Wednesday, 6 March 2019


அனைத்து சங்க கூட்டம்

இன்று 07/03/2019 டெல்லியில் காலை 11 மணிக்கு
அனைத்து சங்க கூட்டம் நடைபெறுகின்றது.
DOT மற்றும் BSNL நிர்வாகங்களின் அடாவடித்தனங்கள்  
நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றன.
குதிரை கீழே தள்ளிக் குழியும் பறித்தது போல
நமது போராட்டத்தைக் கண்டுகொள்ளாத நிர்வாகங்கள்
பிப்ரவரி மாத சம்பளத்தைப் பட்டுவாடா செய்யாமல்
நம்முடைய வயிற்றிலும் மண்ணடிக்க ஆரம்பித்து விட்டன.

அதோடு நிற்கவில்லை…
போராட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மீது
FR-17 A என்னும் மரித்துப்போன சட்டங்கள் பாயும் 
எனவும் நிர்வாகங்கள் கொக்கரிக்க ஆரம்பித்துள்ளன.

உழைத்த ஊழியர்களின் சம்பளப்பட்டுவாடா பற்றி
இதுவரை  எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இந்நிலை பற்றி விவாதிக்கவும் உரிய முடிவுகள் எடுக்கவும் நமது அனைத்து சங்க கூட்டமைப்பு இன்று கூடுகின்றது.
தோழர்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டு
உரிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

No comments:

Post a Comment