Wednesday 27 March 2019


அடிமேல் அடி அடித்தால் அரசும் நகரும்…

01/01/2017 முதல் BSNL மற்றும் MTNLலில் பணிபுரிந்து 
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் கோரி 
BSNL மற்றும் MTNL ஓய்வூதியர்கள் சங்க கூட்டுக்குழு மத்திய அரசிடம் 12/02/2019 அன்று கோரிக்கை மனு அளித்திருந்தது. 

08/03/2019 அன்று ஓய்வூதிய இலாக்கா ஓய்வூதிய மாற்றம் பற்றி DOTயிடம் சில விளக்கங்களைக் கேட்டுள்ளது. இது சம்பந்தமாக 14/01/2019 அன்றே DOTயிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டதும்…
 DOT இன்று வரை விளக்கம் அளிக்கவில்லை என்பதும் 
DOTயின் அலட்சியப்போக்கை அப்பட்டமாகக் காட்டுகின்றது.

DOTயிடம் கேட்கப்பட்ட விளக்கங்கள்

01/01/2017க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய மாற்றத்திற்கான அளவுகோல் FORMULA என்னவென்று 
DOT தெளிவாகக் குறிப்பிடவில்லை. மேலும் ஓய்வூதிய மாற்றத்தினால் உண்டாகும் நிதிச்சுமையின் அளவும் குறிப்பிடப்படவில்லை.

BSNL மற்றும் MTNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் அளிக்கப்படாத காரணத்தினால் ஓய்வூதிய மாற்றம் அளிக்க வழி இல்லை என DOT கூறியுள்ளது.  இத்தகைய சூழலில் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட்டால் அவர்கள் வாங்கும் ஓய்வூதியம் கூடுதலாகவும், தற்போது BSNL/MTNLலில் பணிபுரிந்து ஓய்வு பெறுவோரின் ஓய்வூதியம் குறைவாகவும் பெறக்கூடிய சூழல் உருவாகும். அத்தகைய சூழலில் இந்த வேறுபாட்டைக் களைய DOTவசம் உள்ள திட்டம் என்ன என்பதையும் 
DOT தெளிவுபடுத்த வேண்டும்.

எனவே DOT மேற்கண்ட வினாக்களுக்கு விளக்கம் அளித்திட வேண்டும் என ஓய்வூதிய இலாக்காவின் செயலர் 
DOTக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஓய்வு என்பது ஓய்ந்திருப்பதற்கல்ல… 
மாறாக உரிமைகளை வாதாடிப் போராடிப் பெறுவதற்கே 
என்று முழுமுனைப்போடு…
ஓய்வூதிய மாற்றத்தை அடைந்தே தீருவோம் என்று பாடுபடும் ஓய்வூதியர் சங்க அமைப்புக்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

முயற்சி திருவினையாக்கும்…
அடிமேல் அடி அடித்தால் 
அம்மி மட்டுமல்ல... அரசும் நகரும்...

No comments:

Post a Comment