Friday, 1 March 2019


AIRPORTS AUTHORITY OF INDIA  
ஊழியர்களின் ஊதியமாற்றம்

AIRPORTS AUTHORITY OF INDIA நிறுவன ஊழியர்களுக்கு
01/01/2017 முதல் ஊதியமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட சங்கமான AAEU உடன் ஏற்பட்ட
ஊதிய உடன்பாட்டின் அடிப்படையில்
ஊதியமாற்றம் அளிக்கப்படுகின்றது.

AAI நிறுவனத்தில் ஏறத்தாழ 17,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வந்த AAI நிறுவனத்தை
மூடிவிட வழக்கம்போல் மத்திய அரசு முயற்சித்தது.
பலகட்டப்போராட்டங்களுக்குப் பின்
தற்போது அவர்களுக்கு ஊதியமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஊதியமாற்றத்தில் சில துளிகள்…

15 சத ஊதிய உயர்வு வழங்கப்படும்…
ஜனவரி 2017 அன்று 119.5 சத IDA முழுமையாக இணைக்கப்படும்.
குறைந்தபட்ச அடிப்படைச்சம்பளம் NE-1 ரூ.25,000/-
அதிகபட்ச அடிப்படைச்சம்பளம் NE-10 ரூ.40,000/-
வீட்டுவாடகைப்படி 24.. 16.. 8 சதம் என வழங்கப்படும்…
உற்பத்தியோடு இணைந்த ஊதியம் PLP வழங்கப்படும்…
பல்வேறு படிகள் தொடர்ந்து வழங்கப்படும்…
மூன்று ஆண்டுகளுக்குப்பின் நிதிநிலை ஆராயப்படும்.
லாபம் இல்லையெனில் படிகள் நிறுத்தப்படும்.

தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வந்தாலும்
AAI ஊழியர்கள் முழுமையான
15 சத ஊதியமாற்றத்தை அடைந்திருப்பது பாராட்டுக்குரியது.
ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்த அளவில்
இருப்பதுவும் ஒரு காரணமாகும்.

முழுமையான ஊதியமாற்றத்தை அடைந்து
AAI ஊழியர்கள் இன்று இறக்கை கட்டிப்பறக்கின்றனர்…

சிறகொடிந்த BSNL ஊழியர்களோ…
AAIக்குப் பொருந்தும் அளவுகோல்
BSNLக்குப் பொருந்தாதா?
என்ற நியாயமான கேள்வியை எழுப்புகின்றனர்….

No comments:

Post a Comment