Wednesday, 10 February 2021

விடுப்புச்சம்பளமும்...

 வரிவிலக்கும்...

BSNL நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது ஊழியர்கள்  DOT காலத்தில் ஈட்டிய EL மற்றும் HPL விடுப்புகள் BSNL நிறுவனத்திலும் தொடரும் என்று தோழர் குப்தா காலத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.

ITR விதி 10(AA)(i)ன் படி அரசு சேவையில் ஈட்டப்பட்ட விடுப்பிற்கு முழு வரிவிலக்கும்... ITR விதி 10(AA)(i)ன் படி பொதுத்துறையில் ஈட்டப்பட்ட விடுப்பிற்கு 3லட்சம் வரையிலும் விதிவிலக்கு உண்டு.

அதனடிப்படையில் BSNL ஊழியர்கள் ஓய்வு பெறும்போது DOT காலத்தில் ஈட்டிய விடுப்பிற்கு முழு வரிவிலக்கும், BSNL காலத்தில் ஈட்டிய விடுப்பிற்கு  3 லட்சம் வரை வரிவிலக்கும் பெற்று வந்தனர்.

ஆனால் வருமான வரித்துறை ITR விதி 154ன் கீழ் 2020ல் விருப்ப ஓய்வில் சென்ற பல தோழர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக்கடிதத்தில் DOT காலத்தில் ஈட்டிய விடுப்பிற்கு வரி விலக்கு இல்லை என்றும் ஒட்டுமொத்தமாக 3 லட்சம் மட்டுமே வரிவிலக்கு என்றும் தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வரிவிலக்கு முறையை தற்போது வருமானவரித்துறை தலைகீழாக மாற்ற முயற்சி செய்கிறது. இது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும். 

2018ல் ஓய்வு பெற்ற DOT அதிகாரியான முன்னாள் CGM திரு.மார்ஷல் லியோ அவர்களுக்கும் வருமான வரித்துறை விடுப்புச்சம்பளம் சம்பந்தமாக கடிதம் அனுப்பியுள்ளது வேடிக்கையாகவுள்ளது.

எனவே AIBSNLPWA ஓய்வூதியர் நலச்சங்கம் இது சம்பந்தமாக  உடனடியாகத் தலையிடக்கோரி வருமான வரித்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் வருமான வரி தீர்ப்பாயத்தில் 05/02/2019 தேதியில் திரு பாபுலால் பட்டேல் என்பவருக்கு வழங்கப்பட்ட சாதகமான தீர்ப்பையும் AIBSNLPWA சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

பல்லாயிரம் தோழர்களுக்கு வரி விலக்கில் பாதகம் விளைவிக்க முயற்சி செய்யும் வருமான வரித்துறையின் தவறான நடைமுறையை உடனடியாகச் சுட்டிக்காட்டிய ஓய்வூதியர் நலச்சங்கத்திற்கு நமது நன்றிகளும்... வாழ்த்துக்களும். 

BSNL ஊழியர் சங்கங்களும், அதிகாரிகள் சங்கங்களும் இப்பிரச்சினை தீர்விற்கு மேலும் அழுத்தம் கொடுத்திட வேண்டும்.

No comments:

Post a Comment