Tuesday, 23 February 2021

 இனிவரும் காலமும்... இனியவையாகட்டும்...

மனிதனின் செயல்கள் மகத்தானவை...

பிறரின் சுமையை சுமப்பவர்கள் பேறு பெற்றவர்கள்...

எவன் நிலத்திலும்... நீரிலும்...ஓயாமல் உழைக்கிறானோ...

காத்திருந்து... பொறுத்திருந்து... போராடுகிறானோ ...

அவனைப் பேருலகே கொண்டாடும்...

என்ற மகாகவி ஜான் மில்டனின் வரிகளுக்கேற்ப  

தன் பணிக்காலம் முழுவதும்

விளிம்பு நிலை தோழர்களுக்காகப் பாடுபட்ட

அருமைத்தோழர் மில்டன் அவர்களின்

பணிநிறைவுக்காலம் சிறப்புடன் அமைய வாழ்த்துகின்றோம்...

இனிவரும் காலமும் எளியவருக்காக கழியட்டும்...

அன்புடன் வாழ்த்தும்

NFTE காரைக்குடி மாவட்ட சங்கம்

Friday, 19 February 2021

 உலகத் தாய்மொழி தினம்



தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்

NFTE தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

இணைந்து வழங்கும்

உலகத் தாய்மொழி தினம்

21/02/2021 – ஞாயிறு – காலை 10 மணி

NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி

தோழர்களே... வாரீர்...

Wednesday, 17 February 2021

 கிளை மாநாடுகள்

சிவகங்கை வருவாய் மாவட்டக் கிளை மாநாடு

இராமநாதபுரம் வருவாய் மாவட்டக் கிளை மாநாடு


ஒரு காலத்தில் சங்கத்திற்கு புதிய புதிய கிளைகளை

உருவாக்க வேண்டிய கட்டாயம்.

தற்போது அற்ற புலத்து அருநீர்ப்பறவைகள்  போல்

விருப்ப ஓய்விற்குப்பின் ஊழியர்கள் அருகிப்போய்விட்டனர்.

எனவே கிளைகளை இணைக்க வேண்டிய கட்டாயம்.

காரைக்குடியில் 14 கிளைகள் செயல்பட்டன.

இன்று சிவகங்கை வருவாய் மாவட்டத்திற்கு ஒரு கிளை,

இராமநாதபுரம் வருவாய் மாவட்டத்திற்கு ஒரு கிளை

என இரண்டு கிளைகளாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன.  

இனிமேல்கிளைச்செயலர்கள்

வருவாய் மாவட்டச்செயலர்கள் என அழைக்கப்படுவார்கள்.

சிவகங்கை வருவாய் மாவட்டக்கிளை மாநாடு

26/01/2021 காரைக்குடியில் தோழர் காதர்பாட்சா தலைமையிலும்...

இராமநாதபுரம் வருவாய் மாவட்டக்கிளை மாநாடு

13/02/2021 இராமநாதபுரத்தில்

தோழர்கள் சேதுராஜன் மற்றும் ஜேம்ஸ்வாலண்ட்ராயன் ஆகியோர்

கூட்டுத்தலைமையிலும் சிறப்பாக நடைபெற்றன.

---------------------------------------------------------------------

சிவகங்கை வருவாய் மாவட்டக்கிளையின்

தலைவராக தோழர் முருகன் TT – சிவகங்கை

செயலராக தோழர்.ஆரோக்கியதாஸ் TT – காரைக்குடி

இணைச்செயலராக தோழர் ஜெகன் OS – காரைக்குடி

பொருளராகத் தோழியர் பாண்டியம்மாள் OS – காரைக்குடி

ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

------------------------------------------------------------------

இராமநாதபுரம் வருவாய் மாவட்டக்கிளையின்

தலைவராக தோழர் தமிழரசன் TT – பரமக்குடி

செயலராக தோழர். சதீஷ் பாலாஜி, JE – இராமநாதபுரம்

இணைச்செயலர்களாக...

தோழர் ஜேம்ஸ் வாலண்ட்ராயன்  TT – இராமேஸ்வரம்

தோழர் மோகன் TT  – பரமக்குடி

பொருளராகத் தோழர்  முருகேசன் TT – இராமநாதபுரம்

ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்...

Wednesday, 10 February 2021

விடுப்புச்சம்பளமும்...

 வரிவிலக்கும்...

