IDA முடக்கம்
– NFTE மத்திய சங்க முயற்சி
பொதுத்துறை ஊழியர்களுக்கு 01/10/2020 முதல் 9 மாதங்களுக்கு IDA விலைவாசிப்படியை முடக்கி மத்திய அரசு உத்திரவிட்டிருந்தது. மேற்கண்ட உத்திரவு NON EXECUTIVES ஊழியர்களுக்குப் பொருந்தாது என DPE இலாக்கா COAL AND MINES இலாக்காவிற்கு விளக்கம் அளித்திருந்தது. மேற்கண்ட கருத்தையே உயர்நீதிமன்றத்தில் ASG எனப்படும் ASST SOLICITOR GENERAL அவர்களும் பதிவு செய்திருந்தார்.
எனவே IDA முடக்கம் என்பது அதிகாரிகளுக்கு மட்டும்தான்... ஊழியர்களுக்கு கிடையாது என்பது புலனாகிறது. மேலும் BSNL நிர்வாகம் இது சம்பந்தமாக DOT மூலமாக DPE இலாக்காவிடம் விளக்கம் கேட்டுள்ளது. எனவே இந்தப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு DPE இலாக்காவிடமிருந்து உரிய விளக்கத்தைப் பெற்றுத்தர நமது மத்திய சங்கம் 09/02/2021 அன்று DOT கூடுதல் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும் இது சம்பந்தமாக DIGITAL COMMISSION MEMBER SERVICES திரு.B.K.JOG அவர்களை NFTE பொதுச்செயலரும், தலைவரும் நேரடியாகச் சந்தித்து பிரச்சினையை எடுத்துரைத்துள்ளனர். திரு. B.K.JOG அவர்கள் இது சம்பந்தமாக DOT கூடுதல் செயலருடன் விவாதித்து ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment