Wednesday 12 December 2018


AUAB கூட்ட முடிவுகள்

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு 11/12/2018 அன்று டெல்லியில் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்கள் தலைமையில் கூடியது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

நமது வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணங்களையும், நமது போராட்ட அறைகூவலால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் விளக்கி மாநில, மாவட்ட மட்டங்களில் டிசம்பர் 26 முதல் 29 வரை அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக
விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும்.

நமது கோரிக்கைகள் பற்றித் தொடர்ந்து விவாதிக்கவும், கோரிக்கைகளின் முன்னேற்றம் பற்றிக் கண்காணிக்கவும் 
DOT கூடுதல் செயலர் மற்றும் மூத்த அதிகாரிகளை  
அனைத்து சங்க கூட்டமைப்பு விரைவில் சந்திப்பது.

இலாக்கா அமைச்சரின் உத்தரவின்படி சங்கப்பிரதிநிதிகள் 
DOT அதிகாரிகளை  சந்திப்பதற்கு  ஏதுவான ஒரு அமைப்பை 
DOT கூடுதல் செயலர் தலைமையில் உருவாக்கிட  
விரைவில் நடவடிக்கை எடுப்பது.

போராட்ட அறைகூவலால் கோரிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் போராட்டத்தை ஒத்திவைப்பதற்கான சூழல் ஆகியவற்றை விளக்கி அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக விரிவான விளக்கமான சுற்றறிக்கையை விரைவில் வெளியிடுவது.

 CMD அவர்களை சந்தித்து BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதியப் பங்களிப்பை உயர்த்துவதற்கான 
உத்திரவை விரைவில் வெளியிடச்செய்வது.

No comments:

Post a Comment