BSNL நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது ஊழியர்கள்  DOT காலத்தில் ஈட்டிய EL மற்றும் HPL விடுப்புகள் BSNL நிறுவனத்திலும் தொடரும் என்று தோழர் குப்தா காலத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.

ITR விதி 10(AA)(i)ன் படி அரசு சேவையில் ஈட்டப்பட்ட விடுப்பிற்கு முழு வரிவிலக்கும்... ITR விதி 10(AA)(i)ன் படி பொதுத்துறையில் ஈட்டப்பட்ட விடுப்பிற்கு 3லட்சம் வரையிலும் விதிவிலக்கு உண்டு.

அதனடிப்படையில் BSNL ஊழியர்கள் ஓய்வு பெறும்போது DOT காலத்தில் ஈட்டிய விடுப்பிற்கு முழு வரிவிலக்கும், BSNL காலத்தில் ஈட்டிய விடுப்பிற்கு  3 லட்சம் வரை வரிவிலக்கும் பெற்று வந்தனர்.

ஆனால் வருமான வரித்துறை ITR விதி 154ன் கீழ் 2020ல் விருப்ப ஓய்வில் சென்ற பல தோழர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக்கடிதத்தில் DOT காலத்தில் ஈட்டிய விடுப்பிற்கு வரி விலக்கு இல்லை என்றும் ஒட்டுமொத்தமாக 3 லட்சம் மட்டுமே வரிவிலக்கு என்றும் தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வரிவிலக்கு முறையை தற்போது வருமானவரித்துறை தலைகீழாக மாற்ற முயற்சி செய்கிறது. இது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும். 

2018ல் ஓய்வு பெற்ற DOT அதிகாரியான முன்னாள் CGM திரு.மார்ஷல் லியோ அவர்களுக்கும் வருமான வரித்துறை விடுப்புச்சம்பளம் சம்பந்தமாக கடிதம் அனுப்பியுள்ளது வேடிக்கையாகவுள்ளது.

எனவே AIBSNLPWA ஓய்வூதியர் நலச்சங்கம் இது சம்பந்தமாக  உடனடியாகத் தலையிடக்கோரி வருமான வரித்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் வருமான வரி தீர்ப்பாயத்தில் 05/02/2019 தேதியில் திரு பாபுலால் பட்டேல் என்பவருக்கு வழங்கப்பட்ட சாதகமான தீர்ப்பையும் AIBSNLPWA சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

பல்லாயிரம் தோழர்களுக்கு வரி விலக்கில் பாதகம் விளைவிக்க முயற்சி செய்யும் வருமான வரித்துறையின் தவறான நடைமுறையை உடனடியாகச் சுட்டிக்காட்டிய ஓய்வூதியர் நலச்சங்கத்திற்கு நமது நன்றிகளும்... வாழ்த்துக்களும். 

BSNL ஊழியர் சங்கங்களும், அதிகாரிகள் சங்கங்களும் இப்பிரச்சினை தீர்விற்கு மேலும் அழுத்தம் கொடுத்திட வேண்டும்.

Tuesday, 9 February 2021

IDA முடக்கம் – NFTE மத்திய சங்க முயற்சி

பொதுத்துறை ஊழியர்களுக்கு  01/10/2020  முதல் 9  மாதங்களுக்கு IDA விலைவாசிப்படியை முடக்கி மத்திய அரசு உத்திரவிட்டிருந்தது. மேற்கண்ட உத்திரவு NON EXECUTIVES ஊழியர்களுக்குப் பொருந்தாது என DPE இலாக்கா COAL AND MINES இலாக்காவிற்கு விளக்கம் அளித்திருந்தது. மேற்கண்ட கருத்தையே உயர்நீதிமன்றத்தில் ASG எனப்படும் ASST SOLICITOR GENERAL அவர்களும் பதிவு செய்திருந்தார். 

எனவே IDA முடக்கம் என்பது அதிகாரிகளுக்கு மட்டும்தான்... ஊழியர்களுக்கு கிடையாது என்பது புலனாகிறது. மேலும் BSNL நிர்வாகம் இது சம்பந்தமாக  DOT மூலமாக DPE இலாக்காவிடம் விளக்கம் கேட்டுள்ளது. எனவே இந்தப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு DPE இலாக்காவிடமிருந்து உரிய விளக்கத்தைப் பெற்றுத்தர நமது மத்திய சங்கம் 09/02/2021 அன்று DOT  கூடுதல் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது. 

