்...
சென்னைப் பெரம்பூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும்
ஒரு சேரிப்பகுதியில் சீர்திருத்த திருமணம் நடைபெறுகின்றது.
ஈவெரா... திருமதி. மீனாம்பாள் சிவராஜ் 
ஆகிய இருவரும் கூட்டுத்தலைமை…

திருமணம் முடிந்தது. 
சோறும் குழம்பும் மணத்தது.
ஆனால் சேரிப்பகுதியோ 
சேறும் சகதியுமாக முகம் சுழித்தது.
ஈவெரா பார்த்தார்...
ஒரு வீட்டின் மேல் கூரையில் இருந்த
ஓலை ஒன்றை இழுத்துக் கீழே போட்டார்.
அதிலே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.
அந்தக் காட்சியைத் தோழர்கள் கண்ணுற்றனர்.
குறிப்பாகப் பெண்களை 
அந்தக்காட்சி மிகவும் ஈர்த்தது.

இவ்வளவு எளிமையான ஒரு தலைவரை நாம்
இதுவரை கண்டதில்லை.
இவரை விட எளிமையிலும் மக்கள் உரிமை காப்பதிலும்
பெரியவர் யாருமில்லை எனப் பேசிக்கொண்டார்கள்.

காந்தியார் மகாத்மா என புகழப்படுகின்றார்…
காஞ்சி சங்கராச்சாரியார் பெரியவர் என அழைக்கப்படுகிறார்…
ஈவெரா ஏன் பெரியார் என அழைக்கப்படக்கூடாது? 
என்று பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்…
பேசியதோடு நிற்கவில்லை…

1938 நவம்பர் 13ம்தேதி
சென்னை ஒற்றைவாடை நாடகக்கொட்டகையில்
தமிழகப் பெண்கள் மாநாட்டைக் கூட்டினர்...
5000க்கும் அதிகமான பெண்கள் கூடினர்…
திருவரங்க நீலாம்பிகை அம்மையார்...
மீனாம்பாள் சிவராஜ் அம்மையார்...
தாமரைக்கண்ணி அம்மையார்...
நாராயணி அம்மையார்...
டாக்டர் தருமாம்பாள் அம்மையார்...
மலர்முகத்தம்மையார்...
இராமாமிர்தம் அம்மையார்...
பார்வதி அம்மையார்...
கலைமகள் அம்மையார்...
என்ற  பெண்கள்  தலைவர்கள் ஒன்று கூடி விவாதித்தனர்….

இந்திய நாட்டிலே...
ஈவெராவைப் போலப் 
பெண்கள் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும்
உளமாரப் பாடுபட்டவர் யாருமில்லை.
சீர்திருத்தவாதிகளிலே...  
இவரை விடப்பெரியவர் யாருமில்லை….
எனவே ஈவெரா அவர்களை 
இனிமேல் பெரியார் என்றே அழைப்போம்.. 
எனப் பெண்கள் மாநாடு 
உற்சாகமுடன் தீர்மானம் இயற்றியது….

அன்றிலிருந்து... 
ஈ.வெ.ராமசாமி நாயக்கர்...
என்றழைக்கப்பட்ட ஈவெரா
தந்தைப்பெரியார் என 
தரணி முழுக்க அழைக்கப்படுகின்றார்…

பெரியார் என்று அவர் அழைக்கப்பட்டு
80 ஆண்டுகள் ஆகிவிட்டன…
800 ஆண்டுகள் ஆனாலும்…
8000 ஆண்டுகள் ஆனாலும்…
80000 ஆண்டுகள் ஆனாலும்...

என்றும் அவரே..
பெரியார் பெரியார்.. பெரியார்…
தொடர்புடைய படம்
அய்யர் என்னும் அணையாவிளக்கு

டிசம்பர் – 23
தோழர்.வெங்கடேசன்
நினைவு நாள்..

கல்லாய் இருந்த எங்களை…
கலையாய் வடித்தெடுத்தாய்…

புல்லாய் இருந்த எங்களை…
நெல்லாய் வளர்த்தெடுத்தாய்…

சிப்பியாய் இருந்த எங்களை
முத்தாய் முகிழ்த்தெடுத்தாய்…

காயாய் இருந்த எங்களை
கனியாய் பறித்தெடுத்தாய்…

சேயாய் தவழ்ந்த எங்களை..
தாயாய் அணைத்தெடுத்தாய்…

இதயம் துடிக்குமட்டும்….
இமைகள் நிலைக்குமட்டும்…
உன் பிரிவு ஆறாது...
உன் நினைவு மாறாது…

என்றும் வணங்கி நிற்கும்…
காரைக்குடியின் அன்புத்தோழர்கள்…
 ----------------------------------------------------------------------------------------
தோழர் வெங்கடேசன்
புகழஞ்சலிக் கூட்டம்
 -----------------------------------------------------------
26/12/2018 – புதன் – மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி
 -----------------------------------------------------------
தலைமை 
தோழியர். காந்திமதி வெங்கடேசன்...

புகழஞ்சலி 
எழுத்தாளர். சந்திரகாந்தன்
மற்றும் தோழர்கள்…

தோழர்களே… வருக…

Friday, 21 December 2018


ஓங்குக… தொழிற்சங்க ஒற்றுமை...

மைசூரில் நடந்த…
BSNLEU அகில இந்திய மாநாடு…
தொழிற்சங்க ஒற்றுமை என்னும்….
மதிப்பு மிக்க பதாகையை
மிக உயரத்தில் உயர்த்திப் பிடித்துள்ளது…

BSNLலில் ஏதேனும் ஒரு சங்கம்
50 சதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றால்
அந்த ஒரு சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் உண்டு..
வேறு ஏதேனும் ஒரு சங்கம்
49 சத வாக்குகள் பெற்றாலும்
இரண்டாவது சங்க அங்கீகாரம் கிடையாது என்பதுதான்
இன்றுவரை BSNLலில் உள்ள சங்க அங்கீகார தேர்தல் விதிகள்…

மேற்கண்ட விதி முழுமையான தொழிற்சங்க
ஜனநாயகத்திற்கு உகந்த விதியல்ல….
எனவே இந்த விதி மாற்றப்பட வேண்டும் என்பது
நமது சங்கத்தின் தொடர் கோரிக்கை… 

தற்போது…
இந்த விதி மாற்றப்பட வேண்டும் என
வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானத்தை…
BSNLEU சங்கம் தனது மைசூர் அகில இந்தியமாநாட்டில்
ஒருமனதாக ஏகமனதாக இயற்றியுள்ளது…

உறுதியான தொழிற்சங்க ஒற்றுமைக்கும்…
முழுமையான ஜனநாயக செயல்பாட்டிற்கும்..
BSNLலில் நல்வழி பிறந்துள்ளது…

BSNL என்னும் பொதுத்துறை காப்பது…
BSNL ஊழியர் அதிகாரிகள் நலம் காப்பது…
BSNL தொழிற்சங்கங்களிடையே ஒற்றுமை காப்பது…

என்ற திசைவழியில்
தீர்க்கமாக தீர்மானம் இயற்றியுள்ள…
BSNLEU சங்கத்திற்கு நமது நல்வாழ்த்துக்கள்…