ஊழியர்களுக்கான
GROUP TERM INSURANCE திட்டம்
--------------------------------------
அதிகாரிகளுக்கு வழங்கியது போல GROUP TERM INSURANCE திட்டம் ஊழியர்களுக்கு நாம் கோரி வந்தோம். தேசிய கவுன்சில் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. தற்போது கடும் காலதாமதத்திற்கு பின் 29/01/2021 அன்று விருப்பம் கோரப்பட்டு உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.
50 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் 20 லட்சம் காப்பீட்டுத் தொகைக்கு ஆண்டுக்கு ரூ.3776/= PREMIUM செலுத்திட வேண்டும். 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ரூ.18172/= PREMIUM செலுத்திட வேண்டும். LIC மூலம் செலுத்தும் இந்த திட்டமே மிக குறைவான PREMIUM ( 1000க்கு ரூ 1.60 மற்றவர்கள் 1000க்கு ரூ.1.88)
ஓய்வு பெறும் வரை மட்டுமே திட்டம் அமுலாகும். பின்னர் தொடர முடியாது. தற்போதைய திட்டத்தில் ரூ 105ல் பிடித்தம் ரூ 35. ஒரு வருடத்திற்கு ரூ.420/= ஒரு லட்சத்திற்கு பிடித்தம் செய்யபடுகிறது. 20 லட்சத்திற்கு ரூ. 8400/= செலுத்திட வேண்டும். ஆனால் இந்த திட்டத்தில் ரூ. 3776/= மட்டுமே. 50 வயதுக்கு முன் திட்டத்தில் சேர்ந்து விட்டால் PREMIUM பின்னர் மாறாது. உயராது. வருடம்தோறும் விருப்பம் தர வேண்டும்.
திட்ட அமுல் தேதியில் (01-03-2021) இருந்து அமுலாகும். அனைத்து வகை மரணத்திற்கும் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும். மாதத்தவணை என்றால் 6% கூடுதல் கட்டணம். ஒரேதவணை யில் பிடித்தம் செய்யப்படும்.
இந்த திட்ட PREMIUM 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசீலனை செய்யப்படும். இதில் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகைக்கு வருமானவரிப் பிடித்தம் கிடையாது.
திட்டம் சேர கடைசி நாள் 15-02-2021.
விருப்பம் திரும்ப பெற 18-02-2021.
இந்த திட்டத்தில் ஊழியர்கள் அனைவரையும் விடாது இணைத்திட மாவட்ட செயலர்கள் முன் முயற்சி எடுத்திட வேண்டும்.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூடுதல் கட்டணம் என கருதாமல் குடும்ப பாதுகாப்பு கருதி இணைய வேண்டும். மருத்துவ பரிசோதனை இல்லை என்பதாலும், திட்ட நாள் (01-03-2021) பயன் என்பதால் ஊழியர்கள் தயக்கமின்றி இணைய வேண்டும். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றால் அதிகாரிகளின் திட்டத்திற்கு மாறலாம்.
எனவே புதிய GROUP TERM INSURANCE திட்டத்திற்கு மாறிட
தமிழ் மாநில சங்கம் பரிந்துரைக்கிறது.
No comments:
Post a Comment