மேலும் இது சம்பந்தமாக DIGITAL COMMISSION  MEMBER SERVICES  திரு.B.K.JOG அவர்களை NFTE பொதுச்செயலரும், தலைவரும் நேரடியாகச் சந்தித்து பிரச்சினையை எடுத்துரைத்துள்ளனர். திரு. B.K.JOG அவர்கள் இது சம்பந்தமாக DOT  கூடுதல் செயலருடன் விவாதித்து ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.

 கிளை மாநாடு

தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

இராமநாதபுரம் – இராமேஸ்வரம் – பரமக்குடி

 கிளைகள் இணைப்பு விழா

இராமநாதபுரம் வருவாய் மாவட்டக்கிளை அமைப்பு விழா

-----------------------------------------------

13/02/2021 – சனிக்கிழமை காலை 10 மணி

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

-----------------------------------------------

கூட்டுத்தலைமை

தோழர். சேதுராஜன்  

கிளைத்தலைவர் - பரமக்குடி

தோழர். ஜேம்ஸ் வாலன்ட்ராயன்

  கிளைத்தலைவர் - இராமேஸ்வரம்

தோழர்அப்துல் மூமின்  

கிளைத்தலைவர் - இராமநாதபுரம்

-----------------------------------------------

வரவேற்புரை

தோழர்.  R. இராமமூர்த்தி  கிளைச்செயலர்

-----------------------------------------------

வாழ்த்துரை : தோழர்கள்

. சுபேதார் அலிகான்

NFTE - மாநில அமைப்புச்செயலர்

C. இராமமூர்த்தி

AIBSNLPWA – கிளைச்செயலர்

P. காந்தி

NFTE - முன்னாள் கிளைச்செயலர்

பா. முருகன்

TMTCLU மாவட்டச்செயலர்

பா. லால்பகதூர்

NFTE & TMTCLU மாவட்டத்தலைவர்

M. ஆரோக்கியதாஸ்

சிவகங்கை மாவட்டக்கிளைச்செயலர்

வெ. மாரி

NFTE - மாவட்டச்செயலர்

மற்றும் முன்னணித்தோழர்கள்

 -----------------------------------------------

  • செயல்பாட்டறிக்கை
  • நிதிநிலையறிக்கை
  • தலமட்டப்பிரச்சினைகள்
  • அமைப்பு நிலை
  • BSNL சேவை
  • புதிய நிர்வாகிகள் தேர்வு

-----------------------------------------------

நன்றியுரை

தோழர். A. தமிழரசன்

கிளைச்செயலர் பரமக்குடி

-----------------------------------------------

தோழர்களே... வருக... வருக

அன்புடன் அழைக்கும்...

R. இராமமூர்த்தி  

கிளைச்செயலர் – இராமநாதபுரம்

B. இராஜன் 

கிளைச்செயலர் – இராமேஸ்வரம்

A. தமிழரசன்

கிளைச்செயலர் பரமக்குடி

Monday, 8 February 2021

 ஊழியர்களுக்கான 

GROUP TERM INSURANCE திட்டம்

--------------------------------------

 NFTE தமிழ் மாநிலச்சங்க செய்தி 

அதிகாரிகளுக்கு வழங்கியது போல GROUP TERM INSURANCE   திட்டம் ஊழியர்களுக்கு நாம் கோரி வந்தோம். தேசிய கவுன்சில் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது.  தற்போது கடும் காலதாமதத்திற்கு பின் 29/01/2021 அன்று விருப்பம் கோரப்பட்டு உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. 

 50 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் 20 லட்சம்  காப்பீட்டுத்  தொகைக்கு ஆண்டுக்கு ரூ.3776/= PREMIUM  செலுத்திட வேண்டும். 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ரூ.18172/= PREMIUM  செலுத்திட வேண்டும். LIC  மூலம் செலுத்தும் இந்த திட்டமே  மிக குறைவான PREMIUM ( 1000க்கு ரூ 1.60 மற்றவர்கள் 1000க்கு ரூ.1.88) 

ஓய்வு பெறும் வரை மட்டுமே திட்டம் அமுலாகும். பின்னர் தொடர முடியாது.  தற்போதைய திட்டத்தில் ரூ 105ல் பிடித்தம் ரூ 35. ஒரு வருடத்திற்கு ரூ.420/= ஒரு லட்சத்திற்கு பிடித்தம் செய்யபடுகிறது. 20 லட்சத்திற்கு ரூ. 8400/= செலுத்திட வேண்டும். ஆனால் இந்த திட்டத்தில் ரூ. 3776/= மட்டுமே. 50 வயதுக்கு முன் திட்டத்தில் சேர்ந்து விட்டால் PREMIUM பின்னர் மாறாது. உயராதுவருடம்தோறும் விருப்பம் தர வேண்டும்

திட்ட அமுல் தேதியில் (01-03-2021) இருந்து அமுலாகும்அனைத்து வகை மரணத்திற்கும்  காப்பீட்டுத்தொகை வழங்கப்படும். மாதத்தவணை என்றால் 6% கூடுதல் கட்டணம். ஒரேதவணை யில் பிடித்தம் செய்யப்படும். 

இந்த திட்ட PREMIUM 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசீலனை செய்யப்படும்இதில் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகைக்கு வருமானவரிப் பிடித்தம் கிடையாது. 

திட்டம் சேர கடைசி நாள்   15-02-2021.

விருப்பம் திரும்ப பெற  18-02-2021. 

இந்த  திட்டத்தில் ஊழியர்கள் அனைவரையும் விடாது இணைத்திட மாவட்ட செயலர்கள் முன் முயற்சி  எடுத்திட  வேண்டும். 

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூடுதல் கட்டணம் என கருதாமல் குடும்ப பாதுகாப்பு கருதி இணைய வேண்டும். மருத்துவ பரிசோதனை இல்லை என்பதாலும், திட்ட நாள் (01-03-2021) பயன் என்பதால் ஊழியர்கள் தயக்கமின்றி இணைய வேண்டும். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றால் அதிகாரிகளின் திட்டத்திற்கு மாறலாம். 

எனவே புதிய GROUP TERM INSURANCE திட்டத்திற்கு மாறிட  

தமிழ் மாநில சங்கம் பரிந்துரைக்கிறது.

Saturday, 6 February 2021

மாவட்ட செயற்குழு

 

 AIBSNLPWA

காரைக்குடி மாவட்டச்சங்கம்

மாவட்ட செயற்குழு

 -----------------------------------------------

07-02-2021....ஞாயிறுகாலை 10-30 மணி 

பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி...

  -----------------------------------------------

தலைமைதோழர். P.முருகன் 

 மாவட்டத்தலைவர்

துணைத்தலைமைதோழர். K.குமார்

  -----------------------------------------------

நிகழ்ச்சிநிரல்

கொடியேற்றம்மாநில துணைத்தலைவர்

அஞ்சலிஉரை - தோழர் P.இராமசாமி

தலைமை உரை

துவக்கஉரை - தோழர் R.பூபதி

செயலர் அறிக்கைதோழர்கள்

N. திருநாவுக்கரசு

R.அமலநாதன்

P.பாலுச்சாமி

K.இராமமூர்த்தி

N. நாகேஷ்வரன்

நிதி அறிக்கை...தோழர். S.K.நாகநாதன் 

சிறப்புரைதோழர்கள்

V.மாரி

 NFTE மாவட்டச்செயலர்

 S.வீராச்சாமி

  மதுரை மாவட்டச்செயலர்

                    S.ஜெயச்சந்திரன்                   

  மாநிலதுணைத்தலைவர்  

பொருளாய்வு         

அறிக்கை...

கிளைமாநாடுகள்          

மாவட்ட மாநாடு...

புலனம்...         

மற்றும் பிற பற்றி விவாதம்

அறிக்கை ஏற்பு....

முடிவுகள்

நன்றி உரைதோழர். K.சுந்தரராஜன்

Wednesday, 3 February 2021

 NFTE மத்திய செயற்குழு

NFTE மத்திய செயற்குழு

13/03/2021 & 14/03/2021 – நாக்பூர் – மகராஷ்டிரா

-----------------------------------------------------

ஆய்படு பொருள்

விருப்ப ஓய்விற்குப் பிந்தைய நிலை

ஊழியர் பிரச்சினைகள்

BSNL  புத்தாக்கம்

புதிய பதவி உயர்வுக்கொள்கை

3வது ஊதிய திருத்தம் மற்றும் ஓய்வூதிய திருத்தம்

VRS  ஊழியர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள்

பரிவு அடிப்படை பணிநியமனம்

TT, JE, JTO & JAO இலாக்காப் பதவி உயர்வுகள்

தாதாகோஷ் பவன்

அமைப்பை பலப்படுத்த புதிய செயல் திட்டங்கள்...

 -----------------------------------------------------

செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி...